தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்! Dengue அறிகுறிகள் என்னென்ன?

  • சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் அதன் அறிகுறிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் இதுவரை 16,577 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 9 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகிவிட்டனர். இந்த நிலையில் தமிழகத்தில் தினமும் நூற்றுக்கணக்கானோருக்கு டெங்கு பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த 17 ஆம் தேதி ஒரே நாளில் 1,320 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்ளில் 244 பேருக்கு டெங்கு பாசிட்டிவ் என வந்துள்ளது.

    Advertisement

    சென்னையில் மட்டும் 156 பேருக்கு காய்ச்சல் பரவியுள்ளது. அதில் 87 பேருக்கு டெங்கு உறுதியாகியுள்ளது. உயிரிழப்பை ஏற்படுத்தும் டெங்கு காய்ச்சலை தடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

    டெங்கு காய்ச்சல் ஏடீஸ் எனும் கொசுவால் ஏற்படுகிறது. இது தேங்கிய நீரில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். எனவே வீட்டை சுற்றி குப்பை கூலங்கல், தண்ணீர் தேங்க வழியில்லாதவகையில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல் வேண்டும்.

    டெங்கு முன்னெச்சரிக்கைகள் ஒரு புறம் இருக்க, டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    104 டிகிரி பாரன்ஹீட் காய்ச்சல்

    Advertisement

    கை, முகம், கால் என உடலில் உள்ள தோல்களில் சிவப்பு நிறத்தில் தடிமனாக இருக்கும்.

    சிவப்பாக இருக்கும் இடங்களில் அரிக்கும்.

    கண்களின் பின்புறத்தில் அதீத வலி இருக்கும்.

    குமட்டல், வாந்தி

    மூட்டுகள், தசைகள், எலும்புகளில் வலி

    அதீத அறிகுறிகள்

    வயிற்று வலி

    அடிக்கடி வாந்தி

    மலத்தில் ரத்தம்

    மூக்கிலும் பல் ஈறுகளிலும் ரத்தம் வழிதல்

    அதீத சோர்வு

    எரிச்சல்

    டெங்கு தொற்று நோயா?

    டெங்கு தொற்றும் நோய் அல்ல. கைக்குலுக்குவதாலோ டெங்கு பாதித்தவரை தொடுவதாலோ இந்த நோய் பிறருக்கு பரவாது. அதே வேளையில் கர்ப்பிணிக்கு டெங்கு வந்தால், குழந்தைக்கும் பரவும்.

    Advertisement

    சிகிச்சை என்ன?

    டெங்கு காய்ச்சலுக்கென பிரத்யேக சிகிச்சைகள் ஏதும் இல்லை. ஆன்டிபயாடிக்குகள், வலி நிவாரணி, காய்ச்சலுக்கான மருந்து உள்ளிட்டவை கொடுக்கப்பட்டு உங்களுக்கு தினமும் ரத்த பரிசோதனை செய்யப்பட்டு அதில் ரத்த தட்டணுக்களின் அளவுகள் எப்படி இருக்கிறது என பார்ப்பார்கள். தண்ணீர் அதிகம் குடிக்குமாறு அறிவுறுத்தப்படுவார்கள். ஒரு நாளைக்கு குடிக்கும் நீராகத்தின் அளவை போல் சிறுநீர் வெளியேற்ற வேண்டும்.

    English Summary

    What are the symptoms of Dengue? The virus is increasingly spread in Tamil nadu. How to take precautionary measures?