சென்னை: இந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் கையில் கருப்பு நிறத்தில் கட்டியிருப்பது வாட்ச் இல்லையாம் அது என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த கருவி என்ன என்பது குறித்து சுவாரஸ்ய பின்னணியை காணலாம்.
தமிழக சட்டசபைக்கு வரும் முதல்வர் விஜய்யின் உடை, அதன் நிறம் குறித்து டிரென்டாகி வருகிறது. அது போல் அமைச்சர்களின் உடை, அவர்கள் அணிந்திருக்கும் ஆபரணங்கள் வரை பலரது கவனத்தையும் ஈர்ப்பது வழக்கமான ஒன்று.
அந்த வகையில் அமைச்சர் ரமேஷின் வலது கையில் அணிந்திருக்கும் கருப்பு நிற பட்டை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அது என்ன என்பதை பார்க்கலாம். தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது அதில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. அவைக்குள் செல்போனை பார்த்து அமைச்சர் ஷாஜகான் படித்த போது சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அவரை கடிந்து கொண்டார். மேலும் செல்போனை அவைக்குள் பயன்படுத்த அனுமதி இல்லை என்பதையும் அவர் அறிவித்தார். இதையடுத்து அமைச்சர் ஷாஜகான், தனது செல்போனை எடுத்து கீழே வைத்தார். பின்னர் செல்போன் பயன்படுத்துவதை எம்எல்ஏக்கள் தவிர்த்து வருகிறார்கள். அப்படியே ஏதாவது அவசரமாக போன் செய்ய வேண்டுமானாலும் வெளியே சென்று பேசிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், அவரது துறை சார்ந்த கேள்விகளுக்கும் பதில் அளித்தார். அப்போது அவரது வலது கையில் கருப்பு நிறத்தில் வாட்ச் போன்று ஒன்றை கட்டியிருந்தார். அது கடிகாரம் இல்லையாம். ஆனால் அது என்ன என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது. சரி ஸ்மார்ட் வாட்ச்சாக இருக்கலாம் என சொல்லப்பட்டது. ஆனால் அதுவும் இல்லையாம். அது ஒரு ஃபிட்னஸ் பேண்ட். உடலையும் ஆரோக்கியத்தையும் கண்காணிக்க இந்த சாதனங்களை பலர் பயன்படுத்தி வருகிறார்கள். உடலின் இதயத் துடிப்பு, மன அழுத்த அளவை கண்காணிக்கவும் இந்த கருவி உதவுகிறது. அது போல் எவ்வளவு தூரம் நடத்திருக்கிறோம், எத்தனை கலோரிகளை குறைத்துள்ளோம் என்பதையும் அறியலாம். இந்த ஸ்மார்ட் பேண்டுடன் செல்போனை ப்ளூடூத் மூலம் இணைத்துவிட்டால் போன் பயன்படுத்த முடியாத போது போனுக்கு வரும் மெசேஜ்களை பார்க்கலாம். யார் போன் செய்திருக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.