புழலில் அன்பில் மகேஷுக்கு என்னென்ன வசதிகள் தெரியுமா? எண்ணெய் இல்லாத சாப்பாடு, 3 நாள் சிக்கன் குழம்பு

  • சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எண்ணெய் இல்லாத உணவு வழங்கப்பட்டு வருகிறது. சாதம், ரசம், வேகவைத்த காய்கறிகள் என உணவு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு சிறையில் வேறு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன தெரியுமா? அதை பற்றின தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

    Advertisement

    அன்பில் மகேஷ் பொய்யாமொழி புழல் மத்திய சிறையில் முதல் வகுப்பு பிரிவில் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது அறையில் கட்டில், மெத்தை, நாற்காலி, மேஜை, மின் விசிறி உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

    Advertisement

    புழல் - முதல் வகுப்பு கைதி

    முதல் வகுப்பு கைதி என்பதால் அறைக்குள்ளேயே கழிப்பறை வசதியும் உள்ளது. நீதிமன்ற காவலில் இருப்பதால் வழக்கமான உடைகளை அணிந்துகொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் சாதாரண உடை அணிந்தே சிறையில் உலா வருகிறார்.

    ஆனால், அறையில் ஏசி வசதி இல்லாததால் இரவில் தூங்க முடியாமல் சிரமப்படுவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஃபேன் வசதி இருந்தாலும் அவருக்கு ஏசி வசதி சிறையில் வழங்கப்படவில்லை.. மேலும், புழல் பகுதியில் கொசு தொல்லை அதிகமாக இருப்பதால் தூங்குவதற்கு மேலும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    Advertisement

    எண்ணெய் இல்லாத உணவு

    அதேபோல அன்பில் மகேஷின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவருக்கு சிறப்பு உணவு வழங்க அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளார். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி டாக்டர்களின் அறிவுரைகளைப் பின்பற்றி உணவு வழங்கப்படுகிறது. எண்ணெய் இல்லாத உணவு, சாதம், ரசம், வேகவைத்த காய்கறிகள் ஆகியவை அவருக்குக் கொடுக்கப்படுகின்றன.

    முதல் வகுப்பு கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு முறையின்படி, வாரத்தில் 3 நாட்கள் கோழிக்கறி குழம்புடன் உணவு வழங்கப்படும். இரவு உணவாக சப்பாத்தி, கஞ்சி ஆகியவை தரப்படுகின்றன. உடல்நிலையைக் கருத்தில் கொண்டு உணவு வழங்குவதுடன், சிறையில் அவருக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

    Advertisement
    அன்பில் மகேஷ் மட்டுமல்ல.. திமுகவின் மொத்த தூண்களையும் தூக்கும் விஜய்.. அடித்து ஆட முடிவு?

    வாக்கிங் போன அன்பில் மகேஷ்

    சிறையிலுள்ள நேரத்தில் பொழுதுபோக்குக்காக செய்தித்தாள்கள், புத்தகங்கள் படிக்கவும், அங்குள்ள நூலகத்தைப் பயன்படுத்தவும் அன்பில் மகேஷுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று அவர் சிறையில் நடைப்பயிற்சியும் மேற்கொண்டுள்ளார்.

    அன்பில் மகேஷ் முன்னாள் அமைச்சர் என்பதாலும், முதல் வகுப்பில் இருப்பதால் அவரது பாதுகாப்பு கருதி மற்ற கைதிகள் அவரைச் சந்திக்க இயலாது. அதேபோல, முதல் வகுப்பிலே இருந்தாலும் எக்காரணத்தைக் கொண்டும் வெளியில் இருந்து கொண்டு வரப்படும் உணவை அவருக்கு வழங்க முடியாது என சிறை விதிகள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    அதேபோல சிறை விதிகளின்படி அன்பில் மகேஷை அவரது குடும்பத்தினர், வழக்கறிஞர்கள் மற்றும் நண்பர்கள் வாரத்தில் 2 முறை சந்திக்க அனுமதி வழங்கப்படும். சிறையில் அவருக்குப் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும், கொசு தொல்லையால் இரவில் தூங்க முடியாமல் சிரமப்படுவதாகவும், இதனால் அவருக்கு கொசு விரட்டி அளிக்கப்பட்டுள்ளதாகவும் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சிறையில் உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஜாமீன் கிடைக்குமா? இன்று சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை!

    இன்று ஜாமீன் கிடைக்குமா

    இதனிடையே, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு, சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

    Advertisement

    ஏற்கெனவே சென்னை ஹைகோர்ட், முன்ஜாமீன் வழங்க மறுத்த நிலையில், தற்போது ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதால் அவருக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல, அவரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

    English Summary

    What Facilities Does Anbil Mahesh Get in Puzhal Jail? Oil-Free Food and Chicken Curry 3 Days a Week