வீட்டில் மயங்கி விழுந்த தேவா.. கடைசி நிமிடங்களில் நடந்த சோகம்.. உயிர் பிரிந்தது எப்படி? உருக்கம்

  • சென்னை: இசையமைப்பாளர் 'தேனிசை தென்றல்' தேவா இன்று காலையில் மாரடைப்பால் திடீரென்று இறந்தார். அவருககு வயது 75. அவரது திடீர் மரணம் ரசிகர்கர் மட்டுமின்றி மொத்த தமிழ் திரையுலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இதற்கிடையே தேவா எப்படி இறந்தார்? அவரது கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது? என்பது பற்றி சிகிச்சையளித்த டாக்டர்கள் உருக்கமான தகவல்களை கூறி உள்ளனர்.

    Advertisement

    இன்று காலையில் திடீரென்று உடல்நலக்குறைவால் இசையமைப்பாளர் தேவா பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் உடனடியாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உயிரை காப்பாற்றிய போராடிய டாக்டர்கள் உருக்கமான தகவலை கூறியுள்ளனர்.

    Advertisement

    இதுபற்றி தேவாவிற்கு சிகிச்சையளித்த டாக்டர் சிவதர்ஷினி கூறியதாவது: ''காலை 9.25 மணிக்கு தேவா தனது வீட்டில் மயக்கமடைந்துள்ளார். அவரது குடும்பத்தினர் உடனடியாக Basic Life Support வழங்கி மருத்துவமனைக்கு கூட்டி வந்தனர். இங்கு வரும்போதே அவருக்கு நாடித்துடிப்பு, இதயத்துடிப்பு இல்லை. அப்படியான நபர்களுக்கு Advanced Cardio Clive Support வழங்கினோம். ஒரு மணிநேரம் முதல் ஒன்றரை மணிநேரம் வரை சிகிச்சை அளித்தோம். ஆனால் திரும்ப இதயத்துடிப்பு வரவில்லை.

    தேவா சாருக்கு இதற்கு முன்பு மாரடைப்பு வந்துள்ளது. இப்போது வந்த மாரடைப்பு தீவிரமாக இருந்துள்ளது. வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு வருவதற்கு ஆன நேரம் உள்பட சில விஷயங்கள் அவரது உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பை குறைத்துள்ளது.

    Advertisement

    இதயத்தின் முக்கிய ரத்த குழாயில் பெரிய அடைப்பு இருக்கும்போது இதயத்தின் முக்கிய பகுதிகளுக்கு ரத்தம் செல்லாது. அப்போது இதயம் துடிப்பது நின்றுவிடும். இதுதான் Cardiac Arrest என்பார்கள். மருத்துவமனைக்குள் இப்படி நடந்து இருந்தால் உடனடியாக சிகிச்சை வழங்க முடியும். இதயத்துக்கு மீண்டும் ரத்த ஓட்டம் கொண்டு செல்வதற்கான வாய்ப்பு இருக்கும். ஆனால் தேவா சாருக்கு ஏற்கனவே இருந்த இதய பிரச்சனை உள்ளிட்டவற்றால் ஒன்றரை மணிநேரம் முயன்றும் அவருக்கு இதயத்துடிப்பை மீண்டும் கொண்டு வர முடியவில்லை'' என்றார்.

    இதுபற்றி தேவாவிற்கு சிகிச்சையளித்த டாக்டர் ஜோதிர்மய தாஸ் கூறுகையில், ''தேவா வயதில் முதியவராக அவசர சிகிச்சைக்காக வந்தார். ஏற்கனவே அவர் பைபாஸ் சிகிச்சை செய்தவர். அவர் வந்தபோது நாடித்துடிப்பு, இதயத்துடிப்பு இல்லை. சிபிஆர் சிகிச்சை வழங்கப்பட்டது. 45 நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரம் வரை சிபிஆர் வழங்கப்பட்டது. துடிப்பு இருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம். ஆனால் துடிப்பு வரவில்லை. இதயத்துடிப்பை மீண்டும் கொண்டு வர தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம். ஆனால் நடக்கவில்லை'' என்றார்.

    English Summary

    Music composer ‘Thenisai Thendral' Deva passed away suddenly this morning due to a heart attack. He was 75 years old. His sudden demise has left not only his fans but the entire Tamil film industry in deep sorrow. Meanwhile, the doctors who treated him have shared poignant details regarding how he passed away and what transpired during his final moments.