சென்னை: "நான் போயிட்டா என் பொண்ணு அனாதையாயிடுவா.. அதான் அவளையும் என்னோடவே கூட்டிட்டு போறேன்" என்று இந்த வரிகளை எழுதி கிஷோர் எழுதி வைத்திருந்ததை கண்டுபோலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர்.. அப்படியானால் மகளும் இறந்துவிட்டாரா? என்ற சந்தேகத்தில் விசாரணையை துரித்தப்படுத்தினர்.. அப்போதுதான் அந்த பயங்கரம் வெளிவந்து, மொத்த பேரையும் பதற வைத்துள்ளது.. அத்துடன் நிதி நெருக்கடி எந்த அளவுக்கு ஒரு மனிதனின் சிந்தனையை முடக்கி, கொடூரமான முடிவை எடுக்க வைக்கும் என்பதற்கும் இந்த சம்பவமே சாட்சியாகியுள்ளது...!!
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம் சவர்குண்ட்லா பகுதியை சேர்ந்தவர் 40 வயதான கிஷோர் தனாக். கட்டுமானத் துறையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார்.. இவரது மனைவி பெயர் மஞ்சுபென்.. இந்த தம்பதிக்கு 5 வயதில் ஹிமான்ஷி என்ற பெண் குழந்தை இருக்கிறாள்.
பிசினஸை பெருக்குவதற்காகவும், குடும்ப தேவைகளுக்காகவும், தனிநபர் கடன் வாங்கி முதலீடு செய்திருந்தார் கிஷோர்.. ஆனால், பிசினஸில் பார்ட்னர்களாக இருந்தவர்கள், கிஷோரிடம் உண்மையாக நடந்து கொள்ளவில்லை.. தரவேண்டிய ரூ. 7.25 லட்சம் பணத்தையும் நீண்ட நாட்களாகவே தராமல் இருந்துள்ளனர்.. இதனால் வாங்கிய கடனை அடைக்க முடியாமல், வட்டி கட்ட முடியாமல் தினந்தோறும் மன உளைச்சலுக்கு ஆளானார் கிஷோர்.. கடந்த 14ம் தேதி, கிஷோரின் மனைவி மஞ்சுபென் தனது அம்மா வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது வீட்டில் கிஷோரும் 5 வயது மகள் ஹிமான்ஷியும் மட்டும் இருந்துள்ளனர்... அம்மா வீட்டுக்கு போன மஞ்சுபெண், கிஷோருக்கு போன் செய்து கொண்டேயிருந்தார்.. ஆனால், போன் எடுக்கவில்லை,.. இதனால் சந்தேகமடைந்த மஞ்சுபென், செப்டம்பர் 17 புதன்கிழமை சாயங்காலம் தனது சகோதரரை வீட்டிற்குச் சென்று பார்க்க சொல்லியிருக்கிறார்... அதன்படியே அவரும் சென்று பார்த்தபோது, கதவு உட்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.. இதனால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றால், ஃபேனில் கிஷோர் சடலமாகத் தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு அலறி துடித்தார்.. இதுகுறித்து தகவலறிந்து போலீசார் விரைந்து வந்தனர்.. அந்த வீடு முழுவதையும் ஆய்வு செய்தனர்.. அங்கே அறையில் கிடந்த காட்சிகளை பார்த்து, போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.. காரணம் அறை முழுவதும், கலர் கலர் பலூன்கள், கேன்டில்கள் என பிறந்தநாள் விழா போல அலங்காரமாக கிடந்தது. சாமி சிலைகளை வைத்து சிறப்புப் பூஜைகளும் நடத்தப்பட்டிருந்தன.. ஆனால், அன்றைய தினம் குழந்தை ஹிமான்ஷிக்கு பிறந்தநாளும் இல்லை.. பிறகு எதற்காக குழந்தைக்காக இப்படி அறை முழுவதும் அலங்காரம் செய்திருக்க வேண்டும் என்று போலீசார் குழம்பினார்கள்.. அப்போதுதான் குழந்தை ஹிமான்ஷி எங்கே என்று தேடினார்கள்.. வீடு முழுக்க அலசிய நிலையில், ஃபிரிட்ஜைத் திறந்து பார்த்தபோது, குழந்தை அதில் சடலமாக கிடப்பதை கண்டு மேலும் அதிர்ந்து போனார்கள்.. சடலமாக கிடந்த அந்த ஹிமான்ஷிக்கு வெள்ளை நிறத்தில் புதிய ஆடை அணிவிக்கப்பட்டிருந்தது.. தலையில் புதிய துப்பாட்டா போர்த்தப்பட்டிருந்தது.. உதட்டில் துளசி இலை வைத்து அலங்கரிக்கப்பட்டிருந்தது.. மென்மையான குஷன் தலையணைகள், ஏராளமான சாக்லேட்டுகளுக்கு நடுவே குழந்தையின் சடலம் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. ஃபிரிட்ஜின் வெளிப்புறத்தில் கைகளால் "HAPPY BIRTHDAY HIMANSHI" என்று கிஷோர் தன்னுடைய கைகளால் ஒரு துண்டு பேப்பரில் எழுதி ஒட்டி வைத்திருந்தார். குழந்தையை தன்னுடைய கையாலேயே வாயை அமுக்கிக் கொன்று ஃபிரிட்ஜில் அடைத்துவிட்டு, அதன்பிறகே கிஷோர் தூக்கில் தொங்கியது விசாரணையில் தெரியவந்தது. சம்பவ இடத்தில் கிஷோர் எழுதி வைத்த 3 தற்கொலை கடிதங்களையும் போலீசார் கைப்பற்றினர். அதில் முதலாவது கடிதத்தில் தொழிலில் தனக்கு வர வேண்டிய ரூ. 7.25 லட்சம் பணம் வராததால் ஏற்பட்ட கடன் சுமை மற்றும் மீள முடியாத நிதி நெருக்கடியைப் பற்றி விரிவாக எழுதியிருந்தார். 2வது கடிதத்தில், தான் இறந்துவிட்டால் தனது ஒரே மகள் அனாதையாக நின்று கஷ்டப்படக் கூடாது என்பதால் அவளையும் தன்னோடு அழைத்துச் செல்வதாக எழுதியிருந்தார். 3வது கடிதத்தில் குடும்பத்தினரிடம் தனது இந்த முடிவுக்கு மன்னிப்பு கேட்டிருந்தார்.. அத்துடன், குழந்தையின் உடல் ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டுள்ளது என்றும் வெளிப்படையாகவே அதில் குறிப்பிட்டிருந்தார். இதையெல்லாம் கண்டு போலீசார் வெலவெலத்து போய்விட்டனர்.. இறுதியில் இச்சம்பவம் தொடர்பாக பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 103(1)-ன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் கிஷோருக்குக் கடன் கொடுத்தவர்கள் யாராவது மிரட்டல் விடுத்தார்களா, பாக்கி பணத்தை தராமல் ஏமாற்றியவர்கள் யார் யார்? என்றெல்லாம் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.. பண நெருக்கடி ஒரு குடும்பத்தையே பலிவாங்கியுள்ள இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடன் சுமை, பண நெருக்கடி போன்றவை ஒரு குடும்பத்தை எந்த அளவுக்கு மோசமான முடிவை நோக்கித் தள்ளியிருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம். ஆனால், பெரியவர்கள் எதிர்கொண்ட பிரச்சினையில், உலகமே அறியாத 5 வயது பிஞ்சு குழந்தையும் அநியாயமாக சிக்கி உயிரிழந்ததுதான் மிகப்பெரிய துயரம்...!!பிசினஸ் பார்ட்னர்கள்
ஃபேனில் கிஷோர்
கலர் கலர் பலூன்கள்
HAPPY BIRTHDAY HIMANSHI
மொத்தம் 3 கடிதங்கள்
உலகம் அறியாத 5 வயது குழந்தை