கான்பூர்: டெயிலர் கணவர் பலமுறை அட்வைஸ் செய்தும் மனைவி கேட்கவில்லையாம்.. உறவினர்கள் சொல்லியும் கேட்கவில்லையாம்.. போலீஸார் சொல்லியும் கேட்கவில்லையாம்.. கடைசியில் மனைவி செய்த காரியத்தால் காசியாபாத் கதிகலங்கி போய்விட்டது.. சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் திருப்பம் என்ன? போலீஸ் விசாரணையில் வெளிவந்த தகவல்கள் என்ன? இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் உள்ள கோடா காலனியின் வந்தனா விஹார் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் அஞ்சுல்.. 35 வயதாகிறது. இவருடைய மனைவி நிஷாவுக்கு 30 வயது. இவர்கள் இருவரும் காதலித்து, கடந்த 2015ல் திருமணம் செய்து கொண்டார்கள்.. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். குழந்தைகள் 2 பேருமே சொந்த ஊரில் பாட்டியுடன் வசித்து வருகிறார்கள்.
அஞ்சுலும் நிஷாவும் நொய்டாவில் உள்ள ஒரே தையல் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்களுடன் நிஷாவின் உறவினரான பப்பு என்ற கங்கா பகத்தும் இவர்களுடனேயே வசித்து வருகிறார்.. 35 வயதான பப்புவுக்கும் நிஷாவுக்கும் இடையே கடந்த 2 வருடங்களாகத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.. இதுபற்றி அஞ்சுலுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மனைவிக்கும் பப்புவுக்கும் இடையேயான உறவு குறித்து அவர் குடும்பத்தினரிடமும் பலமுறை புகார் சொல்லியிருககிறார்.. மனைவியையும், பப்புவையும் கண்டித்து அறிவுறுத்தியும் வந்துள்ளார்.. ஆனால், இருவருமே அவரது பேச்சை மதிக்கவில்லை என தெரிகிறது. இதனால் கொந்தளித்து போன அஞ்சுலின் சகோதரி போலீசில் இருவர் மீதும் புகார் தந்துவிட்டார்.. குடும்பத்துக்குள் இருந்த பிரச்சினையை வெளியே தெரியாமல் தீர்த்துவைக்க பலவிதமான முயற்சிகளை போலீசாரும் செய்துள்ளனர்.. .. ஆனால், இந்தப் பிரச்சனை முடிவுக்கு வரவில்லை.. ஆளுக்கு ஒருபக்கம் தங்களை பிரித்து விட முயல்வதாக நிஷாவும் பப்புவும் நினைத்துள்ளனர்.. திருமணம் செய்துகொண்டு ஜாலியாக வாழ ஆசைப்பட்ட நேரத்தில், கணவர் அஞ்சுல் தடையாக இருப்பதால் அவரை கொல்ல முடிவெடுத்தார் நிஷா.. இதற்காக அஞ்சுலை கொலை செய்வது குறித்து பப்புவிடமும் விஷயத்தை சொல்லி உள்ளார். பிறகு எப்படி கொலை செய்வது என்று ஒரு வாரமாகவே திட்டமிட்டு வந்துள்ளார்.. இறுதியில், சொந்த ஊரிலிருந்து நாட்டுத் துப்பாக்கியையும் தோட்டாக்களையும் பப்புவை வாங்கி வர சொல்லி உள்ளார்.. அவற்றை வீட்டின் அறையிலேயே மறைத்தும் வைத்துள்ளார்.. அக்டோபர் 10-ம் தேதி அஞ்சுல் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அவருக்கு 2 நாட்கள் விடுமுறை இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், நிஷா வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார்.. அன்று மதியம் சுமார் 1 மணியளவில் பப்பு மட்டும் வீட்டுக்கு வந்துள்ளார். சாப்பிடுவதற்காக வந்த பப்பு, மதிய உணவை முடித்துவிட்டு, நேராக அறைக்குள் சென்று, துப்பாக்கியை எடுத்து வந்து அஞ்சுலை நோக்கி 2 முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டார்.. இதில் அஞ்சுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.. கொலை செய்துவிட்டு, உடனே நிஷாவுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லியிருக்கிறார் பப்பு.. இதனிடையே அஞ்சுலின் உடலை கண்டு அலறிய சகோதரி, போலீசுக்கு சென்று இதுகுறித்து புகார் தந்தார்.. அவர் தந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். இறுதியில் நிஷாவையும் பப்புவையும் கைது செய்தனர். அதாவது சம்பவம் நடந்த சுமார் 12 மணி நேரத்துக்குள் 2 பேரையுமே கைது செய்து விட்டனர்.. விசாரணையும் மேற்கொண்டனர். இரிதல், கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சட்டவிரோத .315 ரக நாட்டுத் துப்பாக்கியையும் போலீசார் பப்புவிடமிருந்து பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கில் இந்திய நியாயச் சட்டத்தின் 103-வது பிரிவின் கீழ் கொலைக் குற்றச்சாட்டும், ஆயுதச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.. கணவரைக் கொலை செய்வதற்காக ஒரு வாரத்துக்கு முன்பேயே திட்டமிட்ட மனைவி, இப்போது ஜெயிலில் உள்ளார்.. பப்புவுக்கும் திருமணமாகிவிட்டது.. ஆனால் மனைவி இறந்துவிட்டார்.. இதனால் 2வது கல்யாணமும் செய்து கொண்டுள்ளார்.. அந்த இரண்டாவது மனைவி சொந்த ஊரில் வசித்து வருகிறாராம்.. அதுமட்டுமல்ல, கணவரை கொன்ற நாளில், பப்புவுக்கு பலமுறை போனை செய்து, அப்டேட் என்ன என்று கேட்டு கொண்டேயிருந்தாராம் நிஷா.. இவர்கள் இருவரும் அன்றைய தினம் அடிக்கடி போனில் பேசியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.. பப்புவிடம் விசாரணை முடிந்துள்ள நிலையில், நிஷாவிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்...!!கள்ளக்காதல் ஜோடி
லஞ்சுக்கு வீட்டுக்கு வந்தபோது..
நிஷா பப்பு கைது
2 மனைவிகள்