அக்கா தூங்கிய நள்ளிரவு நேரம்.. 12 வயது சிறுவனை மிருகமாக்கிய அந்த 2 கெட்ட பழக்கங்கள்

  • சென்னை: செல்போனில் ஆபாச படம் பார்த்த வெறி... கூடவே மண்டைக்கேறிய மது போதை.. இந்த இரண்டு கெட்ட பழக்கங்களும் சேர்ந்து ஒரு 12 வயது சிறுவனை மிருகமாகவே மாற்றிவிட்டது.. தன்னுடைய சொந்த அக்காவின் 9 மாத பச்சிளம் குழந்தையை நள்ளிரவில் தூக்கி சென்று சீரழித்து ஒட்டுமொத்த உத்தரபிரதேசத்தையே அதிர விட்டுள்ளான்.

    Advertisement

    உத்தரப் பிரதேசம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள குல்ரிஹா காவல் எல்லைக்குட்பட்ட கிராமம் ஒன்றில் தான் இந்த நெஞ்சை பதறவைக்கும் விபரீதம் நடந்துள்ளது.

    Advertisement

    அங்குள்ள ஒரு வீட்டில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒரு தாய் தன்னுடைய 9 மாத பெண் குழந்தையோடு தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 2 மணி இருக்கும்... திடீரென விழித்து பார்த்த அந்த பெண்ணுக்கு தூக்கி வாரிப்போட்டது. பக்கத்தில் படுத்திருந்த பச்சிளம் குழந்தையைக் காணவில்லை.

    12 வயது தாய்மாமா

    பதறிப்போன பெற்றோர் அலறியடித்துக் கொண்டு, நள்ளிரவிலும் விடிய விடிய கிராமம் முழுக்க தேடி அலைந்தனர். ஆனால் குழந்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. விடிந்தும் விடியாத அதிகாலை நேரத்தில், அந்த கிராமத்து மக்கள் வீட்டின் அருகிலுள்ள ஒரு விவசாய நிலத்தின் பக்கம் சென்றுள்ளனர். அங்குள்ள ஒரு தகரக் கொட்டகைக்குள் இருந்து மெலிதான அழுகை சத்தம் கேட்டுள்ளது.

    Advertisement

    உள்ளே சென்று பார்த்த பார்த்தால், அந்த 9 மாத குழந்தை ஆடைகளில் ரத்த கறைகளோடும், உடம்பெல்லாம் கடுமையான காயங்களோடும் மயங்கி கிடந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் உடனடியாக குல்ரிஹா போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், குழந்தையை மீட்டு கோரக்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    9 மாத குழந்தை அழுகை

    இந்த விவகாரத்தில் போலீசார் உடனடியாக விசாரணையை கையிலெடுத்தனர்.. மேலும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.. இதைத்தவிர அந்த பகுதியில் சிலரிடம் விசாரணையும் நடத்தினர். அதில், குழந்தையைக் கடத்தியது வேறு யாரும் இல்லை, சொந்த தாய்மாமாவான 12 வயது சிறுவன் என்பதை அறிந்து போலீசாரே அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.

    Advertisement

    அந்த சிறுவனை பிடித்து போலீசார் தங்களின் பாணியில் விசாரித்தபோது, அவன் செய்த கொடூரத்தை ஒப்புக்கொண்டான். "செல்போனில் ஆபாசப் படம் பார்த்தேன்... கூடவே மதுவும் குடித்திருந்தேன். அந்த போதையில் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல், நள்ளிரவில் அக்கா தூங்கியபோது குழந்தையைத் தூக்கிக்கொண்டு விவசாய நிலத்திற்குச் சென்றேன். அங்கே வைத்து குழந்தையை வன்கொடுமை செய்துவிட்டு, தகரக் கொட்டகைக்குள் வீசிவிட்டு வந்துவிட்டேன்" என்று வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

    ஆபாச வீடியோக்கள் - குற்றச்செயல்

    இதுகுறித்து கோரக்பூர் மாநகரக் காவல் கண்காணிப்பாளர் நிமேஷ் பாட்டீல் சொல்லும்போது, "பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குற்றச்செயலில் ஈடுபட்ட 12 வயது சிறுவனை உடனடியாகக் கைது செய்து, கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

    Advertisement

    விசாரணை முடிந்ததுமே போலீசார் சிறுவனின் செல்போனை ஆய்வு செய்தபோது, அதில் 50-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளன.. அதுமட்டுமல்ல, சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆபாச வெப்சைட்களை இந்த சிறுவன் பார்த்திருப்பதாகவும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.. உரிய சட்டநடவடிக்கை எடுக்க போவதாகவும் உறுதி கூறி உள்ளனர்.

    சிறுவர்களின் கைகளில் கட்டுப்பாடின்றி புழங்கும் செல்போன்களும், அதில் எளிதாகக் கிடைக்கும் ஆபாச வீடியோக்களும் பிஞ்சு மனங்களை எப்படிப்பட்ட மிருகங்களாக மாற்றுகின்றன என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.. இனியாவது பெற்றோர் விழித்துக்கொள்ளாவிட்டால் பேரழிவு நிச்சயம்...!

    English Summary

    What Happened While His Sister Slept? Two Harmful Habits Behind a 12-Year-Old’s Shocking Crime