ஆதரவை வாபஸ் வாங்கும் காங்கிரஸ்? விஜய் ஆட்சி கவிழுமா? சட்டமன்ற கணக்கு சொல்வது என்ன?

  • சென்னை: 2029 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிறுத்தி, தவெக தலைவர் விஜய் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் விவகாரம் ஆளுங்கூட்டணிக்குள் பூதாகரமாக வெடித்துள்ளது. 2029 நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி தவெக தலைவர் விஜய் எடுத்து வரும் அடுத்தடுத்த தேசிய அரசியல் நகர்வுகள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. தேசிய அளவில் தன்னை 2029 லோக் சபா தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கான காய் நகர்த்தல்களை விஜய் செய்து வருகிறார்.

    Advertisement

    டெல்லி காங்கிரஸ் மேலிடத்தின் தூதர்களாக தலைமைச் செயலகத்திற்கு வந்த மாணிக்கம் தாகூரையும் பிரவீன் சக்கரவர்த்தியையும் முதலமைச்சர் விஜய் கண்டுகொள்ளாமல் திருப்பி அனுப்பியது காங்கிரஸ் வட்டாரத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. "எங்கள் தலைவரை மதிக்காவிட்டால் தமிழகத்தில் தவெக அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவோம்" என காங்கிரஸ் தரப்பில் மறைமுக மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.

    Advertisement

    இந்நிலையில், ஒருவேளை காங்கிரஸ் தனது 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்றால், தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசுக்கு மெஜாரிட்டி ஆபத்து ஏற்படுமா? தவெகவால் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்ல முடியுமா? சட்டமன்றத்தின் தற்போதைய பலம் என்ன? விரிவான அரசியல் கணக்குகள் இதோ:

    சட்டமன்ற பலமும் இடங்களின் நிலவரமும்

    முதலில் இப்போதைக்கு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முடியாது. டிசம்பர் வரை காத்திருக்க வேண்டும். அப்படியே செய்தாலும் மொத்தம் 234 தொகுதிகளைக் கொண்ட தமிழக சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான மேஜிக் எண் 118 ஆகும். கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் எந்தவொரு தனிப்பட்ட கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

    Advertisement

    தேர்தல் முடிவுகளின்படி கட்சிகளின் பலம்:

    தவெக - 108 இடங்கள்
    திமுக - 59 இடங்கள்
    அதிமுக - 47 இடங்கள்
    காங்கிரஸ் - 5 இடங்கள்
    பாமக - 4 இடங்கள்
    விசிக - 2 இடங்கள்
    சிபிஐ - 2 இடங்கள்
    சிபிஎம் - 2 இடங்கள்
    முஸ்லிம் லீக் - 2 இடங்கள்
    பாஜக - 1 இடம்
    தேமுதிக - 1 இடம்
    அமமுக - 1 இடம்

    7 தொகுதிகள் காலி: குறைக்கப்பட்ட மெஜாரிட்டி இலக்கு!

    தேர்தலுக்குப் பின்னர், இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற விஜய் ஒரு தொகுதியை (திருச்சி கிழக்கு) ராஜினாமா செய்தார். அதேபோல், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

    Advertisement

    இதனால், தற்போதைய சூழலில் தமிழக சட்டமன்றத்தில் மொத்தம் 7 தொகுதிகள் காலியாக உள்ளன.

    சட்டமன்றத்தின் தற்போதைய உறுப்பினர்கள் எண்ணிக்கை: 227 (234 - 7)
    இன்றைய நிலவரப்படி அவையில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான மேஜிக் எண்: 114

    அவையில் தவெகவின் பலம் என்ன?

    விஜய் தனது ஒரு தொகுதியை ராஜினாமா செய்துள்ளதால், தவெகவின் நேரடி உறுப்பினர் பலம் தற்போது 107 ஆக உள்ளது.

    ஆட்சி அமைக்கும் தருணத்தில், ஆளுநரிடம் தவெகவுக்கு ஆதரவாக காங்கிரஸ் (5), விசிக (2), சிபிஐ (2), சிபிஎம் (2), முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகள் ஆதரவுக் கடிதம் கொடுத்தன. இதன் மூலம் ஆளுங்கூட்டணியின் மொத்த பலம் 120 ஆக உயர்ந்தது.

    Advertisement

    காங்கிரஸ் விலகினால் என்ன நடக்கும்? தவெக வெல்லுமா?*

    காங்கிரஸ் கட்சிக்கு தற்போது 5 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே உள்ளனர். ஒருவேளை விஜய் மீதான கோபத்தில் காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை முழுமையாக வாபஸ் பெற்றாலும்:

    ஆளுங்கூட்டணியின் பலம்: 120 - 5 = 115 ஆக இருக்கும்.
    சட்டமன்றத்தில் தற்போதைய பெரும்பான்மை இலக்கு: 114.

    அதாவது, காங்கிரஸ் வெளியேறினாலும், விசிக, இடதுசாரிகள் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தவெகவுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் பட்சத்தில், 115 உறுப்பினர்களின் பலத்தோடு தவெக அரசு மிக எளிதாக மெஜாரிட்டியைத் தக்க வைத்துக் கொள்ளும். ஆட்சிக்கு உடனடி ஆபத்து எதுவும் ஏற்படாது.

    Advertisement

    விசிக, இடதுசாரிகளும் வெளியேறினால்?

    காங்கிரஸுடன் சேர்ந்து விசிக, சிபிஐ, சிபிஎம், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் ஒட்டுமொத்தமாக திமுக பக்கம் திரும்பி ஆதரவை வாபஸ் பெற்றால் மட்டுமே தவெக அரசு 107 உறுப்பினர்களோடு மைனாரிட்டியாக மாறும். ஆனால், அந்தச் சூழலிலும் எதிர்க்கட்சிகளான அதிமுக (41), திமுக (59) என அனைத்தும் உடைந்திருப்பதாலும், மாற்று அரசு அமைப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக இருப்பதாலும் நம்பிக்கை வாக்கெடுப்பில் உடனடியாக தவெகவைக் கவிழ்ப்பது சாத்தியமற்ற ஒன்று என்கிறார்கள் சட்ட நிபுணர்கள். ஏனென்றால் காலியாக உள்ள தொகுதிகளுக்கு அந்த சமயத்தில் இடைத்தேர்தல் அறிவிப்பு வரவும் வாய்ப்புகள் உள்ளன..

    மேலும், விரைவில் வரவுள்ள 7 தொகுதி இடைத்தேர்தலில் தவெக பெரும்பான்மை இடங்களை வென்றுவிட்டால், எந்தவொரு கூட்டணிக் கட்சியின் தயவுமின்றி தனித்து 114+ இடங்களைப் பெற்று கூடுதல் பலத்தை விஜய் பெற்றுவிடுவார். அப்போது விஜய்க்கு மேலும் சாதகமான சூழல் ஏற்படும், ஆனாலும் தனி மெஜாரிட்டி வராது.

    இந்த எண்களின் அடிப்படையில்தான், காங்கிரஸ் கட்சியின் மிரட்டல்களைத் துளியும் பொருட்படுத்தாமல் விஜய் தனது 'தேசிய வெற்றி கழகம்' பிரதமர் வியூகத்தை தைரியமாக முன்னெடுத்து வருகிறார் என்பது தெளிவாகிறது.

    English Summary

    What If Congress Pulls Support? Decoding Assembly Seat Math of CM Vijay’s Government