விஜய் - ராகுல் சந்திப்பு நடக்காமல் போனதற்கான உண்மைக் காரணம் என்ன? அதிர்ச்சி தரும் பின்னணி

  • சென்னை: விஜய்-ராகுல் சந்திப்பு நடக்காமல் போனதற்கான உண்மைக் காரணம் என்ன? என்பது பற்றி ஒரு முக்கிய தகவல் கிடைத்திருக்கிறது. அதாவது, விஜய்யின் டெல்லி பயணத்தில் ராகுல் மற்றும் சோனியாவை சந்திப்பது என முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்காக பிரமாண்டமான ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டிருந்தன.

    Advertisement

    தவெக அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்ததுமே, ராகுலை தொடர்புகொண்டு நன்றி சொன்ன விஜய், பெரும்பான்மை வலிமையை நிரூபித்து விட்டு டெல்லி வந்து உங்களை நேரில் சந்திக்கிறேன் என்று சொல்லியிருந்தார். அதற்கு, அவசரம் இல்லை; நீங்கள் டெல்லி வரும் போது அவசியம் சந்திப்போம் என்று கூறியிருந்தார் ராகுல்காந்தி.

    Advertisement

    அதன்படி, பிரதமர் மோடியின் அப்பாயிண்மென்ட் கிடைத்ததும் 27-ந்தேதி டெல்லிக்கு தான் வருவது குறித்தும், 28-ந்தேதி ராகுல் காந்தியை சந்திக்க விரும்புவதைக் குறித்தும் காங்கிரஸ் ப்ரவீன்சக்கரவர்த்தியிடம் சொல்லியிருக்கிறார் விஜய். இதனை ராகுலுக்கு பாஸ் செய்யப்பட, 28-ந்தேதி காலை 10 மணிக்கு சந்திக்க நேரம் ஒதுக்கினார் ராகுல். அதனை விஜய்க்கும் சொல்லப்பட்டது.

    எல்லாம் நல்லபடியாக நடந்துகொண்டிருந்த நிலையில், 28-ந்தேதி காலை 7 மணிக்கு விஜய்யை தொடர்பு கொண்ட ப்ரவீன் சக்ரவர்த்தி, ராகுல் மற்றும் சோனியாவை சந்திக்கும் ப்ரோக்ரம் ரத்து செய்யப்படுகிறது. அடுத்த வாரம் அல்லது அடுத்த மாதம் சந்திக்கலாம் என ராகுல்காந்தி சொல்லச் சொன்னார் என்று விஜய்யிடம் சொல்ல, ஷாக் ஆகிவிடுகிறார் விஜய். ஏன், என்னாச்சு ? என விஜய் கேட்டபோது, கர்நாடக முதல்வர் மாற்றம் விவகாரம் நடந்து கொண்டிரு க்கிறது. அது தொடர்பாக இடைவிடாமல் பல விசயங்கள் ஆலோசிக்கப்படுவதால் ராகுல் மிக பிஸியாக இருக்கார் என்று காரணத்தைச் சொல்லியிருக்கிறார் ப்ரவீன். இதனை விஜய் நம்பினாலும், அவரைச் சுற்றியுள்ள அதிகாரிகள் தரப்பு, இதில் ஏதோ விவகாரம் இருக்கிறது. உங்களிடம் காங்கிரஸ் மறைக்கிறது என்று சொல்ல, அதனை ஆமோதித்துள்ளார் விஜய்.

    Advertisement

    இந்த நிலையில், இவர்களின் சந்திப்பு ஏன் ரத்து செய்யப்பட்டது? என்று காங்கிரஸ் மேலிடத்தில் தொடர்புடைய சீனியர்களிடம் விசாரித்த போது, ''பிரதமர் அலுவலகத்தில் நடந்ததுதான் காரணம். அதாவது, பிரதமரை சந்தித்த விஜய், தமிழக நலன்களை முன்வைத்து 4 கோரிக்கைளை பிரதமரிடம் கொடுத்தார். அதில் ஒன்று மேகதாது அணை கட்டும் விவகாரம். விஜய் தந்த கோரிக்கைகளை மேலோட்டமாக படித்துப்பார்த்த பிரதமர் மோடி, அருகில் இருந்த தனது அரசின் உயரதிகாரி ஒருவரிடம் இதைப்பற்றி சொல்ல, இந்த விவகாரத்தை நம்மிடம் சொல்வதற்கு பதில் காங்கிரஸ் தலைமையிடம் இவர் சொல்லலாம். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி தான் நடக்கிறது.

    Advertisement

    தமிழகத்தில் இவர் (விஜய்) அரசில் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறது. அந்த வகையில் இருவரும் பார்ட்னர்கள்தானே. அதனால், காங்கிரஸ் தலைமையிடம் சொன்னால், பிரச்சனை ஈசியாக சால்வ் ஆகி விடுமே என அந்த அரசு அதிகாரி சொல்லியிருக்கிறார். அப்போது பிரதமர் மோடி, நாளைக்கு நீங்கள் ராகுல்காந்தியை சந்திக்கிறீர்கள் தானே... அவரிடம் மேகதாது விவகாரத்தைச் சொல்லுங்கள். எல்லாம் சரியாகும் என அட்வைஸ் செய்திருக்கிறார்.

    இந்த விசயம் ராகுல்காந்திக்கு அன்றைய இரவே தெரிய வந்திருக்கிறது. அந்த வகையில், விஜய் நம்மை சந்தித்தால், நிச்சயம் இந்த கோரிக்கையை நம்மிடம் வைப்பார். அதை மறுக்க முடியாது. விஜய்க்காக கர்நாடகவில் உள்ள நமது அரசுக்கு நிர்பந்தம் தர முடியாது. அதனால், அவரை சந்தித்தால் தானே இந்த பிரச்சனை. சந்திப்பை ரத்து செய்து விட்டால் அந்த நெருக்கடி நமக்கு இருக்காது என யோசித்துத்தான் விஜய்க்கு கொடுக்கப்பட்ட அப்பாயிண்ட்மென்ட்டை ரத்து செய்தார் ராகுல்காந்தி'' என்று பின்னணி ரகசியத்தை விவரிக்கிறார்கள்.

    Advertisement

    - சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    What is the real reason behind CM Vijay not Meeting Congress Chief Rahul Gandhi?