ஆந்திராவை தொடர்ந்து கேரளா.. ரசிகர்களை ஒருங்கிணைக்கிறாரா விஜய்? விரிவாக்கம் செய்யப்படும் தவெக!

  • சென்னை: கோவையில் பெரியார் நூலகத்தை திறந்து வைக்கும் முதல்வர் விஜய், ஹெலிகாப்டர் மூலமாக கேரளா செல்ல இருப்பது தெரிய வந்துள்ளது. குருவாயூர் கோயிலில் விஜய் சாமி தரிசனம் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் விஜய்யின் இந்தப் பயணம் வெறும் கோயில் தரிசனத்திற்காக மட்டும் அல்ல என்றும் பார்க்கப்படுகிறது.

    Advertisement

    கோவையில் ரூ.300 கோடியில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தை முதல்வர் விஜய் நாளை திறந்து வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் கோவையில் சுமார் ரூ.200 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள் மற்றும் முடிவடைந்த திட்டங்களை விஜய் தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    Advertisement

    இந்த நிகழ்ச்சிகள் முடிவடைந்த பின் முதல்வர் விஜய் ஹெலிகாப்டர் மூலமாக கேரளா செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 2 நாட்களுக்கு முன்பாக ஆந்திரா சென்ற முதல்வர் விஜய், விஜயவாடாவில் உள்ள கனக துர்கா கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். தற்போது அடுத்த 2 நாட்களிலேயே கேரளாவுக்கு பயணிக்க விஜய் திட்டமிட்டிருப்பது விவாதமாகி இருக்கிறது.

    Sekar Babu: நீங்க பேசுறது போர் அடிக்குது.. தவெக எம்எல்ஏ விஜய் தாமு அடித்த கமெண்ட்! கடும் டென்ஷனான சேகர் பாபு

    கேரளாவில் குருவாயூர் கோயில் விஜய் சாமி தரிசனம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கர்நாடகா சென்ற முதல்வர் விஜய், கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். இதன் மூலமாக தென் மாநிலங்களில் உள்ள முக்கிய கோயில்களுக்கு விஜய் செல்வது வழக்கமாகி வருவதாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    ஆனால் விஜய்யின் இந்த பயணம் வெறும் சாமி தரிசனத்திற்கானது மட்டுமல்ல என்று அரசியல் விமர்சகர்கள் மத்தியில் சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஆந்திராவில் விஜய்யின் வருகைக்கு அம்மாநில மக்கள் இடையே மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. ஆந்திராவை விடவும் கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர்.

    என்னாது நான் பேசுறது போர் அடிக்கிறதா? ஆதவ் முன்பே தவெக எம்எல்ஏவிடம் கொந்தளித்த சேகர்பாபு!

    ஏற்கனவே கேரளாவில் தவெகவை விரிவாக்கம் செய்ய விஜய் ஆர்வமாக இருந்தார். பிரபல நடிகர் தேவன் தவெக விரிவாக்கம் தொடர்பாக விஜய்யை சந்திப்பதாகவும் இருந்தது. ஆனால் லண்டன் பயணம் காரணமாக இந்த சந்திப்பு நடக்கவில்லை. இதனால் கேரளா செல்லும் விஜய் தனது செல்வாக்கை எண்ணி பார்க்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

    Advertisement

    தவெக விரிவாக்கம் செய்யப்படும் பட்சத்தில், தவெக தென் மாநிலங்களில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும். அதேபோல் விஜய்யின் இந்த பயணங்களை காங்கிரஸ் கட்சி உன்னிப்பாக கவனிக்க தொடங்கி இருப்பதாகவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். மேலும் கூட்டம் கூடிவிடக் கூடாது என்பதால் விஜய்யின் கேரளா பயணம் ரகசியமாக வைக்கப்பட்ட்ட்டிருப்பதாகவும் சொல்லப்படுகின்றன.

    English Summary

    What is the Reason behind CM Vijay Will Visit Guruvayur Temple in Kerala After Opening Periyar Library