சூரி ஹீரோவாக ஜெயிப்பதற்கும், நடிகர் சந்தானம் தடுமாறுவதற்கும் பின்னால் உள்ள மக்களின் உளவியல் காரணம்

  • சென்னை: நடிகர் சூரி நடிப்பில் வெளியான மண்டாடி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்துள்ளது. அவரது முதல் 100 கோடி வசூல் படமாக உருவெடுத்து வருகிறது. அந்த அளவிற்கு மக்களிடையே மண்டாடி திரைப்படம் வரவேற்பை பெற்று வருகிறது. சூரி கதை நாயகனாக நடித்த விடுதலை, விடுதலை 2, கருடன், மாமன் படங்களை தொடர்ந்து மண்டாடி அவருக்கு மாஸ் ஹீரோ என்ற அடையாளத்தை தந்துள்ளது. இந்த சூழலில் பலரும் நடிகர் சந்தானத்துடன், சூரியை ஒப்பிடுகிறார்கள். சூரி ஹீரோவாக ஜெயிப்பதற்கும், நடிகர் சந்தானம் தடுமாறுவதற்கும் பின்னால் உள்ள மக்களின் உளவியல் காரணம் என்ன என்பதில் நெட்டிசன்களின் பார்வையில் அப்படியே பார்ப்போம்..

    Advertisement

    ஒரு நெட்டிசன் கூறுகையில், "சூரிக்கு எப்படி ஒரு நாயக பிம்பம் பொருந்தியது, சந்தானம்க்கு ஏன் பொருந்தவில்லை? சூரிக்கு நகைச்சுவை அறவே வராது. சிரிப்பு வராத நகைச்சுவைகளுக்கு சூரிநகைச்சுவை என்றே பெயர் வருமளவிற்கு திரைப்படங்களில் அவரது நகைச்சுவைப் பங்களிப்பு இருந்தது, அதனால் சூரி நாயகனாகும் போது ஒரு நகைச்சுவைக் கலைஞன் நாயகனாகிறான் என்கிற எண்ணம் வரவேயில்லை. வசதியான இளமைப்பருவம் இல்லாதவன் என்கிற பிம்பமும் சேர்ந்துகொள்ள சூரியின் வெற்றியை மக்கள் ரசிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

    Advertisement

    ஆனால் சந்தானம் அப்படியல்ல அவரின் நகைச்சுவைக்காகவே ஓடிய படங்கள் இருக்கின்றன. முன்னணி நாயகனை மீறி அவர் ஆதிக்கம் செலுத்துவதை ரசிக்க முடிந்தது. அதுதான் அவரது பலம் மற்றும் பலவீனமும். அவர் நாயகனாக நடித்தாலும் அது நகைச்சுவைப் படமாக இருந்ததே ஒழிய கதாபாத்திர ஆகிருதியை உயர்த்தக்கூடிய படங்களாக இல்லை" என்று கூறியுள்ளார்.

    இன்னொரு நெட்டிசன் கூறுகையில், சூரி தனது நகைச்சுவைக் கலைஞன் முத்திரையைத் தாண்டி, கதையின் தன்மைக்கு ஏற்ற எளிய மற்றும் தீவிரமான மனிதராகத் தன்னை மாற்றிக்கொண்டதன் மூலம் "நடிகர்/நாயகன்" என்ற அந்தஸ்தைப் பெற்றார். மாறாக, சந்தானம் தனது புகழ்பெற்ற நகைச்சுவை அடையாளத்தை மீறி ஒரு பரிமாண வளர்ச்சி பெற்ற கதாநாயகக் கதாபாத்திரங்களை உருவாக்குவதில் சில எல்லைகளைச் சந்தித்ததே இதற்குக் முக்கியக் காரணம்" என்று கூறியுள்ளார்.

    Advertisement

    மூன்றாவது நெட்டிசன் கூறுகையில், சந்தானம் அவருக்கும் சில நல்லப் படங்கள் வந்துள்ளது. அடிதடி,வெட்டுக் குத்து போன்றக் குப்பை அல்லாது. மக்களுக்குக் கொண்டாட நேரமில்லை அவ்வளவு தான்.

    1.அறை எண் 305-ல் கடவுள்
    2.குலு குலு
    3.வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
    4.டகால்டி
    5.சபாபதி

    இரண்டாவது வேறுபாடான கதை வாய்ப்புகள் தரவில்லையே?" என்று ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.

    நான்காவது நெட்டிசன் கூறுகையில், வெற்றிமாறனின் 'விடுதலை 1' மற்றும் '2' ஆகிய படங்கள் சூரியின் பிம்பத்தை மாற்றின; 'கருடன்' அவருக்குச் சற்று 'மாஸ்' தன்மையைச் சேர்த்தது; 'மாமன்' அவரை குடும்பப் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்தது; 'மண்டேலா' அவரை ஒரு 'மாஸ் ஹீரோ'வாக உயர்த்தி உள்ளது" என்று கூறியுள்ளார்.

    Advertisement

    ஐந்தாவது நெட்டிசன் கூறுகையில், "சந்தானம் அதீத புத்திசாலித்தனமாக தன்னை சுற்றி உள்ள எல்லோரையும் கலாய்க்கும் பாத்திரத்தில் மட்டுமே ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோன்னாலும் அதில் ஒரு கேரக்டர் தனித்துவம் இருக்கனும். சந்தானம் ஹீரோவாக நடிச்ச அத்தனை படத்தையும் ஒரே எடிட்டிங்கில் மாற்றி போட்டா வித்தியாசம் தெரியாது" என்று கூறியுள்ளார்.

    ஆறாவது நெட்டிசன் கூறுகையில், சூரியை இயக்குன ஆட்கள்... கதைக்களத்தின் அரசியல் இதெல்லாம் சந்தானத்துக்கு இல்லை.
    வடக்குப்பட்டி ராமசாமி - கல்ட் ஜேனர். ஆனா... படத்தையே பாக்காம கும்மாங்குத்து குத்தி ரிஜக்ட் செஞ்சது யாருனு இப்ப நா சொல்லியே ஆகணுமா?
    சந்தானமெல்லாம் ஹீரோவாகறதான்ற அத மனநிலைதான் சூரி வாவ் ஹீரோன்றதும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    Advertisement

    ஏழாவது நெட்டிசன் கூறுகையில், " சூரி அவர்களை பார்க்க முரட்டுத்தனமான, மூர்க்கமான ஒரு கிராமத்தான் மாதிரி இருக்காரு. அவருடைய உடல்மொழியும் அதுக்கு ஒத்து போகுது, மற்றும் அவரோட கதை தேர்வும் அதையொட்டியே இருக்கும். ஆனால் சந்தானம் அப்படியல்ல. அவர் செய்த தவறே அவரின் நகைச்சுவையை அவருடைய படத்தில் குறைத்ததுதான்." என்று கூறியுள்ளார்.

    இதில் நெட்டிசன்கள் கூறுவதுபோல், இங்கே கிராமத்து முக சாயல், இளமையில் வறுமை போன்ற பிம்பங்கள் சூரிக்கு ஒத்துப்போனது. ஆனால் சந்தானம் மிகப்பெரிய காமெடி நடிகர், தனது பாதையில் காமெடியில் உச்சம் பெற்றார். அதனால் அவர் அந்த டிராக்கைவிட்டு வெளியே வர முடியவில்லை. அப்படியான கேரக்டர்களில் அவர் கதைகளை தேர்வு செய்யவும் உடனே முடியவில்லை .

    Advertisement

    அதேபோல் நெட்டிசன்கள் சொல்வது போல் கலாய்ப்பது தான் சந்தானத்தின் ஸ்பெஷல் என்பதாக கதைக்களங்கள் அமைந்தததால், சீரியஸ் படங்களை நோக்கி அவரால் நகர முடியவில்லை. நடிகர் பாண்டியராஜன் பாணியில் தான் சந்தானம் முயன்றார். ஆனால் சூரி மிக அழுத்தமான கதைகளை நோக்கியே பயணத்தை மேற்கொண்டார். தனக்கு ஏற்ற கதைகளை தேடாமல் அந்த கதைக்கு ஏற்ற கதாபாத்திரமாக தன்னை மாற்றிக்கொண்டார். இதுவே அவரது வெற்றிக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

    English Summary

    The underlying public psychology behind Soori succeeding as a lead actor while actor Santhanam struggles.