தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா

  • சென்னை: தமிழ்நாட்டில் மதுபானம் மற்றும் புகையிலைப் பயன்பாடு தொடர்பான புதிய புள்ளி விவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. ஆண்களிடையே மதுப்பழக்கம் 23.5 சதவீதமாக இருப்பதுடன், கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மதுபானம் மற்றும் புகையிலைப் பயன்பாட்டில் ஓரளவு குறைவு பதிவாகியுள்ளது.

    Advertisement

    தமிழ்நாட்டில் போதைப்பழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், இளைய சமுதயாத்தினர் மத்தியில் போதைப்பழக்கம் அதிகரித்து வருவது கவலை அளிக்கும் ஒன்றாக உள்ளது.

    Advertisement

    சில வடமாநிலங்களுடன் ஒப்பிடும் பொது தமிழ்நாட்டில் போதைப்பழக்கம் உள்ளவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்றாலும் தற்போதைய விகிதமே கவலை அளிக்க கூடிய ஒன்றாக உள்ளது. மத்திய அரசின் சுகாதாரத்துறை வெளியிட்ட தரவுகளின் படி தமிழகத்தில் போதைப்பழக்கம் உள்ளவர்கள் சதவீதம் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

    புகையிலைப் பொருட்கள்:

    பெண்கள்

    ஊரகப் பகுதிகள்: 2.8%
    நகர்ப்புறம்: 6.5%
    மொத்த சதவிகிதம்: 4.8

    ஆண்கள்:

    ஊரக பகுதிகள்: 15.0 சதவீதம்
    நகரம்: 20.0
    மொத்தம்: 17.7 %

    மதுப்பழக்கம்

    பெண்கள்

    நகர்ப்புறம்: 0.3 %
    கிராமப்புறம்: 0.4%
    மொத்தம்: 0.3 %

    ஆண்கள்

    நகர்ப் புறம்: 19.7%
    ஊரகப்பகுதி: 26.7%
    மொத்தம்: 23.5%

    Advertisement

    கடந்த 2019 - 2021-இல் எப்படி இருந்தது?

    கடந்த 2019-21 வரையில் ஆல்ஹகால் பயன்படுத்தும் ஆண்கள் எண்ணிக்கை 25.3 சதவீதமாக இருந்தது. தற்போது இது 2 சதவீதம் குறைந்துள்ளது. பெண்களை பொறுத்தவரை கடந்த 2019-21 வரையில் எந்தவித மாற்றமும் இன்றி 0.3 சதவீதமாக உள்ளது.

    புகையிலை பயன்பாட்டை பொறுத்தவரை கடந்த 2019-21 வரையிலான தரவுகளின் படி புகையிலை பயன்படுத்தும் ஆண்கள் எண்ணிக்கை 20 சதவிகிதமாக இருந்துள்ளது. ஆனால் தற்போது 17.7 சதவிகிதமாக குறைந்துள்ளது வரவேற்புகுரிய ஒன்றாக உள்ளது. இதேபோன்று புகையிலை பொருட்கள் பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை 4.9 சதவீதமாக இருந்தது. தற்போது 0.1 சதவீதம் குறைந்து 4.8 சதவீதமாக உள்ளது.

    Advertisement

    பொதுமக்கள் கோரிக்கை

    போதைப்பொருள் பழக்கத்தை கட்டுப்படுத்த மேலும் பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே இந்த சதவீதத்தை மேலும் குறைக்க முடியும் என்பதால், தமிழக அரசு இதில் கவனம் செலுத்தி போதிய விழிப்புணர்களை ஏற்படுத்தி, மதுப்பழக்கத்தை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள்ள வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    ஆய்வு ஏன்?

    இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகை, சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் குடும்ப நலன் சார்ந்த தற்போதைய நிலவரங்களைத் துல்லியமாகக் கணக்கிடுவதற்காக மத்திய அரசால் நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய 6-வது சுற்று டிஜிட்டல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

    Advertisement

    மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ், மும்பையிலுள்ள சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனம் (IIPS) இந்த மெகா ஆய்வை ஒருங்கிணைத்துள்ளது. நேற்று தேசிய குடும்ப நல ஆய்வு 6 (NFHS-6) அறிக்கையை வெளியிட்டது. கடந்த 2023-2024 காலகட்டத்தில், இந்தியாவின் 715 மாவட்டங்களில் உள்ள சுமார் 6.79 லட்சம் குடும்பங்களிடம் நேரடியாக நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள், இந்தியர்களின் வாழ்க்கை முறையிலும் ஆரோக்கியத்திலும் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

    இதற்கு முன்பு மத்திய அரசு 2019-21 காலக்கட்டத்தில் இத்தகைய ஆய்வை நடத்தியது. அந்த தரவுகளுடன் ஒப்பிட்டு புதிய விவரத்தையும் வெளியிட்டுள்ளது. இந்த தரவுகள் எதனால் முக்கியம் என்று பார்த்தோம் என்றால், புதிய சுகாதாரத் திட்டங்களைத் தீட்டுவதற்கும், தற்பொழுது நடைமுறையில் இருக்கும் ஆயுஷ்மான் பாரத், போஷன் அபியான் போன்ற மெகா மக்கள் நலத்திட்டங்களை மேலும் மேம்படுத்துவதற்கும் இந்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களே அடிப்படையாக அமைந்துள்ளன.

    English Summary

    According to the latest Central Government health data, 23.5% of men and 0.3% of women in Tamil Nadu consume alcohol. Tobacco use has also declined. Compared with 2019-21 figures, both alcohol and tobacco consumption show a modest reduction statewide.