சென்னை: சென்னை அருகே, திருமணத்துக்கு முந்தைய நாள் இரவு வரை எல்லாமே சந்தோஷமாகத்தான் இருந்திருக்கிறது. உறவினர்கள், நண்பர்கள் என பலரும் வந்து மணமக்களை வாழ்த்தியிருக்கிறார்கள். ஆனால் மறுநாள் அதிகாலையில் நடந்த சம்பவம், அந்த திருமணத்தையே நிறுத்தும் அளவுக்கு சென்றுவிட்டது... பெற்றோர்களும் குழம்பி நிற்க, மணமகன் வீட்டாரும் திகைத்து போக, மீஞ்சூர் போலீசாரும் கையை பிசைந்து நிற்கும்படி ஆகிவிட்டது.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!!
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே 19 வயது இளம்பெண்ணுக்கும், இளைஞர் ஒருவருக்கும் திருமணம் செய்ய 2 வீட்டாரும் பேசி ஏற்பாடு செய்திருந்தனர். திருமணத்துக்கு நாளும் குறித்தனர்..
நேற்று அதாவது ஞாயிற்றுக்கிழமை காலை முகூர்த்தம் குறிக்கப்பட்டிருந்தது.. திருமணத்தையொட்டி மண்டபத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. திருமணத்திற்கு முன்தின நாள் இரவு ரிசப்ஷன் படுஅமர்க்களமாக நடந்தது.. இரு வீட்டு உறவினர்கள், நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.. இதையடுத்து, மறுநாள் அதிகாலை திருமணத்துக்கான ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்துகொண்டிருந்தன.. தூங்கிக்கொண்டிருந்த பெற்றோரும், மணப்பெண்ணை எழுப்பி, திருமணத்துக்கு ரெடியாகும்படி சொல்லி உள்ளார்.. ஆனால், மணப்பெண் திடீரென திருமணத்துக்கு தயாராக மறுத்து விட்டார். நேரமாகி கொண்டே போவதால், உடனே மேக்கப் போடும்படியும், மணவறையில் வந்து உட்கார வேண்டும் என்றும் பெற்றோர் சொன்னார்கள்.. ஆனால், எதையுமே அந்த பெண் காதில் வாங்கவில்லை.. தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும், தாலி கட்டிக்கொள்ள விரும்பவில்லை என்றும் திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர்கள், மணப்பெண்ணிடம் எவ்வளவோ அறிவுறுத்தினார்கள்.. மகளிடம் பெற்றோர் கெஞ்சினார்கள்.. இதனால் வாக்குவாதம் அதிகமானதே தவிர, மணப்பெண் மனம் இறங்கவில்லை. அதற்குள் விடிகாலை 5.30 மணியாகிவிட்டது.. உடனே செல்போனை எடுத்த மணப்பெண், 100-க்கு போன் செய்து, தனது விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்து வைக்க முயற்சிப்பதாகவும், கட்டாய கல்யாணம் செய்ய பார்க்கிறார்கள் என்றும் போலீசாரிடம் புகார் தந்துவிட்டார். இந்த தகவல் கிடைத்ததும் போலீசார் உடனடியாக திருமண மண்டபத்துக்கு சென்றனர். அங்கு மணப்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அவரது விருப்பத்துக்கு மாறாக திருமணம் நடைபெறக்கூடாது என்பதால், திருமணம் நிறுத்தப்பட்டது. மகளின் பிடிவாதத்தையும், போலீசாரை மண்டபத்துக்கு வரவழைத்ததையும் கண்டு, உச்சக்கட்ட அதிருப்தியும், அவமானமும் அடைந்த பெற்றோர், மணப்பெண்ணை மண்டபத்திலேயே விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார்களாம். இதனால் 19 வயது மணப்பெண் மட்டும் மண்டபத்தில் தனியாக உட்கார்ந்திருந்ததால், , அவரை சோழவரம் ஒன்றியம் அலமாதி பகுதியில் உள்ள பெண்கள் காப்பகத்தில் போலீசார் பாதுகாப்பாக ஒப்படைத்தனர். இதையடுத்து, கல்யாண மண்டபம் வாசலில் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனர்களும் அகற்றப்பட்டன. முந்தைய நாள் இரவு வரை திருமணக் கொண்டாட்டமாக இருந்த இடம், மறுநாள் காலை திருமணம் நின்றதால் முற்றிலும் தலைகீழாக மாறிப்போனது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த பெண் ஏன் திருமணத்தை வேண்டாம் என்று கூறினார்? வேறு யாரையாவது காதலிக்கிறாரா? குடும்பத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டதா? அல்லது திருமணம் தொடர்பாக வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்றெல்லாம் தெரியவில்லை.. மாப்பிள்ளை வீட்டு தரப்பில் என்ன நடந்தது என்றும் தெரியவில்லை.. இதுகுறித்தெல்லாம் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்... திருமணம் நின்றதற்கான உண்மையான காரணம் போலீஸ் விசாரணை முடிந்த பிறகே தெரியவரும்.மீஞ்சூர் மணப்பெண்
மேக்கப் போட மறுப்பு
கெஞ்சிய பெற்றோர்
சென்னை போலீஸ் விசாரணை