எப்போ கம்யூனிஸ்ட் வாயில் இருந்து அந்த வார்த்தை வந்ததோ! இனி விஜய் ஆக்ஷனில் இறங்க கூடாது! பிரபலம்

  • சென்னை: எப்போது கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் வாயில் இருந்து அப்படி ஒரு வார்த்தை வந்ததோ இனியாவது விஜய் ஆக்ஷனில் இறங்காமல் அமைதியாக இருப்பதுதான் நல்லது என மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    வடமாநிலங்களில்தான் அவ்வப்போது குதிரை பேரம் என்ற ஒரு வார்த்தையை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் தமிழகத்தில் அதுவும் தவெக ஆட்சிக்கு வந்ததும்தான் இது போன்றதொரு வார்த்தையை கேள்விப்படுகிறோம்.

    Advertisement

    அதிமுக எம்எல்ஏக்களுக்கு ஆசைவார்த்தை காட்டப்பட்டு அவர்களை பதவியை ராஜினாமா செய்ய வைத்து தவெகவில் இணைத்துக் கொள்கிறார்கள் என்பதுதான் அதிமுக, திமுக, பாஜக, நாதக, தேமுதிக, அமமுக ஆகிய கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

    ஆனால் விஜய்யோ குதிரை பேரம், கழுதை பேரம், எருமை பேரம் இதெல்லாம் தவெகவுக்கு தெரியாது என மறுக்கிறார். இந்த நிலையில் தவெகவின் கூட்டணி கட்சியை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வாயில் இருந்து முதல்முறையாக குதிரை பேரம் என்ற வார்த்தை வந்துள்ளது.

    இதனால் வரும் உள்ளாட்சித் தேர்தலில் தங்களது பலத்தை கண்டறிய தனித்து போட்டி என்றும் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    அதுபோல் அவர் தமிழகத்தில் குதிரை பேரம் நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டையும் முன் வைத்திருக்கிறார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. கூட்டணி கட்சியான சிபிஐயே (CPI) இப்படி ஒரு வார்த்தையை சொல்லியிருப்பது தவெக தலைமைக்கு அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது.

    இதுகுறித்து அன்பு வணக்கம் என்ற தனது யூடியூப் சேனலில் கோட்டீஸ்வரன் கூறியிருப்பதாவது: சிபிஐ கட்சியின் இந்த முடிவுக்கு குதிரை பேரம் ஒரு காரணமாக இருக்கலாம் என தெரிகிறது. ஒரு ஆளும் கூட்டணி கட்சித் தலைவர், குதிரை பேரம் என்ற ஒரு வார்த்தையை சொல்ல ஒரு தைரியம் வேண்டும். அது வீரபாண்டியனுக்கு இருக்கிறது!

    Advertisement

    அதாவது "உள்ளாட்சித் தேர்தலில் எங்களது சுயத்தை இழக்க தயாராக இல்லை. அதனால் தனித்து போட்டி என தெரிவித்திருக்கிறார். மேலும் எங்கள் கட்சிக்கு என்ன பலமோ அதற்குண்டான வாக்குகளை பெற்றுக் கொள்கிறோம்" என்கிறார்.

    இது ஒரு புறம் இருக்க, இதையெல்லாம் மத்திய அரசு அமைதியாக வேடிக்கை பார்ப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இதை திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மத்திய அரசு , இந்த குதிரை பேரத்தில் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குதிரை பேரம் விஷயத்தில் கோர்ட்டுக்கு போகாமல் ஏன் எல்லோரும் ஆளுநரிடம் கூறுகிறார்கள் என்றால், ஆளுநரிடம் செல்லாமல் கோர்ட்டுக்கு ஏன் வருகிறீர்கள் என நீதிமன்றம் கேள்வி எழுப்பும். எனவே இந்த புகார்களுக்கு ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் எப்படியும் கோர்ட்டுக்கு செல்ல திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் முயற்சிக்கும்.

    Advertisement

    எப்போது கூட்டணி கட்சியான சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் வாயில் இருந்து குதிரை பேரம் என்ற ஒரு வார்த்தை வந்துவிட்டதோ, இனியாவது தவெக, அதிமுக எம்எல்ஏக்களை பிடிப்பதை கைவிட வேண்டும். இவ்வாறு கோட்டீஸ்வரன் தெரிவித்தார். ஆனால் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் மேலும் 10 அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைய போகிறார்கள் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவலும் கிடைத்துள்ளது.

    English Summary

    Senior Journalist Koteeswaran says that Vijay should aware of horse trading and he should heed What ally Communist is saying!