திருமா பேசுவது சரியில்லை.. அவர்கிட்ட சொல்லிடுங்க ஆதவ்.. எனக்கு இதெல்லாம் பிடிக்காது.. விஜய் கோபம்

  • சென்னை: விசிக தலைவர் திருமாவை பற்றி முதல்வர் விஜயிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தான் தவெக மூத்த அமைச்சர்களிடம் ஹாட் டாபிக்! விஜய் இதில் விரைவில் முக்கிய முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. பாமக உடன் தவெக கொஞ்சம் நெருக்கம் காட்டவும் கூட திருமா மீதான கோபமே காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

    Advertisement

    திமுக கூட்டணியை விட்டு வெளியேறி விஜய் அரசுக்கு ஆதரவு தெரிவித்ததுடன் ஆட்சியிலும் பங்கு பெற்றுள்ளது விசிக! கூட்டணி ஆட்சியை தவெகவின் கூட்டணியாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார் விஜய்.

    Advertisement

    தென் தமிழகத்தில் கூட்டணி

    இதற்கான முதல் கட்ட ஆலோசனை கூட்டத்தையும் அண்மையில் நடத்தி முடித்திருக்கிறார். அடுத்த கூட்டத்தை தென் தமிழகத்தில் வைத்துக் கொள்ளலாமா? என்கிற யோசனை தவெக வின் ஸ்ட்டேடர்ஜி மேக்கர்களிடம் விவாதிக்கவும் செய்திருக்கிறார் விஜய். பட்ஜெட் கூட்டம் முடிந்ததும் வைத்துக் கொள்ளலாம் என ஆலோசனை சொல்லியுள்ளனர் ஆலோசகர்கர்கள்.

    இப்படிப்பட்ட சூழலில், "அமைச்சரவையிலும் பங்கு ; திமுகவுடனும் நட்பு" என்று ஒரு வித புதிய யுக்தியை பயன்படுத்தும் கருத்தை கூறியுள்ளார் திருமா. அவரின் கருத்து தவெகவிலும், அதனை ஆதரிக்கும் கட்சிகளிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஜான் ஆரோக்கிய சாமி, விஷ்ணு ரெட்டி மற்றும் ஜெகதீஸ் ஆகியோரிடம், திருமாவின் ஸ்டேட்மென்ட் குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார் விஜய்.

    Advertisement

    அமைச்சரவையிலும் பங்கு ; திமுகவுடனும் நட்பு

    அப்போது, " திருமாவின் அண்மைகால பேச்சுக்கள் சரியாக இல்லை. நீங்கள் எல்லாம் சொன்னதால் தான் அவரின் ஆதரவை கேட்க சொன்னேன். ஆனா, நமது ஆட்சியில் இருப்பார்கள், திமுகவுடனும் நட்பாக இருக்கிறோம் என அவர் சொல்வது என்ன மாதிரி அரசியல்? அவர் மீதான நம்பகதன்மை குறைகிறது " என்று கேட்டுள்ளார்.

    இப்படி எல்லாம் செய்ய வேண்டாம் திருமா - விஜய் கோபம்

    மேலும், கூட்டணியிலிருந்து கொண்டு கான்ட்ராவெர்சிகளை உருவாக்க வேண்டாம், ஆதரவை வாபஸ் பெறுவதாக இருந்தால் வெளியேறட்டும் என அவரிடம் ஏற்கனவே சொல்லப்பட்டு விட்டது தானே? அப்புறம் ஏன் இப்படி முரண்பட்ட கருத்துக்களை சொல்லிக்கொண்டே இருக்கிறார்? என்றும் கேள்வி கேட்டுள்ளார் விஜய்.

    Advertisement

    உங்கள் ஆதங்கம் கரெக்ட் தான் விஜய்

    இதனை ஆமோதிக்கும் வகையில், " உங்கள் ஆதங்கம் கரெக்ட் தான். திருமாவின் பேச்சும் அரசியலும் ஆரோக்கியமாக இல்லை. குழப்பத்தை உருவாக்குகிறார். அப்படிப்பட்டவரின் கட்சி உறுப்பினர் அமைச்சரவையில் இருப்பது சந்தேகத்தை உருவாக்கும்.

    அரசு ரகசியம் எதிரிகளுக்கு லீக் ஆக வாய்ப்புண்டு. ஆட்சியில் பங்கெடுத்துக் கொண்டு விட்டு அரசியலில் இரட்டை சவாரி செய்வதில் உடன்படில்லை என ஆதவ் மூலம் மீண்டும் திருமாவிடம் வலியுறுத்தி விடலாம் " என்று ஜான் மற்றும் விஷ்ணு ஆகியோர் தெரிவித்திருக்கிறார்கள்.

    ஆதவ் அர்ஜுனாவிடம் பேசிய திருமா

    இந்த நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை தொடர்புகொண்டு, திருமாவின் அரசியல் நிலைப்பாட்டை விமர்சித்ததுடன், திருமாவிடம் சொல்ல வேண்டிய தகவல்கள் குறித்து அறிவுறுத்தியுள்ளார் முதல்வர் விஜய் என்கிறார்கள் தவெகவின் உள் வட்டாரங்களில் தொடர்புடையவர்கள்.

    Advertisement

    இதனால் விரைவில் ஆதவ் அர்ஜுனா திருமா உடன் பேச வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன.

    - சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    What Thirumavalavan saying is not good? TVK Vijay is upset with VCK chief