Vijay Sangeetha: லண்டனில் இருந்து சென்னை நீலாங்கரைக்கே வருகிறாரா சங்கீதா? விஜய்யுடன் சேர்ந்து வாழ முடிவு?

  • சென்னை: முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ் பெற்ற நிலையில் நீதிமன்றத்தில் என்ன நடந்தது, அடுத்த கட்டமாக என்ன நடக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

    Advertisement

    27 ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் இருந்து வந்த விஜய்- சங்கீதா தம்பதியினரிடையே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து கோரி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

    Advertisement

    அந்த மனுவில், விஜய்க்கு பிரபல நடிகை ஒருவருடன் தொடர்பிருக்கிறது. என்னை அவர் ஒதுக்கி வைத்திருக்கிறார். இது எனக்கு மனரீதியாக வேதனையை தருகிறது. எனவே விவாகரத்து கோருகிறேன் என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து அவர் கேட்டிருந்தார்.

    லண்டனில் இருந்தபடியே வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் சங்கீதா ஆஜரானார். முன்னதாக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறுவதால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாம்.

    விசாரணையின் போது நீதிபதி சுஜாதா, சங்கீதாவிடம் அரை மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினார். பின்னர் தனது விவாகரத்து மனுவை சங்கீதா திரும்ப பெற்றுக் கொள்வதாக தெரிவித்திருந்தார். இதை நீதிபதியும் ஏற்று வழக்கை முடித்து வைத்தார்.

    Advertisement

    அத்தனை குற்றச்சாட்டுகளை முன் வைத்த சங்கீதா, திடீரென வழக்கை வாபஸ் பெற்றது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு வேளை விஜய்யும் சங்கீதாவும் சமரசமாகிவிட்டார்களா என்ற கேள்வி எழுந்தது.

    விவாகரத்தை பொருத்தமட்டில் விஜய்க்கு அதில் உடன்பாடில்லை என சொல்லப்பட்டது. எப்படியாவது சங்கீதாவை சமாதானம் செய்ய வேண்டும் என விஜய் முடிவெடுத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஒரு வேளை விஜய்யின் தாய், தந்தை, சங்கீதாவிடம் பேச்சு நடத்தினர்களா, இல்லை மகன் ஜேசன் இதை சுமூகமாக்க முயன்று அந்த முயற்சியில் சங்கீதா சமரசமடைந்தாரா என பல்வேறு கேள்வி எழுந்துள்ளது.

    ஒரு வேளை இதன் பிறகு விஜய்யும் சங்கீதாவும் சேர்ந்து வாழ்வார்களா? இல்லை சட்டரீதியாக இல்லாமல் பரஸ்பரம் பிரிந்து வாழ்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இத்தனை நாட்களாக குழந்தைகளுக்காக லண்டனில் சங்கீதா இருந்த நிலையில் திவ்யா சாஷாவின் படிப்பு முடிந்து பட்டம் பெற்றுவிட்டார். மகன் ஜேசனும் இயக்குநராகிவிட்டார். எனவே சங்கீதா சென்னைக்கே வந்துவிடுவாரா, தனது தொழில்களை தனது தந்தையிடமோ அல்லது நம்பிக்கைக்குரியவர்களிடமோ ஒப்படைத்துவிட்டு விஜய்யுடன் சேர்ந்து வாழ்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    Advertisement

    எது எப்படியோ விவாகரத்து மனுக்களை திரும்ப பெற்றது ரசிகர்களிடையேயும் திரைத்துறையினர் மத்தியிலும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    யார் இந்த சங்கீதா

    இலங்கை தமிழ் தொழிலதிபர் சொர்ணலிங்கத்தின் மகள் சங்கீதா. இவர் லண்டனில் வசித்து வருகிறார்.

    இவர் விஜய்யின் தீவிர ரசிகை, 1996ஆம் ஆண்டு பூவே உனக்காக படத்தை பார்த்ததும் சென்னைக்கு வந்து எப்படியாவது விஜய்யை பார்க்க விரும்பினாராம். மேலும் ஒரு படத்தின் படப்பிடிப்புச் சென்ற சங்கீதா, விஜய்யின் நடிப்பை பாராட்டினாராம். அப்போது விஜய்க்கும் சங்கீதாவின் எளிமை மிகவும் பிடித்திருந்ததாம்.

    இதையடுத்து ஒரு முறை தனது பெற்றோரை வந்து பார்க்குமாறு விஜய் அழைத்தாராம். அதன் பேரில் சங்கீதாவும் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர்- சோபாவை நேரில் சந்தித்தாராம். அப்போது விஜய்யின் பெற்றோருக்கும் சங்கீதாவை பிடித்து விட்டதாம். இதனால் முறைபடி சங்கீதாவின் பெற்றோரிடம் விஜய்யின் பெற்றோர் பெண் கேட்டனர்.

    Advertisement

    இதையடுத்து கடந்த 1998ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி விஜய்யும் சங்கீதாவும் தங்கள் திருமணத்தை லண்டனில் பதிவு செய்தனர். பின்னர் அடுத்த ஆண்டு 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி இந்து முறைப்படி இவர்களுக்கு திருமணம் நடந்தது. இதையடுத்து ராஜா முத்தையா மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது.

    இவர்களுக்கு ஜேசன் சஞ்சய், திவ்யா சாஷா ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். இருவரும் விஜய்யின் படத்தில் சிறிய காட்சிகளிலும் பாடலிலும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    What will be next when Sangeetha withdraw her divorce case against Vijay? Whether they will live together?