வருகிறது பொது சிவில் சட்டம்.. அமித் ஷா அதிரடி அறிவிப்பு.. தமிழ்நாட்டில் விஜய் மௌனம்.. தவெக முடிவு என்ன?

  • சென்னை: இந்திய அரசியலில் இப்போது மிக முக்கியமான விவாதப் பொருளாக மாறியுள்ளது பொது சிவில் சட்டம். நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநிலங்களில் 2029-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

    Advertisement

    இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், குறிப்பாகத் தமிழக அரசியலிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் தற்போது விஜய்யின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் உள்ளன. இந்தச் சூழலில், மத்திய அரசின் இந்த அதிரடி அறிவிப்புக்கு தமிழக அரசு மற்றும் தவெகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது பொதுமக்களின் மனதில் எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வியாகும். அரசியல் பார்வையாளர்களும், பத்திரிகையாளர்களும் தவெக அரசின் அடுத்த கட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்பதை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

    பொது சிவில் சட்டம் என்றால் என்ன என்பதை எளிமையாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் மற்றும் சீக்கியர் போன்ற பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் வசிக்கிறார்கள். ஒவ்வொரு மதத்திற்கும் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல் மற்றும் சொத்துரிமை போன்ற தனிநபர் சட்டங்கள் தனித்தனியாக உள்ளன. பொது சிவில் சட்டம் என்பது இந்த மத ரீதியான தனிநபர் சட்டங்களை எல்லாம் நீக்கிவிட்டு, நாட்டின் அனைத்துக் குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான பொதுவான சட்டத்தைக் கொண்டுவருவதாகும்.

    Advertisement

    ஆனால், இந்தியா போன்ற பல மதங்களும், பல கலாச்சாரங்களும் கொண்ட ஒரு நாட்டில் அனைத்து மக்களுக்கும் ஒரே சட்டம் என்பது சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக, சிறுபான்மை மக்கள் மத்தியில் இந்தச் சட்டம் தங்களது கலாச்சார மற்றும் மத சுதந்திரத்தைப் பறிக்கும் ஒரு நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே எதிர்க்கட்சிகள் அனைத்தும் இதனை எதிர்த்து வருகின்றன.

    விஜய் மௌனம் ஏன்?

    தமிழகத்தைப் பொறுத்தவரை சமூக நீதி மற்றும் சமத்துவக் கொள்கைகளின் அடிப்படையில் அரசியல் இயங்கும் மண் இது. இதை திமுக, அதிமுக பாதுகாத்து வந்துள்ளது. தற்போது ஆளும் கட்சியாக உள்ள தவெக தனது தொடக்கக் காலத்தில் இருந்தே மதச்சார்பின்மை, சமூக நீதி மற்றும் அனைத்துச் சமூகத்தினரின் உரிமைகளைப் பாதுகாப்பது ஆகியவற்றைத் தனது முக்கியக் கொள்கைகளாக அறிவித்துள்ளது. எந்த ஒரு மதத்தினரையும் ஒடுக்கும் அல்லது அவர்களின் தனிப்பட்ட உரிமைகளில் தலையிடும் எந்தவொரு திட்டத்திற்கும் தமிழகம் எப்போதும் இடமளிக்காது என்பது வரலாற்று ரீதியான உண்மையாகும்.

    Advertisement

    இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, அமித்ஷா அறிவித்துள்ள பொது சிவில் சட்டத்தை தவெக அரசு ஒருபோதும் ஆதரிக்க கூடாது என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஆனால் தவெக இதில் நிலைப்பாட்டை அறிவிக்காமல் அமைதியாக உள்ளது.

    இந்தியாவின் பன்முகத்தன்மையும், மத நல்லிணக்கமும் தான் நாட்டின் உண்மையான பலம். ஆனால் இதில் தவெக எந்த நிலைப்பாட்டையும் எடுக்காமல் உள்ளது. . அனைத்து மத மக்களும் அமைதியாகவும் சமத்துவமாகவும் வாழ்வதை உறுதி செய்வதே மாநில அரசின் முதன்மைக் கடமையாகும். எனவே, மத்திய அரசு திணிக்க முயலும் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக தவெக அரசு தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்யுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    மேலும், மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் மத்திய அரசு எடுக்கும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எதிராகத் தமிழகம் எப்போதுமே குரல் கொடுத்து வந்துள்ளது. தவெக அரசும் தமிழக மக்களின் நலனுக்காகவும், கூட்டாட்சித் தத்துவத்தைக் காப்பதற்காகவும் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தனது எதிர்ப்பைத் தெரிவிக்குமா என்ற கேள்வி உள்ளது.

    அதோடு முஸ்லீம் லீக் கட்சி தவெக உடன் கூட்டணியில் உள்ளதால் விஜய் இந்த சட்டத்தை ஆதரிக்கவே முடியாது. இந்த விவகாரத்தில் தவெக அரசின் அதிகாரப்பூர்வமான அடுத்தடுத்த அறிவிப்புகள் தமிழக அரசியலில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமையும் என்பதில் ஐயமில்லை.

    English Summary

    What Will Be TVK Government's Stand on Uniform Civil Code? Tamil Nadu Political Analysis