WhatsApp: வாட்ஸ் அப் யூசர்களுக்கு சர்ப்ரைஸ்.. மெசேஜ்களை அனுப்ப புதிய வசதி! இனி செடூல் செய்து அனுப்பலாம்

  • சென்னை: வாட்ஸ் அப்பில் இனி மெசேஜ்களை முன்கூட்டியே செடூல் செய்து வைக்க முடியும் புதிய வசதி வர உள்ளது. பரபரப்பான வேலைகளுக்கு மத்தியில் ஏதேனும் குறிப்பிட்ட செய்தியையோ, புகைப்படங்களையோ நீங்கள் அனுப்ப நினைத்தால் அதனை இரண்டு வாரத்திற்கு முன்பே செடூல் செய்து எந்த தேதிக்கு அனுப்ப நினைக்கிறீர்களோ அந்த தேதிக்கு அனுப்ப முடியும்.

    Advertisement

    செல்போன் இணைய இணைப்பில் இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட்ட அந்த நேரத்திற்கு மெசேஜ்கள் சரியாக சென்றுவிடுமாம். எனவே, சிக்னல் இல்லாத இடத்தில் மாட்டிக்கொண்டோம். இண்டெர்நெட் ஆன் செய்யவிலை என நினைத்து கவலைப்பட தேவையில்லை.

    Advertisement

    வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்

    வாட்ஸ் அப் செயலி இல்லாத ஸ்மார்ட் போன்களை பார்க்கவே முடியாது என சொலும் அளவுக்கு தற்போது வாட்ஸ் அப் செயலி சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பல கோடி பேர் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். வாட்ஸ் அப்பை மெட்டா நிறுவனம் கைப்பற்றிய பிறகு பல்வேறு அதிரடி மாற்றங்களை வாட்ஸ் அப்பில் கொண்டு வருகிறது.

    புகைப்படங்கள், கோப்புகள், வீடியோக்கள் உள்ளிட்டவை பகிரும் வசதியை கொண்டு வந்த மெட்டா நிறுவனம், அதன்பிறகு பணம் அனுப்பும் வசதியையும் அறிமுகம் செய்து வருகிறது. வாட்ஸ் அப்பில் தற்போது பயனர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்த வசதி ஒன்றை சோதனை அடிப்படையில் மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

    Advertisement

    செடூல் செய்து அனுப்பலாம்

    அதாவது, வாட்ஸ் அப்பில் இனி மெசேஜ்களை முன்கூட்டியே செடூல் செய்து வைக்க முடியும். பரபரப்பான வேலைகளுக்கு மத்தியில் ஏதேனும் குறிப்பிட்ட செய்தியையோ, புகைப்படங்களையோ அனுப்ப மறந்துவிட்டோமே என இனி நினைக்க தேவையில்லை. தேவையான நேரத்திற்கு செடூல் செய்து வைத்தால் சரியாக அந்த நேரத்திற்கு மெசேஜ்கள் சென்று அடையும்.

    34 ஆயிரம் வாட்ஸ் அப் குரூப்கள்.. திரைமறைவில் காய்நகர்த்தும் தவெக! என்ன செய்ய போகிறது திமுக, அதிமுக?

    தனி நபர் சேட்டிங் மற்றும் குரூப்களிலும் செடூல் செய்து வைக்க முடியும். செடூல் மெசேஜ்களை அனுப்ப வேண்டியது இல்லை என நினைத்தால், அந்த மெசேஜ்களை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மீண்டும் பார்த்து அழித்துவிட முடியும். இதன் மூலம் மெசேஜ் அந்த நபருக்கு செல்வது தவிர்க்கப்படும். தற்போது சோதனை அடிப்படையில் இந்த வசதி சில குறிப்பிட்ட வெர்ஷன் ஆண்ட்ராய்டு போன்களில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    Advertisement

    இணைய வசதி இல்லையென்றாலும்..

    வாட்ஸ் அப்பில் வரக்கூடிய அப்டேட்களை பற்றிய அறிவிப்புகளை முன்கூட்டியே வெளியிடும் WABetaInfo இந்த தகவலை தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் வெர்ஷன் 2.26.40.7 ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இந்த வசதி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மெசேஜ்களை செடூல் செய்துவிட்டோம். குறிப்பிட்ட அந்த நேரத்தில் இணையதளம் செயல்பாட்டில் இருந்தால்தான் மெசேஜ்கள் அனுப்ப முடியுமா? என்ற கேள்வி உங்களுக்கு எழக்கூடும்.

    மின்சார சேவை தொடர்பான புகார்களை தெரிவிக்க வாட்ஸ் அப்பில் புதிய வசதி.. 24 மணி நேரமும் தீர்வு காணலாம்!

    உண்மையில், செல்போன் இணைய இணைப்பில் இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட்ட அந்த நேரத்திற்கு மெசேஜ்கள் சரியாக சென்றுவிடுமாம். எனவே, சிக்னல் இல்லாத இடத்தில் மாட்டிக்கொண்டோம். இண்டெர்நெட் ஆன் செய்யவிலை என நினைத்து கவலைப்பட வேனடாம். வாட்ஸ் அப் குரூப்களை பொறுத்தவரை, மெசேஜ்களை செடூல் செய்யும் நேரத்தில் யாரெல்லாம் குழுவில் இருக்கிறார்களோ அவர்களுக்கு மட்டும் சென்று சேரும். செடூல் செய்த பிறகு குரூப்களில் இணைந்தாலும் அவர்களுக்கு அந்த மெசேஜ் காட்டாது.

    Advertisement

    எத்தனை நாட்களுக்கு முன்பு செடூல் செய்ய முடியும்

    10 நிமிடங்கள் முதல் 2 வாரம் காலத்திற்குள் மெசேஜ்களை செடூல் செய்து வைக்க முடியும். அதாவது 2 வாரத்திற்கு முன்பே மெசேஜ்களை செடூல் செய்து வைக்க முடியும்.

    English Summary

    WhatsApp is set to introduce a new feature that allows you to schedule messages in advance. Amidst a busy schedule, if you wish to send a specific message or photo, you can now schedule it up to two weeks ahead of time to be sent on the date of your choice.