சென்னை: ஈரோடு கைகாட்டி வலசு பகுதியில், ஆசிரியை ஒருவரின் டூ வீலருக்குள் கோதுமை நாகப்பாம்பு ஒன்று புகுந்து பதுங்கி விட்டது.. அதிர்ச்சியடைந்த ஆசிரியை அளித்த தகவலின் பேரில், பாம்பு பிடி வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்தப் பாம்பை லாவகமாக பிடித்து சென்றது நினைவிருக்கலாம்... இந்த கோதுமை நாகம் எப்படிப்பட்டவை? ஆபத்தானவையா? இத்தகைய பாம்பு கடித்தால் முதலுதவியாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சோஷியல் மீடியாவில் தகவல்கள் பரவி வருகின்றன.
விவசாய நிலங்களில் நாம் நடக்கும்போது, நமக்கே தெரியாமல் நம் காலடிக்கு அருகில் ஏதோவொன்று ஊர்ந்து செல்வதை கண்டிருப்போம். அதுதான் கோதுமை நிற பாம்பு. பார்ப்பதற்கு அப்படியே காய்ந்த வைக்கோல் அல்லது கோதுமை கலரில் இருக்கும்.. இதை சட்டென அடையாளம் காணவும் முடியாது..
மெலிந்த தேகம், சின்ன தலை, கூர்மையான கண்கள் என்று இது பார்ப்பதற்கு மிகவும் அமைதியான உயிர் போல தோன்றும். ஆனால், இரை தேடுவதிலும், தன்னைத் தற்காத்து கொள்வதிலும் இந்த கோதுமை நிற பாம்ப கில்லாடியாம்.. மனிதர்கள் நடக்கும்போது ஏற்படும் அதிர்வுகளை உணர்ந்து, அந்த இடத்தை விட்டு மின்னல் வேகத்தில் மறைந்துவிடும் சுபாவம் கொண்டது. பயிர்களை அழிக்கும் எலிகளைக் கட்டுப்படுத்துவதால், இதை ஒரு "இயற்கை காவலன்" என்றும் சொல்கிறார்கள். இது மற்ற பாம்புகளை போல எப்போதும் சண்டைக்குப் போகும் ரகம் கிடையாது.. . அமைதியான சுபாவம் கொண்ட இவை, தேவையில்லாமல் மனிதர்களை தாக்குவதில்லை. தங்களை யாராவது மிரட்டினால் மட்டுமே சீறி எச்சரிக்கும். கோதுமை நிறப் பாம்பிற்கும், கோப்ரா எனப்படும் சாதாரண நல்ல பாம்பிற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. முதல் வித்தியாசதமே அதன் தோற்றம்தான்.. நல்ல பாம்பு படமெடுத்து ஆடும், ஆனால் கோதுமை நிறப் பாம்புகள் படம் எடுப்பதில்லை. நல்ல பாம்பு படமெடுத்து ஆடும். ஆனால், கோதுமை நிறம் இருப்பதால் மட்டும் எந்தப் பாம்பையும் நச்சற்றது என்று முடிவு செய்யக்கூடாது. ஆனால் சோஷியல் மீடியாவில் ஷேர் பகிரப்படும் வெளிநாட்டு ஆவணங்களில் குறிப்பிடப்படும் "கார்ன் ஸ்நேக்" (Corn Snake) என்ற பாம்பு, நம்ம ஊர் கோதுமை நிற பாம்பு கிடையாது.. சிலர் இவை இரண்டும் ஒன்று என்று நினைத்து விடுகிறார்கள்.. கார்ன் ஸ்நேக் என்பது வட அமெரிக்காவில் காணப்படும் ஒரு வகை செல்லப்பிராணி பாம்பு, இது முற்றிலும் நச்சற்றது. அதனை நம் ஊர் வயல்வெளிப் பாம்போடு குழப்பிக்கொள்ளக் கூடாது. எப்போதுமே, தெரியாத எந்தப் பாம்பையும் கையில் எடுக்காமல் இருப்பதே பாதுகாப்பானது. ஒருவேளை பாம்பு கடித்துவிட்டால் என்ன செய்வது? முதல்ல பயப்படவே கூடாது. பதற்றம் தான் விஷத்தை உடம்பில் வேகமாகப் பரப்பும். கடித்த இடத்தை சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும்.. ஆனால் அழுத்தித் தேய்க்க கூடாது.. கடித்த இடத்தை இறுக்கமாகக் கட்டக்கூடாது, கத்தியால் கீறவோ, வாய் வைத்து விஷத்தை உறிஞ்சவோ கூடாது. அந்த இடத்தை இதய மட்டத்திற்குக் கீழே இருக்குமாறு வைத்துக்கொண்டு, தாமதிக்காமல் உடனே அரசு மருத்துவமனைக்கு சென்றுவிட வேண்டும்.. சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சையும், தேவையானால் எதிர்விஷ (Anti-snake venom) மருந்தும் அளிக்கப்பட்டால், பெரும்பாலான பாம்புக்கடி நோயாளிகள் குணமடைய முடியும். இயற்கையை அதன் வழியில் விட்டுவிட்டு, நாமும் கவனமாக இருப்பதே சிறந்தது என்கிறார்கள் பாம்பு பிடி வீரர்கள். அதேபோல பாம்பின் நிறத்தை வைத்து அது விஷப்பாம்பா, நச்சற்றதா என்று ஒருபோதும் முடிவு செய்யக்கூடாது. எந்தப் பாம்பையும் பாதுகாப்பான தூரத்தில் இருந்து மட்டுமே பார்க்க வேண்டும். சமீபத்தில் ஆம்பூரில் முனியம்மா என்ற பெண்மணி வீட்டில் 7 அடி நீளமுள்ள கோதுமை நாகப்பாம்பு புகுந்துவிட்டது.. பாம்பை கண்டதுமே முனியம்மாள் அதிர்ச்சியடைந்துள்ளார்.. ஆனால் உதவிக்கு யாரையும் கூப்பிடாமல், பாம்பையும் வெளியேயும் விரட்டாமல் இருந்துள்ளார்.. இப்படியே 3 நாட்கள் பாம்புடன் அதே வீட்டில் தங்கி தூங்கி வந்துள்ளார்.. 4வது நாள்தான் பக்கத்து வீட்டாரிடம் பாம்பு வீட்டிற்குள் இருப்பதை முனியம்மா சொல்லவும், உடனே அக்கம்பக்கத்தினர் வனத்துறைக்கு தகவல் தந்தனர். வனத்துறையினர்அதை லாவகமாக பிடிக்க முயலவும், அந்த பாம்பு படம் எடுத்துள்ளது.. உடனே இதைப்பார்த்த முனியம்மா, அந்த நாகப்பாம்பிற்கு கற்பூரம் ஏற்றி வழிபட்டார்.. நாகராஜா, ஏன் என்னை இப்படி பயமுறுத்துகிறாய்? எங்கேயாவது கண் தெரியாத இடத்திற்கு போ என்று கை கூப்பி வழிபட்டார். அதற்கு பிறகு வனத்துறையினர் அந்த பாம்பை பிடித்து சென்றது நினைவிருக்கலாம்...!!!கோதுமை நிறத்தில் காணப்படும் வயல்வெளிப் பாம்புகள்
கார்ன் ஸ்நேக் என்பது என்ன
பெங்களூர் போக்குவரத்தை முடக்கிய நல்ல பாம்பு.. இப்படி நடக்கும்னு யாருமே எதிர்பார்க்கலை
பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்?
கீரி-பாம்பு சண்டையால் பருந்துக்கு கொண்டாட்டம்! தவெக vs திமுக மோதலால் படையெடுக்கும் அபாயங்கள்
முனியம்மா வீட்டில் புகுந்த பாம்பு