சென்னை: இந்த தீபாவளிக்கு பலரும் சொந்த ஊருக்கு செல்ல ஆர்வமாக இருக்கிறார். ஏனெனில் இந்த முறை நவம்பர் 8ம் தேதி ஞாயிறு அன்று தான் தீபாவளி வருகிறது. சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வரும். எனவே பலரும் வெள்ளிக்கிழமை அன்று ஊருக்கு செல்ல ஆர்வமாக இருக்கிறார்கள். அதேபோல் சிலர் வியாழக்கிழமையே கூட செல்ல திட்டமிட்டிருப்பார்கள். சிலர் சனிக்கிழமை புறப்படப்படுவார்கள். யார் யார் எந்த நாளில் புக்கிங் செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
வழக்கமாக தீபாவளி பண்டிகை வார நாட்களில் அதிகமாக வரும். ஞாயிறுகளில் தீபாவளி வருவது அபூர்வம், ஆனால் இந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை வருகிறது. பலரும் ஞாயிறு தீபாவளி என்பதால், சொந்த ஊர்களுக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதற்காக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யவே விரும்புவார்கள். அப்படி ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்ய வேண்டும். அதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக வார நாள்களில் தீபாவளி பண்டிகை வந்தால், தீபாவளி பண்டிகைக்கு முன்பு அல்லது அதனைத் தொடர்ந்து ஒரு சில நாள்கள் விடுமுறை எடுத்து வார இறுதி வரை அதனை நீட்டித்தே மக்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வார்கள். அரசும் தீபாவளி பண்டிகை சமயத்தில் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிப்பது உண்டு. தீபாவளிக்கு முதல் நாளும் சில சமயங்களில் விடுமுறை அளிப்பது உண்டு. ஆனால் ஞாயிறு அன்று தீபாவளி என்பதால், சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாள் தான் அதிகபட்சமாக தீபாவளி விடுமுறை இருக்க போகிறது. இந்த முறை பலர், தீபாவளிக்கு முன்பு இரண்டு முதல் ஐந்து நாள்கள் கூட விடுமுறை எடுக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ரயிலில் யார் யார் எந்த தேதியில் ஊருக்க போக திட்டமிட்டுள்ளீர்களோ, அதற்கு ஏற்றபடி, ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்வது அவசியம் ஆகும். அதேநேரம் எல்லாருமே வியாழன், வெள்ளி, சனி ஆகிய மூன்று நாட்களில் கிளம்ப முயற்சி செய்வார்கள் என்பதால், சென்னை கடுமையான நெரிசலை சந்திக்கும். அதேபோல் ரயிலில் டிக்கெட் கிடைப்பதும் மிகவும் சவாலானதாகவே இருக்கும். அதேபோல் ரயிலில் பலரும் திங்கள் அன்று தான் கிளம்புவார்கள் என்பதால், அன்றைய நாளில் டிக்கெட் முன்பதிவு செய்து சென்னை திரும்புவதும் மிகவும் சவாலானது ஆகும். யார் யார் எந்த நாளில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம். தீபாவளி நவம்பர் 8ஆம் தேதி வருகிறது. எனவே, நவம்பர் 5ஆம் தேதி வியாழக்கிழமை ஊருக்குச் செல்ல விரும்புவோர் செப்டம்பர் 6ஆம் தேதி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். நவம்பர் 6ம் தேதியான வெள்ளிக்கிழமை ஊருக்குச் செல்வதாக இருந்தால் செப்டம்பர் 7ஆம் தேதி டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். நவம்பர் 7ம் தேதி சனிக்கிழமை ஊருக்கு செல்ல திட்டமிட்டிருந்தால், செப்டம்பர் 9ம் தேதி டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். அதுபோல, சென்னை, பெங்களூரூ,கோவை உள்பட நீங்கள் வேலை செய்யும் நகரத்திற்கு நவம்பர் 9ம் தேதி அன்று திங்கள்கிழமை திரும்புவதாக இருந்தால் செப்டம்பர் 10ஆம் தேதி முன்பதிவு செய்ய வேண்டும். அதேபோல் நவம்பர் 10ம் தேதி செவ்வாய்க்கிழமை ரயிலில் செல்ல செப்டம்பர் 11ஆம் தேதியும் முன்பதிவு செய்ய வேண்டும். எல்லா நாளுமே ரயில் டிக்கெட் முன்பதிவுகள் காலை 8 மணிக்கு தொடங்கும். சரியாக 8.00மணிக்கு தொடஙகி 8.05க்குள்மொத்த டிக்கெட்டும் முடிந்துவிடும. எனவே, கவனமாக அனைத்து விவரங்களையும் தயாராக வைத்துக் கொண்டு காலை 8 மணிக்கு ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முன்பு, எளிதான பேமெண்ட் ஆப்சனை தேர்வு செய்யுங்கள். ஏனெனில் ஒரு நொடி கூட உங்களுக்கு டிக்கெட் கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது.