மின்சார வாரியம் எப்போது மாதாந்திர பில்லிங் முறைக்கு மாறும்? 200 யூனிட் இலவச மின்சாரம் ரத்தாகிறதா?

  • சென்னை: தமிழக மின்சார வாரியத்தில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்ட பிறகுதான், மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை வரும் என்று தமிழக மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.. ஊழியர்களை அதிகப்படுத்தி விட்டுதான் மாதந்தோறும் கணக்கெடுப்பு நடத்துவது சாத்தியமாகும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.. செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், வாரியத்தின் தற்போதைய கடன்கள் மற்றும் புதிய திட்டங்கள் பற்றியும் விளக்கினார்.

    Advertisement

    அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் பேசும்பொதுஇ பேட்டியில் "பொதுமக்கள் நீண்ட நாட்களாக இந்த மாதாந்திர இபி பில்லிங் முறையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.. ஆனால் மாநிலம் முழுக்க இதை உடனே கொண்டு வருவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன.

    Advertisement

    மின்வாரியம் ரீடிங்

    வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ரீடிங் எடுக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை இப்போது குறைவாக உள்ளது.. பல்லாயிரக்கணக்கான இடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் காலியாகவே இருக்கின்றன.. ஆள் இல்லாததால்தான் monthly billing தள்ளிப்போய்க்கொண்டிருக்கிறது.. இந்த காலி பணியிடங்களை நிரப்ப ஆரம்பகட்ட வேலைகள் இப்போது நடக்கிறது.. புது ஆட்கள் வந்த பிறகுதான் மாதாந்திர பில்லிங் சாத்தியம்" என்று நேரடியாகக் குறிப்பிட்டார்..

    மேலும் தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் கணக்கிடப்படுகிறது.. இதனால் ஸ்லாப் ரேட் மாறி கூடுதல் கட்டணம் கட்ட வேண்டிய நிலை இருப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் சொல்லி வருகிறார்கள்.. இதனால்தான் இந்த மாதாந்திர முறையைக் கொண்டு வர அரசு யோசித்தது..

    Advertisement

    மின்சார வாரியம் - 250000 கோடி ரூபாய் கடன்

    ஆனால் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாகவே இந்த திட்டம் தாமதமாகிறது.. இப்போது மின்சார வாரியம் சுமார் 250000 கோடி ரூபாய் கடனில் இயங்குகிறது.. இந்த நஷ்டத்தை சரிசெய்யும் வேலைகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கின்றன.. நஷ்டத்தைக் குறைத்து மக்களுக்கு தடையற்ற மின்சாரம் தருவதுதான் இப்போதைய முக்கிய நோக்கம்..

    பணியாளர்கள் குறைவாக இருப்பதால் இப்போது இருக்கும் ஊழியர்களுக்கும் வேலைப்பளு அதிகமாக உள்ளது.. இதனால் குறிப்பிட்ட நாட்களுக்குள் எல்லா இடங்களிலும் மாதந்தோறும் கணக்கெடுப்பு நடத்துவது கஷ்டமாக இருக்கிறது.. இதனால்தான் காலி பணியிடங்களை உடனே நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.. மின்சார வாரியத்தை நஷ்டத்தில் இருந்து மீட்பதுதான் அரசின் நோக்கம்.. தற்போது காலி இடங்களை நிரப்ப வேலைகள் தொடங்கி உள்ளதால், ஆட்கள் பற்றாக்குறை சரியானதும் இந்த மாதாந்திர கணக்கெடுப்பு முறை முழுமையாக நடைமுறைக்கு வரும்" என்றார்.

    Advertisement

    200 யூனிட் இலவச மின்சாரம்

    கடைசியாக 200 யூனிட் இலவச மின்சாரம் குறித்து எழுந்த கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்தார்.. "மாதம் ஒருமுறை மின்கட்டண முறை கொண்டு வரப்பட்டாலும், மக்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 200 யூனிட் இலவச மின்சார சலுகை எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது.. கணக்கீட்டு முறை மாறினாலும் பொதுமக்கள் தங்களுக்குரிய இலவச மின்சார பலனை வழக்கம்போல முழுமையாகப் பெற வழிவகை செய்யப்படும்" என்று அமைச்சர் நிர்மல்குமார் உறுதி அளித்தார்..

    2 மாதத்துக்கு ஒருமுறை

    பொதுமக்கள் தரப்பில் இந்த மாதாந்திர மின் கட்டண முறைக்கு நீண்ட நாட்களாகவே கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுப்பதால் கட்டண விகிதம் மாறுபட்டு கூடுதல் தொகை கட்ட வேண்டிய நிலை இருப்பதாக நுகர்வோர்கள் தரப்பில் சொல்லப்பட்டது.. புதிய ஊழியர்கள் வேலைக்கு வந்ததும் கணக்கெடுப்பு நடக்கும் பணிகள் மாதந்தோறும் நடத்தப்படும் என்று மின்துறை தரப்பிலும் விளக்கம் தரப்பட்டுள்ளது..!!

    English Summary

    When Will the Electricity Board Switch To Monthly Billing?.. Is 200 Units Free Electricity Getting Cancelled? Minister Nirmal Kumar Clarifies Key Update