அபிஜீத் தீப்கே, நேஹா எங்கே? மூடி மறைக்கும் டெல்லி போலீஸ்.. நேரடியாக கேள்வி கேட்ட ஸ்டாலின்!

  • சென்னை: டெல்லியில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே மற்றும் நேஹா போரா ஆகியோர் எங்கே என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இருவரும் எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவலை கூட வெளியிடாமல் இருப்பது மனிதாபிமானமற்ற சட்டவிரோத செயல் என்றும் ஸ்டாலின் சாடியுள்ளார்.

    Advertisement

    எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் முறசிகேடு செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி சிஜேபி மற்றும் மாணவர் அமைப்புகள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று டெல்லியில் தேசியக் கொடியுடன் பேரணி நடத்தப்படும் என்று சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே அறிவித்திருந்தார்.

    Advertisement

    இதனைத் தொடர்ந்து அபிஜீத் தீப்கே தங்கியிருந்த இடத்திற்கு நேரில் சென்ற காவலர்கள், அனுமதி அளிக்கப்படாததால் போராட்டத்தில் பங்கேற்க கூடாது என்று நேரில் நோட்டீஸ் வழங்கினர். இருப்பினும் அபிஜீத் தீப்கே போராட்டத்திற்கு செல்ல முயன்றார். இதனால் தடையை மீறி போராட்டத்திற்கு புறப்பட்ட அபிஜீத் தீப்கேவை காவல்துறை கைது செய்தது.

    அபிஜீத் தீப்கே மட்டுமல்லாமல் சமூக செயற்பாட்டாளர் நேஹா போராவையும் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தரப்பில், இந்த அரசு ஏன் இளைஞர்களை தீவிரவாதிகள் போல் நடத்துகிறது? அபிஜீத் தீப்கேவை அடையாளம் தெரியாத இடத்திற்கு டெல்லி போலீஸ் அழைத்து சென்றுள்ளது. அவரை எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

    Advertisement

    போலீஸ் எங்களுக்கு பதில் சொல்லி ஆக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அபிஜீத் தீப்கே மட்டுமல்லாமல் நேஹா போராவையும் போலீசார் தடுப்பு காவலில் கைது செய்த நிலையில், எங்கு வைத்துள்ளார்கள் என்பதே ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இதனால் அபிஜீத் தீப்கே எங்கே என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், அபிஜீத் தீப்கே எங்கே? நேஹா போரா எங்கே? எங்கே இருக்கிறார்கள் என்ற தகவல் கூட சொல்லாமல், அவர்களை தடுப்பு காவலில் வைத்திருப்பது மனிதாபிமற்ற செயல் என்பதோடு சட்டவிரோதமாகும். அமைதியான போராட்டங்களை ஒடுக்குவதை நிறுத்திவிட்டு, மத்திய அரசு அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

    Advertisement

    இந்த நடவடிக்கையை நசுக்க மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முறையும், அதனை வலிமையாகவே மாற்றும். தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்தாக வேண்டும். அதனை தவிர்த்து மத்திய அரசுக்கு வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ளார். ஸ்டாலினை தொடர்ந்து மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியும் அபிஜீத் தீப்கே மற்றும் நேஹா போராவுக்காக குரல் கொடுத்துள்ளார்.

    English Summary

    Where is Abhijeet Dipke and Neha? DMK Chief Stalin Slams Union Government Over Secret Detentions