மேயர் பிரியா எங்கே? விஜய் சென்னை மழை ஆய்வில் மிஸ்ஸிங்.. தவெக லேட் என அடித்து சொல்லும் திமுக

  • சென்னை: சென்னையில் ஒரே இரவில் கொட்டி தீர்த்துள்ளது கனமழை.. மறுநாள் காலையிலேயே பல இடங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டார்கள். இதனிடையே, மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் விஜய் ரிப்பன் மாளிகைக்கு வந்தபோது சென்னை மேயர் பிரியா எங்கே என்ற கேள்வி சோஷியல் மீடியாவில் எழுந்துள்ளது.. மேயர் மட்டுமல்ல, துணை மேயர் மகேஷ்குமாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற புகாரும் இப்போது பேசுபொருளாகியுள்ளது. என்ன நடந்தது?

    Advertisement

    சென்னையில் சனிக்கிழமை மாலை தொடங்கிய கனமழை இரவெல்லாம் வெளுத்து வாங்கியது. பல இடங்களில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். இதையடுத்து, மழைநீர் தேங்கிய பகுதிகளில் தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகளும் ஊழியர்களும் தீவிரமாக ஈடுபட்டனர்.

    Advertisement

    சென்னை மழை

    இதற்கிடையே, மழை பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் விஜய் ரிப்பன் மாளிகையில் உள்ள கன்ட்ரோல் ரூமுக்கு சென்றார். ஆனால், இந்த ஆய்வின்போது மேயர் பிரியா அங்கு இல்லாதது குறித்து சோஷியல் மீடியாவில் கேள்விகள் எழுந்தன.

    மழைக்கால முன்னேற்பாடுகள் தொடர்பாக தவெக அரசுக்கு எதிராக திமுக நடத்திய போராட்டத்துக்கு சில நாட்களுக்கு முன்பு பிரியா தலைமை தாங்கியிருந்தார். அப்போது, மாநகராட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மழைக்காலப் பணிகளில் ஓரங்கட்டப்படுவதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், நேற்றைய தினம் பிரியா அங்கு இல்லை.. அதேபோல, துணை மேயர் எம். மகேஷ்குமாரும் அங்கு இல்லை..

    Advertisement

    முதலமைச்சர் விஜய் ஆய்வு

    முதலமைச்சர் விஜய் ரிப்பன் மாளிகைக்கு வந்தபோது தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று மகேஷ்குமாரே அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளார்..

    "மாநகராட்சி அதிகாரிகளிடம் கள ஆய்வுக்கு செல்ல வேண்டும் என்று கேட்டால், உயர் அதிகாரிகளுடனான கூட்டங்களில் இருப்பதாக பதில் சொல்கிறார்கள், காலையில் ஆய்வுக்கு வருமாறு கேட்டபோது, அதற்கான பதில் மாலையில்தான் கிடைக்கிறது, இதனால், அதிகாரிகளுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையே தகவல் தொடர்பில் தாமதம் ஏற்படுகிறது, உரிய நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை..

    துணை மேயர் அப்செட்

    அதுமட்டுமல்ல, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, மழைநீர் வடிகால் வலையமைப்பு செயல்பட்டு வருகிறது என்றார்.. ஆனால், இப்போதுள்ள மழைநீர் வடிகால் கட்டமைப்பு திமுக ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது" என்றெல்லாம் ஆவேசமாக கூறுகிறார் துணை மேயர் மகேஷ்குமார்.

    Advertisement

    இவ்வாறு தவெக அரசு மீது குற்றச்சாட்டுகளை வைத்தாலும், நேற்று அதிகாலை சுமார் 1 மணிக்கு மகேஷ்குமார் சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். பிராட்வே, திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று மழை பாதிப்புகளைப் பார்வையிட்டார்... மழைநீர் வடிகால்களைச் சுத்தம் செய்யவும், அவற்றில் அடைத்துள்ள கழிவுகளை அகற்றவும் தற்காலிகமாகக் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    மேயர் பிரியா எங்கே

    இந்நிலையில் ஒரு பிரபல சேனலுக்கு மேயர் பிரியா பேட்டி தந்துள்ளார்.. அதில், "தவெக அரசு மழை முன்னெச்சரிக்கை பணிகளை தாமதமாக தொடங்கியது.. வடகிழக்குப் பருவமழைக்கான முன்னேற்பாடுகளை ஜூன் மாதத்திலேயே தொடங்கியிருக்க வேண்டும். மாநகராட்சியுடன் மழை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தை ஆகஸ்ட் மாதத்திலேயே நடத்தியிருக்க வேண்டும்.. ஆனால் 4 நாட்களுக்கு முன்புதான் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

    Advertisement

    சென்னையில் கனமழை பெய்தபோதும் மக்கள் மறுநாள் காலையில் பெரிய இடையூறுகள் எதுவுமேயில்லாமல் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியதற்கு, திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளே காரணம்.. அதற்காகச் செலவிடப்பட்ட ரூ.4,000 கோடி வீண் என்ற விமர்சனம் தவறு" என்றெல்லாம் தன்மீதான விமர்சனங்களுக்கு பதிலடி தந்துள்ளார்.

    English Summary

    Where Was Mayor Priya During Vijay’s Chennai Rain Inspection? DMK Slams TVK for late Action