பாகிஸ்தான் அணு ஆயுதத்தை பயன்படுத்த போகிறது.. நவீன நாஸ்டர்டாமஸ் வெளியிட்ட வார்னிங்!

  • சென்னை: அணு ஆயுத யுகத்தில் உலக நாடுகளை அச்சுறுத்தும் மிகப்பெரிய கேள்வி ஒன்று உள்ளது.. அது யாரிடம் அதிக அணு ஆயுதங்கள் இருக்கின்றன என்பது அல்ல.. மாறாக, எதிர்காலத்தில் அதை முதலில் பயன்படுத்தப் போகும் நாடு எது என்பதே ஆகும்.

    Advertisement

    இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இதுவரை போர்க்களத்தில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை என்றாலும், அணு ஆயுத பலம் கொண்ட நாடுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    Advertisement

    இச்சூழலில், அரசியல் மற்றும் உலக நிகழ்வுகளை முன்கூட்டியே கணிப்பதில் புகழ்பெற்ற கனடா நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர் பேராசிரியரான நவீனகால நாஸ்டர்டாமஸ் என்று அழைக்கப்படும்.. ஜியாங் சுவெசின், எதிர்காலத்தில் அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்தும் சாத்தியம் கொண்ட நாடு பாகிஸ்தான் தான் என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் டொனால்ட் டிரம்பின் அரசியல் வெற்றி உள்ளிட்ட பல சர்வதேச விவகாரங்களை முன்னரே கணித்தவர் இவர் ஆவார்.

    ராஜ ஷமானி உடனான நேர்காணல்

    பிரபல யூடியூபர் ராஜ் ஷமானியின் போட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற பேராசிரியர் ஜியாங், பொதுவாக சர்வதேச அளவில் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிரான தடை உள்ளதால், நமது வாழ்நாளில் அணு ஆயுதப் போர் நடைபெற வாய்ப்பில்லை என்பதே எனது தனிப்பட்ட கருத்து.. ஆனால், ஒருவேளை அத்தகைய சூழல் ஏற்பட்டால், அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்தும் நாடாக பாகிஸ்தானே இருக்கும்" என்று எச்சரித்துள்ளார்.

    Advertisement

    பாகிஸ்தானின் பலவீனமே ஆபத்து

    பாகிஸ்தான் அணு ஆயுதத்தை முந்திக்கொண்டு பயன்படுத்தும் என்று கூறுவதற்கு அதன் ராணுவ பலம் காரணம் அல்ல.. மாறாக அந்நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் நிர்வாக பலவீனங்களே காரணம் என ஜியாங் விளக்கியுள்ளார்.

    அந்நாடு கடுமையான பொருளாதார நெருக்கடி, அரசியல் ஊழல் மற்றும் உள்நாட்டுப் பிரிவினைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அவசர காலங்களில் அல்லது கடுமையான போர்ச் சூழலில் ராணுவ முடிவுகளைக் கட்டுப்படுத்தும் ஒழுங்குமுறை அமைப்புகள் அங்குச் சரியாக இயங்காமல் போகலாம் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

    இந்தியா - பாகிஸ்தான் அணு ஆயுதக் கொள்கை வேறுபாடு*

    இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான அணு ஆயுதக் கோட்பாடுகள் முற்றிலும் மாறுபட்டவை. இந்தியா முதலில் பயன்படுத்த மாட்டோம்' (No First Use) என்ற தெளிவான கொள்கையைக் கடைப்பிடிக்கிறது.
    பாகிஸ்தான் அத்தகைய கொள்கையை ஏற்காமல் தெளிவான ஒரு நிலைப்பாடு இல்லாமல் இருந்து வருகிறது.

    Advertisement

    வழக்கமான ராணுவ பலத்திலும் பொருளாதாரத்திலும் இந்தியாவை விட பின்தங்கியுள்ள பாகிஸ்தான், தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளும் கடைசி வழியாக அணு ஆயுதங்களை முன்னிறுத்தும்.

    ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) தகவல்படி, இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்களும் (அதில் 12 முதல் முறையாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன), பாகிஸ்தானிடம் சுமார் 170 அணு ஆயுதங்களும் உள்ளன.

    1999 கார்கில் போருக்குப் பிந்தைய சூழல், 2019 பாலாகோட் வான்வழித் தாக்குதல் மற்றும் 2025 பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து நடைபெற்ற 'ஆபரேஷன் சிந்தூர்' உள்ளிட்ட பல்வேறு தருணங்களில், பாகிஸ்தான் தலைவர்கள் மறைமுக அணு ஆயுத எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.

    Advertisement

    குறிப்பாக, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் அமெரிக்காவில் பேசியபோது, "நாங்கள் ஒரு அணு ஆயுத நாடு.. நாங்கள் அழியும் நிலை வந்தால் உலகத்தில் பாதியை எங்களுடன் சேர்த்து அழிப்போம்" என்று குறிப்பிட்டதாகச் செய்திகள் வெளியானது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    வழக்கமான போரில் தனது இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது, பாகிஸ்தான் அணு ஆயுதத்தை ஒரு தற்காப்பு அரணாக இல்லாமல் மற்ற நாடுகளையும் சேர்த்து அழித்து.. தப்பிக்கும் வழியாகப் பயன்படுத்தக்கூடும் என்ற பேராசிரியர் ஜியாங்கின் எச்சரித்து உள்ளார்.

    English Summary

    Which Country Will Use Nuclear Weapons First? Professor Jiang’s Prediction on Pakistan