சென்னை: தக்காளி இல்லாத சமையலே இல்லை.. . சாம்பார், ரசம் முதல் குழம்பு, தொக்கு வரை தக்காளியின் பயன்பாடு அதிகம். ஆனால் கடைகளில் கிடைக்கும் நாட்டு தக்காளி, ஹைபிரீட் தக்காளி இரண்டில் எது சிறந்தது என்ற கேள்வி சிலருக்கு இன்னமும் இருக்கிறது. சுவையில் தொடங்கி சத்துக்கள் வரை இரண்டுக்கும் சில வேறுபாடுகள் இருக்கின்றன. அதேநேரம் ஹைபிரீட் தக்காளி என்றாலே அதை ஒதுக்க வேண்டுமா? விவசாயிகளுக்கு அது எந்த அளவுக்கு லாபம் தருகிறது? அதை பற்றி இங்கே உதாரணத்துடன் பார்ப்போம்..!!
நாட்டு தக்காளி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அதன் புளிப்புச் சுவைதான். பொதுவாக இதில் புளிப்புத்தன்மையும் நீர்ச்சத்தும் அதிகமாக இருக்கும். தோல் மென்மையாகவும், காய்கள் ஒரே மாதிரியான வடிவத்தில் இல்லாமலும் காணப்படும்.
சமைக்கும்போது எளிதில் கூழாக மாறும் தன்மை இருப்பதால் ரசம், சாம்பார், குழம்பு, தொக்கு போன்றவற்றுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின் சி, லைக்கோபீன் உள்ளிட்ட சத்துக்களும் உள்ளன. சில நாட்டு ரகங்கள் உள்ளூர் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு நன்றாக வளரக்கூடியவை. ஆனால் நீண்ட நாட்கள் சேமித்து வைப்பது சற்று சிரமமாக இருக்கலாம். ஹைபிரீட் தக்காளி என்பது இரண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட தக்காளி ரகங்களை இணைத்து உருவாக்கப்படும் புதிய ரகமாகும். இது மரபணு மாற்றப்பட்ட தக்காளி கிடையாது. பொதுவாக நாட்டு தக்காளியைவிட புளிப்புத்தன்மை குறைவாகவும், லேசான இனிப்புச் சுவையுடனும் இருக்கும். காய்கள் ஒரே அளவு மற்றும் வடிவத்தில் இருப்பதுடன், சில ரகங்களில் தோல் தடிமனாகவும் இருக்கும். இதனால் போக்குவரத்தின்போது சேதமடைவது குறையும். நீண்ட நாட்கள் சேமித்து வைக்கக்கூடிய ரகங்களும் உள்ளன. அதிக மகசூல், நோய் எதிர்ப்பு திறன் போன்றவற்றை கருத்தில் கொண்டு பல ஹைபிரீட் ரகங்கள் உருவாக்கப்படுகின்றன. அதற்காக ஹைபிரீட் என்றாலே சத்துக்கள் குறைவு என்றோ, ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல என்றோ நினைக்க வேண்டியதில்லை.. இதற்கு உதாரணமாக திரிபுரா மாநில விவசாயி கிருஷ்ண கோபால் தாஸின் அனுபவம் பற்றி சொல்லலாம்.. ஆம், இவர் ஏற்கனவே NS 962 என்ற ஹைபிரீட் தக்காளியை பயிரிட்டு வந்தார். ஆனால் பாக்டீரியா வாடல் நோய் தாக்குதலால் செடிகள் காய்ந்து இறந்துவிட்டன.. இதனால் மகசூலும் குறைந்துவிட்டது.. இதையடுத்து கிருஷி விக்யான் கேந்திரா விஞ்ஞானிகள் ஸ்வர்ணா அன்மோல் என்ற நோய் எதிர்ப்பு திறன் கொண்ட ஹைபிரீட் ரகத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தி சோதனை செய்தனர். இதில் ஒரு ஹெக்டேருக்கு பழைய ரகத்தில் 45.20 டன் மகசூல் கிடைத்த நிலையில், புதிய ரகத்தில் 58.60 டன் கிடைத்தது. அதாவது 29.65 சதவீதம் மகசூல் அதிகரித்தது. நிகர வருமானமும் ரூ.4.90 லட்சத்தில் இருந்து ரூ. 6.83 லட்சமாக உயர்ந்தது இதனால் ஒரு ஹெக்டேருக்கு கூடுதலாக 1.93 லட்சம் ரூபாய் வருமானமும் கிடைத்துள்ளது. அதாவது ஹைபிரீட் ரகத்திலேயே இப்படியொரு வருமானத்தை இன்று சம்பாதித்துள்ளார் திரிபுரா மாநில மாநில விவசாயி. ஆக, நாட்டு தக்காளிக்கு சுவையில் தனிச்சிறப்பு இருக்கிறது. ஹைபிரீட் தக்காளியில் மகசூல், நோய் எதிர்ப்பு திறன் என பல நன்மைகள் இருக்கின்றன. சரியான ரகத்தை தேர்வு செய்தால் ஹைபிரீட் தக்காளியும் விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை கொடுக்கும் என்பதற்கு இந்த விவசாயியின் வெற்றியே உதாரணம்...!!நாட்டுத் தக்காளி நன்மை
ஹைபிரீட் தக்காளி
விவசாயியின் சாதனை
ரீல்ஸில் கலக்கும் தளுக்கு புளுக்கு தக்காளி, தேங்காய் தேனாண்டாள்.. சிரிக்க வைக்கும் பின்னணி!
மகசூல் லாபம்