தவெக எம்எல்ஏக்கள் யார் யாரிடம் பேரம் பேசப்பட்டது? போலீஸ் விசாரணையில் வெளிவந்த புதிய தகவல்

  • சென்னை: ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ மட்டும் இன்றி மேலும் சில தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. தவெக ஆட்சி அமைப்பதற்கு முன்பாக தற்போது அமைச்சரும், அவிநாசி தொகுதி எம்.எல்.ஏவுமான கமலியிடமும் பேரம் நடந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தவெக எம்.எல்.ஏக்கள் யார் யாரிடம் பேரம் பேசப்பட்டது? யார் யார் இந்த பேரத்தில் ஈடுபட்டனர் என்பது குறித்து தீவிர விசாரணையில் போலீசார் களம் இறங்கியுள்ளனர்.

    Advertisement

    வேலூர் எம்.எல்.ஏ வினோத் கண்ணன், கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ முகுந்தன், நாமக்கல் எம்.எல்.ஏ திலீப், பொன்னகரம் தொகுதி எம்.எல்.ஏ கஜேந்திரன், திருப்பத்தூர் எம்.எல்.ஏ திருப்பதி உள்ளிட்டோரிடமும் பேரம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Advertisement

    பேரம் பேசியதாக 4 பேர் கைது

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ இளையராஜா பரபரப்பு புகார் ஒன்றை சென்னை போலீஸ் கமிஷனரிடம் கொடுத்தார். அதில், யூடியூபர் திருநாவுக்கரசு என்னிடம் போன் பேசினார். ஒரு பெரிய கட்சி கேட்டுக்கொண்டதின் பேரில் நான் உங்களிடம் பேசுகின்றேன். நீங்க கட்சி மாறினால் ரூ.35 கோடி தருவதாகவும், சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக சொன்னால் போதும் என்று கூறி பேரம் பேசியதாகவும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இளையராஜா புகார் தெரிவித்து இருந்தார்.

    Advertisement

    இதன் பேரில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சென்னையை சேர்ந்த யூடியூபர் திருநாவுக்கரசு, தியாகராஜன் மற்றும் திமுக ஆதரவாளர்களாக செயல்பட்டு வந்த கரூர்- ஈரோடு சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ரமேஷ் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து உள்ளனர். சென்னையில் இருந்து கரூர் சென்று இருவரையும் திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கார்த்திக், திமுகவின் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

    தவெக எம்.எல்.ஏக்கள் யார் யாரிடம் பேசப்பட்டது?

    கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்றும், அவரது தீவிர ஆதரவாளர்கள் என்பதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து 2 பேரது வீடுகளில் சோதனை நடத்தியதில், முக்கிய ஆவணங்கள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மேலும் 4 பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    இந்த சூழலில் விஜய் ஆட்சியை கவிழ்ப்பதற்கு மேலும் சில எம்.எல்.ஏக்களிடமும் பேரம் நடந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    * வேலூர் எம்.எல்.ஏ வினோத் கண்ணன்,
    * கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ முகுந்தன்,
    * நாமக்கல் எம்.எல்.ஏ திலீப்,

    * பொன்னகரம் தொகுதி எம்.எல்.ஏ கஜேந்திரன்,
    * திருப்பத்தூர் எம்.எல்.ஏ திருப்பதி
    * அவிநாசி தொகுதி எம்.எல்.ஏவுமான கமலி

    எம்.எல்.ஏ இளையராஜா மட்டுமின்றி மேலும் 6 எம்.எல்.ஏக்களிடம் இதே போன்று பேரம் பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக தவெக ஆட்சி அமைப்பதற்கு முன்பாக தற்போது அமைச்சரும், அவிநாசி தொகுதி எம்.எல்.ஏவுமான கமலியிடமும் பேரம் நடந்துள்ளதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தவெக எம்.எல்.ஏக்கள் யார் யாரிடம் பேரம் பேசப்பட்டது? யார் யார்? இந்த பேரத்தில் ஈடுபட்டனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    English Summary

    TVK MLAs: Police are expanding their investigation into alleged attempts to influence TVK MLAs, following claims that not only Uthangarai MLA Ilaiyaraja but also several others, including Avinashi MLA and minister Kamali, were approached. Investigators are probing who was targeted and who was behind the alleged offers.