பிரபல நடிகையின் பணத்தில் சொகுசு வாழ்க்கை! 3 பெண்களை ஏமாற்றிய ஒயிட் காலர் அழகன் உண்மையில் அனாதையா?

  • சென்னை: நடிகர் மோகன் சர்மா, உண்மையிலேயே மாத்திரை வாங்க முடிவில்லாமல் கஷ்டப்படுகிறார் என்றால், அவரை எங்களது சொந்த வாகனத்திலேயே அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அவருக்குத் தேவையான சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த மாத்திரைகளை இலவசமாக வாங்கித்தர நாங்கள் தயார். ஆனால் அவர் அதற்கு வருவாரா? என்று பத்திரிகையாளர் உமாபதி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

    Advertisement

    Aramnaadu சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் உமாபதி, "போயஸ் கார்டனில் வாழ்ந்த ஒருவர், இன்று முதியோர் இல்லத்தில் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். சினிமா துறையில் உச்சத்தில் இருந்து, அனைத்தையும் இழந்துவிட்டு கடைசியில் உதவி கேட்கிறார்கள்.

    Advertisement

    நடிகர் மோகன் சர்மா

    சமூகத்தில் உழைக்கும் சாதாரண மக்களுக்கு கிடைக்காத சலுகைகளும் கவனமும், சினிமா நட்சத்திரங்களுக்கு மட்டும் ஏன் உடனடியாக கிடைக்கிறது? உண்மையிலேயே அவர்களுக்கு உதவி தேவையா அல்லது நடிக்கிறார்களா?

    மோகன் சர்மா பற்றிய விஷயம் மிகவும் தீவிரமானது. ஆண்களைப் பற்றி நாம் பேசும்போது, பெண்களை வசியம் செய்து ஏமாற்றி, தங்கள் வாழ்நாள் முழுதும் உழைக்காமல் அவர்கள் பணத்தில் வாழும் சில ஆண்களும் இருக்கிறார்கள். தோற்றத்தில் சிகப்பாகவும், வசீகரமாக சாக்லேட் பாய் போலவும் இருந்தால் போதும், வேலைக்கே செல்லாமல் வாழ்ந்துவிடலாம் என்று நினைக்கும் நபர்களுக்கு மோகன் சர்மா ஒரு சரியான எடுத்துக்காட்டு.

    Advertisement

    காஸ்ட்லி சிகரெட், வெளிநாட்டு மதுபாட்டில்கள்

    ஒருமுறை பேட்டி எடுப்பதற்காக அவரது போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்றபோது, அங்கே வெளிநாட்டு மதுபாட்டில்களும், வெளிநாட்டு சிகரெட்டுகளும் இருந்தன. ஆனால் வெளியில் பேட்டி அளிக்கும்போது மட்டும், "எனக்கு மாத்திரை வாங்கக்கூடப் பணமில்லை, பிள்ளைகள் என்னைக் கைவிட்டுவிட்டார்கள்" என்று கூறிப் பரிதாபம் தேடுகிறார்.

    மோகன் சர்மா தனது வாழ்நாளில் 3 பெண்களை ஏமாற்றியுள்ளார். முதலாவதாக, 20 முதல் 30 ஆண்டுகளுக்கு முன்பே நடிகை லட்சுமியிடம் அன்றைய மதிப்பில் 5 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றிப் பறித்தார். அந்தப் பணத்தைக் கொண்டுதான் போயஸ் கார்டனில் வீடே வாங்கினார். அன்று 5 லட்சம் என்றால் இன்று 10 கோடிக்கு சமம்..

    Advertisement

    3 பெண்களை ஏமாற்றிய நடிகர்

    இரண்டாவதாக, ஒரு பெண்ணையும் அவரது மகனையும் ஏமாற்றி அவர்களின் பணத்தைச் சுருட்டினார். மூன்றாவதாக, பரதநாட்டியக் கலைக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு நடனக் கலைஞரின் சொத்துக்களையும் ஏமாற்றினார்.

    தன் தோற்றத்தை மட்டுமே முதலீடாக வைத்து, பணக்காரப் பெண்களையும் நடிகைகளையும் குறிவைத்து ஏமாற்றிய ஒரு "ஒயிட் காலர் கிரிமினல்" தான் இந்த மோகன் சர்மா. 40 வயதைக் கடந்தும் தனிமையில் இருக்கும் பெண்களிடமும், கணவனைப் பிரிந்து வாழும் பெண்களிடமும் சென்று அளவுக்கு அதிகமாக அன்பை பொழிவது போல நடிப்பார். அவர்களை முழுமையாக நம்பவைத்து, அவர்களின் பணத்தை சுரண்டித் தெருவில் விட்டுவிட்டு, அடுத்த இலக்கைத் தேடிச் சென்றுவிடுவார்.

    Advertisement

    போயஸ் கார்டன் வீடு விற்பனை

    அவர் உண்மையிலேயே பணமில்லாமல் கஷ்டப்படவில்லை. ஒரே போயஸ் கார்டன் வீட்டை 2 பேருக்கு விற்றுப் பெரிய மோசடி வழக்கில் சிக்கிக்கொண்டார். வெளியில் இருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் தன்னைத் தாக்கிவிடுவார்கள் என்ற பயத்தினாலேயே, முதியோர் இல்லத்தில் சென்று ஒழிந்துகொண்டு நாடகமாடுகிறார்.

    அவர் உண்மையிலேயே மாத்திரை வாங்க முடிவில்லாமல் கஷ்டப்படுகிறார் என்றால், அவரை எங்களது சொந்த வாகனத்திலேயே அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அவருக்குத் தேவையான சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த மாத்திரைகளை இலவசமாக வாங்கித்தர நாங்கள் தயார். அவர் அதற்கு வருவாரா?

    கோடம்பாக்கம், வடபழனி

    இன்றைய தலைமுறையிலும் கோடம்பாக்கம், வடபழனி போன்ற பகுதிகளில் சினிமா வாய்ப்பு தேடுகிறோம் என்ற போர்வையில், கைச்செலவுக்குக் கூடப் பணமில்லாமல், தோற்றத்தை மட்டும் வைத்துக்கொண்டு பெண் கலைஞர்களிடமும் நண்பர்களிடமும் அன்பாக நடப்பது போல நடித்து ஏமாற்றும் கூட்டங்கள் உலவிக்கொண்டுதான் இருக்கின்றன.

    Advertisement

    தன்மானத்தோடு நேர்மையாக உழைப்பவன் என்றாவது ஒருநாள் நிச்சயம் வெற்றிபெறுவான். ஆனால் அடுத்தவர் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ நினைக்கும் இதுபோன்ற நபர்கள் என்றுமே ஜெயிக்க முடியாது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    White-Collar Handsome Conman! Luxury Life on a Famous Actress’s Money.. Was He Really an Orphan?