மோனிகாவின் மூக்கை கடித்த நபர்.. மூக்குத்தியையும் தூக்கிட்டு ஓட்டம்! காரணம் கேட்டால் ஆடிப்போயிருவீங்க

  • சென்னை: உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா கோவர்தனில் பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் பரிக்ரமா பாதையில் நடந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... அங்கு நடந்து சென்று கொண்டிருந்த மும்பையை சேர்ந்த பெண்ணிடம் ஒருவர் பிச்சை கேட்டுள்ளார். ஆனால் அந்த பெண், அந்நபருக்கு பணம் தரு மறுத்துள்ளார்.. உடனே அங்கு நடந்த சம்பவம் அந்தப் பெண்ணை மட்டுமல்ல, மதுரா பகுதியையே அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டது.. என்ன நடந்தது?

    Advertisement

    நவி மும்பை புறநகரில் உள்ள கோபர் கைர்னே பகுதியைச் சேர்ந்தவர் 32 வயதான மோனிகா ரெய்னா. இவர் தீவிரமான கடவுள் பக்தி கொண்டவர்.. கடந்த 6 மாதங்களாக உத்தரப்பிரதேசத்தின் மதுரா கோவர்தன் பகுதியில் தங்கி இருந்து, அங்கு நடைபெறும் மத சடங்குகளில் பங்கேற்று வருகிறார்.

    Advertisement

    இந்த நிலையில், சம்பவத்தன்று மாலை சுமார் 5 மணியளவில் மோனிகா ராதாகுண்ட் அருகே உள்ள கோவர்தன் பரிக்ரமா வழித்தடம் ஒன்றில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையில் சென்ற ஒருவர், மோனிகாவிடம் யாசகம் கேட்டு பணம் கேட்டுள்ளார். ஆனால் மோனிகா பணம் கொடுக்க மறுத்துவிட்டு, தொடர்ந்து நடந்து சென்றுள்ளார்.

    மோனிகாவின் மூக்குத்தி

    எனினும் அந்த நபர் மோனிகாவை விடவில்லை.. பின்னாடியே வந்து, பணம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.. அப்போதும் மோனிகா பணத்தை தரவில்லை.. உடனே அந்த நபர், மோனிகாவிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றாராம்.. வழியெல்லாம் பின்தொடர்ந்து வந்தே டார்ச்சர் தந்துள்ளதாக தெரிகிறது.. பிறகு ஒரு கட்டத்தில் மோனிகாவை அங்கிருந்த புதருக்குள் தள்ளியதுடன், கழுத்தை நெரிக்கவும் முயன்றுள்ளார்.. அப்போது மோனிகாவின் மூக்கை அந்த நபர் கடித்துள்ளார். இதில் மோனிகாவின் மூக்கில் ஆழமான காயம் ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    அத்துடன் நிற்காமல், மூக்கை கடித்தவாறே, மோனிகா அணிந்திருந்த மூக்குத்தியையும் அந்த நபர் எடுத்துக்கொண்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாராம்.. இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி பக்தர்கள், காயமடைந்த மோனிகாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

    மனநலம் பாதிக்கப்பட்டவர்?

    பிறகு போலீசில் புகார் அளித்த மோனிகா, அந்த நபர் பணம் கொடுக்க மறுத்ததால் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், வழியில் தொடர்ந்து தன்னைப் பின்தொடர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். புதருக்குள் தள்ளிய பிறகு, மூக்கைக் கடிப்பதற்கு முன்பு தனது கழுத்தை நெரிக்க அந்த நபர் முயன்றதாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தப்பியோடியபோது தனது மூக்குத்தியையும் எடுத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். சம்பவம் நடந்த பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.. தப்பியோடிய நபரை அடையாளம் கண்டு பிடித்து கைது செய்யும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.

    மோனிகாவுக்கு ட்ரீட்மெண்ட்

    இதுகுறித்து மதுரா போலீஸ் அதிகாரி ஷ்லோக் குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, மோனிகா என்ற பெண் அந்தப் பகுதி வழியாக சென்று கொண்டிருந்தபோது, ஒருவர் அவரிடம் பணம் கேட்டுள்ளார், பெண்ணை தொடர்ந்து சென்று, தாக்கியதில் மூக்கில் ஆழமான காயம் ஏற்பட்டிருக்கிறது..

    Advertisement

    தாக்குதல் நடத்திய நபர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று போலீசார் நம்புகிறார்கள்.. அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதுடன், சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.. மூக்கில் காயமடைந்த மோனிகாவுக்கு சிகிச்சை நடக்கிறது" என்றார்.

    English Summary

    Who Bit Monica’s Nose in Mathura.. Why Did He Flee With Her Nose Ring? The Shocking Reason