Seeman: பென்ஸ் கார் வாங்கி கொடுத்தது யார்? சீக்ரெட் பகிர்ந்த சீமான்! தவெக மீதும் கடும் அட்டாக்

  • சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒன்றரை கோடி மதிப்புள்ள பென்ஸ் கார் வாங்கியிருந்தது சமூக வலைத்தளத்தில் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அவர், "கார் வாங்கிட்டார்.. கார் வாங்கிட்டார் என்றால்.. நான் உங்க ஆத்தா.. அப்பத்தா தாலி எடுத்து விற்றா வாங்குனோம்.. பென்ஸ் கார் வாங்கிட்டார்.. பென்ஸ் கார் வாங்கிட்டார் என்றால், பிளைட் வாங்கி ஓட்டப் போறேன் பாரு.." என பேசியுள்ளார்.

    Advertisement

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் பேசும்போது விஜய்யின் தவெக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். மேலும் திரள் நிதி வாங்குவது, பென்ஸ் கார் வாங்கியது போன்றவை குறித்தும் குறித்தும் விளக்கமாக பேசினார். அவர் கூறியதாவது:-

    Advertisement

    கட்சி காசில் தேநீர் கூட அருந்த மாட்டோம்

    மக்களிடம் நான் வாக்கையும், வலிமையையும் கேட்கிறேன். இனமாகவும் பணமாகவும் என் மக்கள்தான் எங்களுடன் நிற்க வேண்டும். கட்சி காசில் ஒரு தேநீர் கூட அருந்த மாட்டோம். கார் வாங்கிட்டார்.. கார் வாங்கிட்டார் என்றால்.. நான் உங்க ஆத்தா.. அப்பத்தா தாலி எடுத்து விற்றா வாங்குனோம்.. பென்ஸ் கார் வாங்கிட்டார்..

    பென்ஸ் கார் வாங்கிட்டார் என்றால், பிளைட் வாங்கி ஓட்டப் போறேன் பாரு.. உலகம் முழுவதும் எத்தனை கோடி மக்கள் எங்களை உயிராக நேசித்து.. பெற்ற பிள்ளை போல நேசிக்க எத்தனை பேரன்பு கொண்டு எத்தனை பேர் இருக்கிறாங்க.. நாங்க வேண்டாம் என்று வச்சிருக்கிறோம்.. என் மருமகன் ஒரு நாள் காரில் வந்தார். மாமா இவ்வளவு தூரம் பயணத்தில் இருக்குறீங்க என்று அவரா காசு கட்டி வாங்கி கொடுத்துட்டு போனார்..

    Advertisement

    பேசவே ஆரம்பிக்கல..

    பொறுக்கல.. நான் சொந்தமாக விண்ணூர்தி வாங்கி ஓட்டினால் என்ன பண்ணூவீங்க.. நாம செய்வது எது, எது அவுங்களுக்கு பிடிக்கலயோ.. அதை திரும்ப திரும்ப செய்ய வேண்டும். நாம பேசுவது அவங்களுக்கு எரிச்சலாக இருக்கா.. அதையே பேசணும் என்று துரையிடம் சொன்னேன். பயிற்சி கூடத்தில் பயிற்சி எடுக்கும் போது.. காலை தூக்கி வைத்தால்.. இந்த உடையை பார்த்தீங்களா? பேசுவது தற்சார்பு என்று சொல்கிறார்கள்.

    இங்கே தயாரித்ததுதான் அது.. வேண்டும் என்றால் கோணி சாக்கில் டவுசரை தைத்துக்கொண்டு அலைய வேண்டுமா.. கோவணம் கட்டிக்கொண்டு அலையாம நீ எதுக்கு இப்படி போட்டுக்கிட்டு திரியுற என்று நினைக்கிறார்கள். கொலை வெறியில் இருக்கிறேன். பார்த்து இருந்துக்கோங்க.. பேசவே ஆரம்பிக்கல.. எதிர்க்கிறார். எதிர்கிறார் என்றால்.. இன்னும் களத்திற்கே வரவில்லை. வந்தால் என்ன பண்ணுவீங்க..

    Advertisement

    திரள் நிதி திருடர்கள் என்பீர்கள்..

    தமிழ் என்று உச்சரிக்காதவன் கிட்ட.. தமிழன் என்று உச்சரிக்காதவன் கிட்ட நாட்டை கொடுத்துவிட்டு எங்களை நடு ரோட்டில் கொண்டு நிறுத்தியிருக்கிறர்கள். நடிகனுக்கும் தலைவனுக்கும் வித்தியாசம் தெரியாத தறுதலைக் கூட்டமே.. எங்களுக்கு ஒரு பெருமிதமும் திமிறும் உள்ளது. எங்களை பற்றி என்ன பேசுவீர்கள்.. அவதூறு பேசுவீங்க.. புறம் பேசுவீர்கள். பொய்யை பரப்புவீர்கள்..

    திரள் நிதி திருடர்கள் என்பீர்கள்.. வேறு என்ன பேச முடியும். திரள்நிதி திருடன் என்று இவ்வள்வு நாள் சொன்னது யாரு..திருட்டு நிதி காரன்.. இப்போ சொல்ற அயோக்கிய பய யாரு.. பிளாக் டிக்கெட் காரன்.. கள்ளச்சந்தையில் திரைப்பட பார்க்க அனுமதி சீட்டை விற்ற அயோக்கியர்கள் எங்களை திரள்நிதி திருடன் என்பதா? ஆட்டம் மாறி மாறிதான் ஆடுவோம். இந்த ஆட்டம் உங்கள் கையில் இருக்கு.. உங்கள் காலில் இருக்கும் பந்து ஒருநாள் எங்கள் கால்களுக்கு வரும்" என்றார்.

    English Summary

    Seeman Benz car: Naam Tamilar Katchi coordinator Seeman has responded to criticism on social media regarding his purchase of a Mercedes-Benz car worth ₹1.5 crore. He remarked, "People keep saying, 'He bought a car, he bought a car'—as if I bought it by selling the *thali* (sacred wedding pendant) belonging to your mothers or grandmothers. They talk about the Benz car; just watch, I’m going to buy a plane and fly it next."