ஐஏஎஸ் சிவகுரு பிரபாகரன் போட்ட கண்டிஷன்.. தயங்கிய பெண் வீட்டார்.. கடைசியில் ஓகே சொன்ன சென்னை டாக்டர்

  • சென்னை: ஐஏஎஸ் அதிகாரி சிவகுரு பிரபாகரன், தனது திருமணத்தில் பணம், நகை, கார் என எதையும் எதிர்பார்க்காமல், வித்தியாசமான ஒரு விருப்பத்தை முன்வைத்திருக்கிறார்.. அவர் வைத்த நிபந்தனையைக் கேட்டு பலரும் தயங்கியிருக்கிறார்கள்.. இப்போது அந்த கண்டிஷனையும் ஏற்றுக்கொண்டு, அவரது வாழ்க்கைத் துணையாகியிருக்கிறார் டாக்டர் கிருஷ்ணபாரதி. அப்படி என்ன நிபந்தனை?

    Advertisement

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஒட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஐஏஎஸ் அதிகாரி சிவகுரு பிரபாகரன். எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து, பல்வேறு சவால்களைக் கடந்து ஐஏஎஸ் அதிகாரியானவர்.

    Advertisement

    தஞ்சாவூர், பேராவூரணி

    இவர் கல்யாணம் செய்துகொள்ள முடிவெடுத்தபோது, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட உயர் பதவிகளில் இருக்கும் பெண்கள் பலரும் திருமணத்துக்குத் தயாராக இருந்திருக்கிறார்கள்.. ஆனால், சிவகுரு பிரபாகரனோ, தான் ஒரு டாக்டரைதான் திருமணம் செய்துகொள்வேன் என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.

    அதுமட்டுமல்ல, தன்னைத் திருமணம் செய்துகொள்ளும் பெண் டாக்டர், வாரத்தில் 2 நாட்கள் தான் பிறந்த ஒட்டங்காடு கிராமத்துக்கும், அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் சென்று மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை வழங்க வேண்டும் என்று சிவகுரு பிரபாகரன் கண்டிஷன் போட்டுள்ளார்.

    கார்த்திகேயன் ஐஏஎஸ் மத்திய அரசு பணிக்கு திடீர் மாற்றம்... பின்னணி என்ன? 3 வார கெடு ஏன்
    Advertisement

    ஐஏஎஸ் அதிகாரி கேட்ட வரதட்சணை

    அதாவது தன்னுடைய கல்யாணத்துக்காக பணம், நகை, கார் என எதையும் அவர் எதிர்பார்க்கவில்லை. அதற்கு பதிலாக, தனது சொந்த ஊர் மக்களுக்கு இலவச மருத்துவச் சேவை கிடைக்க வேண்டும் என்பதையே வரதட்சணையாக கருதியுள்ளார். கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்களின் மருத்துவத் தேவைகளுக்கு உதவ வேண்டும் என்பதுதான் அவரது விருப்பமாக இருந்துள்ளது.

    இதனால், அவருடைய விருப்பத்துக்கு ஏற்ப பெற்றோரும் சுமார் ஒரு வருட காலமாகப் பெண் தேடியுள்ளனர். பல பெண் டாக்டர்களின் வரன்கள் வந்தபோதும், சிவகுரு பிரபாகரன் முன்வைத்த அந்த கண்டிஷனை கேட்டுப் பலரும் திருமணத்துக்கு தயங்கியதாகக் கூறப்படுகிறது.. ஆனாலும், தனது விருப்பத்தில் உறுதியாக இருந்த சிவகுரு பிரபாகரன், அதற்கேற்ற வாழ்க்கைத் துணையைத் தேடியுள்ளார்.

    Advertisement
    பெங்களூரு பாரில் நள்ளிரவில் ஆந்திரா ஐஏஎஸ் அதிகாரி.. என்ன நடந்தது? பாய்ந்த வழக்கு

    மணமக்களுக்கு குவியும் பாராட்டு

    இறுதியில், டாக்டர் கிருஷ்ணபாரதி (MBBS), சிவகுரு பிரபாகரனின் கண்டிஷனை ஏற்றுக்கொண்டார்.. சிவகுரு பிரபாகரனின் சமூக நல விருப்பத்துக்குத் துணையாக இருக்க முன்வந்துள்ளார்... கிருஷ்ணபாரதியின் அப்பா, சென்னை நந்தனம் கல்லூரியில் கணிதப் பேராசிரியராக பணியாற்றுகிறாராம். இதையடுத்து, இருவருக்கும் அக்டோபர் 25ம் தேதி திருமணம் இனிதே நடைபெற்றது.

    உயர் பதவியில் இருந்தாலும், தான் பிறந்த ஊரையும் தனது வேரையும் மறக்காமல், அந்த மக்களின் நலனுக்காகச் சிந்தித்த சிவகுரு பிரபாகரனையும், அவரது விருப்பத்தை ஏற்றுக்கொண்ட டாக்டர் கிருஷ்ணபாரதியையும் சோஷியல் மீடியாவில் பலரும் பாராட்டி வருகின்றனர். மணமக்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

    Advertisement

    யார் இந்த சிவகுரு பிரபாகரன்

    குடும்பத்தின் நிதி நெருக்கடி உள்ளிட்ட பல தடைகளை தாண்டி, தனது விடாமுயற்சியால் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர் சிவகுரு பிரபாகரன். 4வது முயற்சியில் அகில இந்திய அளவில் 101வது இடத்தைப் (AIR 101) பிடித்தவர்..

    குடும்பம் கஷ்டப்பட்ட காலத்தில் அவரது தாயும் சகோதரியும் கடுமையாக உழைத்தனர். குடும்பப் பொறுப்பை ஏற்ற சிவகுரு பிரபாகரன், மர ஆலை இயக்குநராகப் பணியாற்றி குடும்பத்துக்கு வருமானம் ஈட்டினார். சகோதரிக்குத் திருமணம் முடிந்த பிறகு, ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற தனது கனவை நோக்கிப் பயணித்து வெற்றி பெற்றார். தனது சொந்த கிராமத்துக்கும் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார்.

    Advertisement

    சிவகுரு பிரபாகரன் நெல்லை மாவட்டத்தில் சார் ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளார். அப்போது அவர் மேற்கொண்ட பல்வேறு திட்டங்கள் பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றன.

    SIR ஒன்னும் தப்பு இல்லையே! முன்னாள் ஐஏஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள் 124 பேர்.. நாட்டு மக்களுக்கு கடிதம்

    பறவைகள் தண்ணீர்

    சென்னை மாநகராட்சியில் 2 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய அவர், பாதாளச் சாக்கடை, சாலைப் பணிகள், மருத்துவம், பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு மக்களின் பாராட்டைப் பெற்றார். இதையடுத்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராகப் பொறுப்பேற்றார். இதற்கு முன்பு 3 ஆண்டுகள் சிவில் இன்ஜினியராகவும் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது.

    இதுதவிர, பறவைகள் மீது ஆர்வம் கொண்ட சிவகுரு பிரபாகரன், கோடை காலத்தில் பறவைகளுக்கு தண்ணீரும் உணவும் கிடைக்க வேண்டும் என்பதற்காக எண்ணெய் டின்களை பயன்படுத்தி ஏற்பாடு செய்த முயற்சியும் பலரது பாராட்டைப் பெற்றது நினைவிருக்கலாம்..!!

    English Summary

    Who Is IAS Sivaguru Prabhakaran? His Marriage Condition and Chennai Doctor's Decision