விஜய் தான் பிரதமராக வேண்டும்.. மோடி - ராகுலை புறக்கணித்து இந்தியா டுடே சர்வேயில் 9% பேர் ஆதரவு!

  • டெல்லி: இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும்? என்று இந்தியா டுடே - சி வோட்டார் சார்பில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் பிரதமர் மோடி, ராகுல் காந்திக்கு அடுத்தப்படியாக 3வது இடத்தில் தமிழக முதல்வர் விஜய் தான் பிரதமராக வர வேண்டும் என்று நாட்டு மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    இந்தியா டுடே - சி வோட்டர் சார்பில் Mood Of the Nation Survey என்ற பெயரில் 6 மாதத்துக்கு ஒருமுறை சர்வே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டில் உள்ள மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது? எந்த கட்சி அல்லது கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் உள்ளனர்? என்பதை அறியும் வகையில் இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    Advertisement

    அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் இதுதொடர்பான சர்வே வெளியானது. தற்போது ஆகஸ்ட் மாதத்தில் சர்வே எடுக்கப்பட்டு அதன் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும்? என்ற கேள்வி மக்களிடம் முன்வைக்கப்பட்டது.

    இதில் தமிழக முதல்வர் விஜய், டாப் 3வது இடத்தை எட்டிப்பிடித்துள்ளார். மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை பின்னுக்கு தள்ளி பிரதமர் மோடி, ராகுல் காந்திக்கு அடுத்த இடத்தில் முதல்வர் விஜய் உள்ளார்.

    அதன்படி இந்த சர்வேயில் பங்கேற்றவர்களில் 48.7 சதவீதம் பேர் நரேந்திர மோடி தான் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று கூறியுள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என 27.1 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்கள் 2 பேரை தொடர்ந்து 3வது இடத்தில் தமிழக முதல்வர் விஜய் உள்ளார். விஜய் பிரதமராக வேண்டும் என்று 9.2 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    இது காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜகவிற்கு வார்னிங்காக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் விஜய் கடந்த 2024ம் ஆண்டில் தான் அரசியலுக்குள் நுழைந்தார். தமிழக சட்டசபை தேர்தலை முதல் முறையாக சந்தித்து வென்று முதல்வராகிவிட்டார். முதல்வரான 3 மாதத்துக்குள் தேசிய அளவில் பிரதமர் மோடி, ராகுல் காந்திக்கு பிறகு அதிகமான மக்கள் விஜய்யை பிரதமராக வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர் குறுகிய காலத்தில் விஜய்யின் இந்த வளர்ச்சி கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.

    ஏனென்றால் மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால், என பல பேர் அரசியலில் பல ஆண்டுகளாக உள்ளனர். ஆனால் அவர்களை விட விஜய் தான் பிரதமராக வர வேண்டும் என்று மக்கள் விரும்புவது என்பது அவரது ரீச் அதிகம் இருப்பதை காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சர்வேயில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி, விஜய்யை தவிர இன்னும் சில தலைவர்களின் பெயர்களை பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    அதன்படி மம்தா பானர்ஜி 4வது இடத்தில் உள்ளார். அவர் பிரதமராக வர வேண்டும் என்று 2 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதற்கு பிறகு சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்விற்கு 1.7 சதவீதம் பேரம், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் அபிஜித் திப்கே பிரதமராக வேண்டும் என்று 1.3 சதவீதம் பேரும், ஆம்ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 1.2 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இந்தியா டுடே - சி வோட்டர் சார்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த Mood Of the Nation Survey ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 25ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 25,184 பேரிடம் நேரடியாக கருத்துகள் தெரிவித்தனர் அதன்பிறகு 'சி வோட்டர்' நிறுவனம் சார்பில் கடந்த 6 மாதத்தில் 91,795 பேரிடம் கேட்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் சர்வே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Vijay: India Today and C-Voter Mood of the nation survey asks who should become India's next Prime Minister have been released. The survey reveals that the people of the country have expressed a preference for Tamil Nadu Chief Minister Vijay to assume the role of Prime Minister, placing him in third position behind Prime Minister Modi and Rahul Gandhi.