ஆரம்பிக்கவே இல்லை அதுக்குள்ளேயா.. தவெக கூட்டணியில் புதிய சிக்கல்.. விஜய் கோபம்

  • சென்னை: திமுக, அதிமுகவை தோற்கடித்து ஆட்சியை பிடித்துள்ளது தவெக. இதனால் அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பலமாக இருந்த திமுக கூட்டணி உடைந்து, தவெக கூட்டணியாக உருவாகியுள்ளது. தவெக கூட்டணியின் முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டணிக்கு விரைவில் பெயர் வைத்து, ஒருங்கிணைப்பாளரும் நியமிக்கப்படவுள்ளார். இந்நிலையில், ஒருங்கிணைப்பாளர் நியமனத்தில் கூட்டணிக்குள் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    சட்டமன்ற தேர்தல் தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தல் தமிழக அரசியலில் அதிரடி திருப்பங்களை அரங்கேற்றியுள்ளது. அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் பலர் தவெகவில் இணைந்து வருகிறார்கள். திமுக கூட்டணி உடைந்துவிட்டது. காங்கிரஸ், ஐயூஎம்எல், விசிக கட்சிகள் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது. சிபிஐ, மதிமுக கட்சிகளும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டன.

    Advertisement

    தவெக கூட்டணி

    இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலுக்கு தவெக தயாராகி வருகிறது. இந்நிலையில் பலமான கூட்டணியை உருவாக்க தவெக முயற்சித்து வருகிறது. தவெக கூட்டணி கட்சிகளின் கூட்டம் கோவளத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இதற்காக தோழமை கட்சி அனைவரையும் தனித்தனியாக சந்தித்து அழைப்பு விடுத்தனர். கம்யூனிஸ்ட்கள் தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்குவதால் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. காங்கிரஸ், ஐயுஎம்எல், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன.

    இந்த கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் பதவியில் யாரை நியமிப்பது என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது. 2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியாக இருந்தவர்கள், பிறகு திமுகவுடன் இணைந்த பிறகு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியாக மாறினர். நாளடைவில் இந்தியா கூட்டணி என்று மாறியது. தற்போது இந்தியா கூட்டணி உடைந்துவிட்டது. இந்நிலையில் தவெக கூட்டணிக்கு புதிய பெயரை பரிசீலனை செய்து வருகிறார்கள்.

    Advertisement

    ஒருங்கிணைப்பாளர் சர்ச்சை

    என்னுடைய மனதில் ஒரு பெயர் உள்ளது. விரைவில் அறிவிக்கிறேன் என்று கூட்டணி கட்சியினரிடம் விஜய் கூறினார். இந்நிலையில் கூட்டணிக்கு பெயர், ஒருங்கிணைப்பாளர் நியமிப்பது தொடர்பான ஆலோசனை நடந்து வருகிறது. சமூக நீதி கூட்டணி உள்ளிட்ட பல்வேறு பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. பெயரில் எந்த பிரச்சனையும் இல்லை. கூட்டணிக்கு யாரை ஒருங்கிணைப்பாளராக நியமிப்பது என்பதில் தான் பிரச்சனை எழுந்துள்ளது.

    மூத்த அரசியல்வாதி என்பதால் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை தேர்வு செய்ய வேண் டும் என்று மதிமுகவினர் நினைக்கிறார்கள். கூட்டணி பெயரே சமூக நீதி என்பதால் தவெக விசிக தலைவர் திருமாவளவனை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யலாம் என்று நினைக்கிறது. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் திருமாவளவனை பரிந்துரை செய்துள்ளார்.
    ஆனால் அந்த கருத்தை ஏற்க மற்ற தலைவர்கள் தயக்கம் காட்டுகிறார்கள்.

    Advertisement

    அதனால் தவெக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விஜய் கோபமடைந்துள்ளார். அந்த கூட்டணியின் அடுத்த கூட்டத்தை இந்த மாதம் 3வது வாரம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்குள் கூட்டணிக்கு பெயர், ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் தவெக உள்ளது. விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    TVK to announce coordinator for the alliance. But its already got issue over the appointment.