லெஜெண்ட் சரவணன் திடீரென தேடிப்போன அந்த நபர் இவரா? கையில் 50000 ரூபாய்! சென்னை மாதவரத்தில் நெகிழ்ச்சி

  • சென்னை: பிரபல தொழிலதிபரும் நடிகருமான லெஜெண்ட் சரவணன், சினிமா பிரபலங்களுக்கு மட்டுமன்றி, சாமானிய மக்களின் துயரத்திலும் பங்கெடுக்கும் குணமுடையவர்... இப்போதும் ஒரு அசத்தலான காரியத்தை செய்துள்ளார்.. திருவள்ளூர் மாவட்டத்தில் 2 பார்வையற்ற குழந்தைகளுடன் ஆட்டோ டிரைவர் ஒருவர் குடும்பத்துடன் அவதிப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. உடனே லெஜெண்ட் சரவணன் என்ன செய்தார் தெரியுமா?

    Advertisement

    பிரபல தொழிலதிபரும் நடிகருமான லெஜெண்ட் சரவணன், "தி லெஜண்ட்" படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர். "கருடன்" உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.. விடாமுயற்சி, தன்னம்பிக்கை காரணமாக, பல இளைஞர்களுக்கு மோடிவேஷனலாக இருந்து வருபவர்..

    Advertisement

    நடிப்பு, பிசினஸையும் தாண்டி, ஏராளமான நலத்திட்ட உதவிகளையும் செய்து வருபவர். இந்த உதவிகள் பற்றியெல்லாம் சோஷியல் மீடியாவில் செய்திகள் வெளியாகி பலரது கவனத்தையும் பெற செய்யும்.

    கருடன் பட ஷூட்டிங்

    இப்படித்தான், கருடன் பட ஷூட்டிங் முடிந்தபோது, சரவணன் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கலைத்துறையில் தடம் பதிப்பதோடு நின்றுவிடாமல், சமுதாயத்தில் உள்ள எளிய மக்களுக்கும் உதவிக்கரம் நீட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் சரவணன்,

    கடந்த மாதம், பிரபல நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன் அளித்த எமோஷனல் பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. அதில் தன்னுடைய வாழ்க்கை போராட்டங்கள், உடல்நலக்குறைவு, பொருளாதாரச் சிக்கல்கள் பற்றியெல்லம் பவா லட்சுமணன் கண்ணீருடன் பேசியிருந்தார்..

    Advertisement

    லெஜெண்ட் சரவணன் நலத்திட்ட உதவிகள்

    அவரது இந்த நிலையைக் கேள்விப்பட்ட லெஜெண்ட் சரவணன், மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக உதவிக்கரம் நீட்டினார். தனது அறிவுறுத்தலின் பேரில் நடிகர் கூல் சுரேஷை நேரடியாக பாவா லட்சுமணனின் வீட்டுக்கு அனுப்பி வைத்து, ₹2 லட்சம் மதிப்பிலான காசோலையை வழங்க செய்தார்.

    எதிர்பாராத இந்த உதவியால் மிகுந்த நெகிழ்ச்சியடைந்த பாவா லட்சுமணன், "லெஜண்ட் சரவணன் சாரை நான் நேரில் சந்தித்ததே இல்லை, அவருடைய படங்களிலும் நடித்ததில்லை. இருந்தாலும் என் கஷ்டத்தை உணர்ந்து இந்த கடினமான நேரத்தில் உதவி செய்திருக்கிறார். இந்த உதவியை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது" என்று கண்ணீருடன் நன்றி தெரிவித்திருந்தார்..

    Advertisement

    ஆட்டோ டிரைவர் வடிவேல்

    இந்நிலையில், லெஜண்ட் சரவணன் திரையுலகை சாராத ஒருவருக்கு செய்துள்ள உதவி, தற்போது சமூக வலைதளங்களில் பேசப்பட்டு, பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

    திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட பூதூர் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல்.. இவர் ஒரு ஆட்டோ டிரைவர்.. தனது குடும்பத்தை கஷ்டமான சூழலில் நடத்தி வருகிறார். அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, அந்த 2 குழந்தைகளும் பிறவியிலேயே பார்வையற்றவர்கள்.

    ஆட்டோ ஓட்டி வரும் சொற்ப வருமானத்தில் குடும்பச் செலவுகளையும், பார்வையற்ற 2 குழந்தைகளின் பராமரிப்பையும் சமாளிக்க முடியாமல் வடிவேல் தினமும் அவதிப்பட்டு வந்தார்.. இந்த ஏழைக் குடும்பத்தின் நிலைமையை அறிந்த லெஜெண்ட் சரவணன், மனிதநேயத்துடன் ஓடோடிச் சென்று ஆதரவளித்துள்ளார்.

    Advertisement

    வடிவேலுவின் குடும்பத்தின் ₹50,000 ரொக்க நிதியுதவியையும், ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய மளிகைப் பொருட்களையும் நேரடியாக வழங்கினார். எந்தவித விளம்பரத்தையும் எதிர்பார்க்காமல் லெஜெண்ட் சரவணன் செய்து வரும் இந்த மனிதநேயச் செயல்கள் அனைவருக்கும் சிறந்த முன்னுதாரணமாக அமைந்து வருகின்றன.. !!!

    English Summary

    Who Is the Man Legend Saravanan Searched for With 50000 rupees? Emotional Moment in Chennai Madhavaram