வேளச்சேரியில் கணவருடன் சென்ற பெண்ணின் மீது கை வைத்த நபர்! கேமராவில் பார்த்தால் இவரா? அதிர்ந்த சென்னை

  • சென்னை: சென்னை வேளச்சேரியில் கணவருடன் நடந்து சென்ற பெண்ணிடம், ஆபாசமாகவும், அத்துமீறியும் நடந்து கொண்டுள்ளார் ராணிப்பேட்டை காவல் ஆய்வாளர் மணிமாறன்.. இப்போது இவரை வேளச்சேரி போலீசார் கைது செய்துள்ளனர்.. ராணிப்போட்டை காவல்துறை அதிகாரி, சஸ்பெண்ட் செய்துள்ளார்.. யார் இந்த மணிமாறன்? சென்னையில் என்ன நடந்தது?

    Advertisement

    காவல் ஆய்வாளர் மணிமாறனுக்கு 47 வயதாகிறது... இவர் சென்னை வேளச்சேரி அண்ணா கார்டன் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதற்கு முன்பு சென்னை செம்மஞ்சேரி, கேளம்பாக்கம் உள்ளிட்ட முக்கியக் ஸ்டேஷன்களில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து அனுபவம் கொண்டவர்.

    Advertisement

    சென்னை வேளச்சேரி

    கடந்த சட்டமன்றத் தேர்தலின்போதுதான், ராணிப்பேட்டை மாவட்டப் போக்குவரத்து அமலாக்கப் பிரிவுக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டார். வார விடுமுறை நாட்களில் சென்னைக்கு வந்து குடும்பத்துடன் தங்கிச் செல்வது இவரது வழக்கமாகும்..

    அந்த வகையில், கடந்த ஜூலை 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்காக வேளச்சேரியில் உள்ள தனது வீட்டிற்கு மணிமாறன் வந்துள்ளார். அன்றைய தினம் இரவு, வேளச்சேரியில் உள்ள தனது மைத்துனரும் பெயிண்டருமான மணி (48) என்பவருடன் சேர்ந்து மணிமாறன் அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளார்.

    இன்ஸ்பெக்டர் மணிமாறன்

    பிறகு 2 பேருமே மண்டைக்கேறிய போதையுடன் பைக்கில் வெளியில் கிளம்பி உள்ளனர்.. மைத்துனர் மணி டூவீலரை ஓட்டி உள்ளார்.. காவல் ஆய்வாளர் மணிமாறன் பின்னால் உட்கார்ந்து சென்றுள்ளார்.

    Advertisement

    இரவு நேரத்தில் வேளச்சேரி நூறடி சாலை மற்றும் ஒரண்டி அம்மன் கோவில் தெருப்பகுதியில் இவர்கள் சென்று கொண்டிருந்தனர்.. அந்த சாலை எந்நேரமும் பிஸியாகவே காணப்படும்.. அன்று ஞாயிறு இரவும் பரபரப்பாகவே இருந்துள்ளது. அந்த நேரம் பார்த்து, அதே பகுதியை 30 வயது பெண் ஒருவர் தனது கணவருடன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கணவருடன் நடந்து சென்ற பெண்ணின் அருகே வாகனம் மெதுவாகச் சென்றபோது, மணிமாறன் அந்த பெண்ணின் மீது கை வைத்துப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

    நான் இன்ஸ்பெக்டர்

    கணவரின் கண்முன்னே நடந்த இந்த எதிர்பாராத சீண்டலால் அதிர்ச்சியடைந்த அப்பெண், நடுரோட்டில் அலறித் துடித்துள்ளார். பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டதும், சற்று முன்னால் நடந்து வந்த அவரது கணவரும், வழியில் சென்ற வாகன ஓட்டிகளும், அப்பகுதி மக்களும் ஓடிவந்து அந்த பைக்கை அப்படியே மடக்கிப் பிடித்தனர்.

    Advertisement

    அப்போது போதை தலைக்கேறிய நிலையில் இருந்த மணிமாறன், "நான் இன்ஸ்பெக்டர், என்னிடமே தகராறு செய்றீங்களா? என்று மிரட்டி உள்ளார். ஆனாலும் பொதுமக்கள் கொந்தளித்து கேள்விகளை எழுப்பவும், 2 மதுபோதை நபர்களும், அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

    யூனிபார்மில் மணிமாறன் செய்த அசிங்கம்

    உடனடியாக பாதிக்கப்பட்ட பெண், தனது கணவருடன் சென்று வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், சம்பவம் நடந்த ஒரண்டி அம்மன் கோவில் தெரு மற்றும் நூறடி சாலை பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போதுதான், யூனிபார்மில் மணிமாறன் போதையில், பெண்ணிடம் அத்துமீறிய காட்சி தெளிவாக பதிவாகியிருந்தது உறுதியானது.

    Advertisement

    இதையடுத்து தப்பிச் சென்ற பைக்கின் நம்பரையும் வைத்து விசாரணையை முடுக்கிவிட்டனர். இறுதியில் மணிமாறன், பெயிண்டர் மணி இருவரையும் வேளச்சேரி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்ட மணிமாறனிடம் பல மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணையும் நடத்தப்பட்டது.

    மதுபோதையில் அநாகரீகம்

    அவர் மீது பெண்கள் வதை தடைச் சட்டத்தின் கீழ் கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 2 பேரையும் போர்ட்டில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், நீதிபதியின் உத்தரவுப்படி ஜெயிலில் அடைத்துள்ளனர்.. ஆனால், சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதல்களின்படி, பாதிக்கப்பட்ட பெண்ணின் தனிப்பட்ட பாதுகாப்பைக் கருதி அவரது பெயர் மற்றும் அடையாள விவரங்களை போலீசார் ரகசியமாக வைத்துள்ளனர்.

    Advertisement

    சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல் அதிகாரியே, மதுபோதையில் பெண் மீது கைவைத்து சிறை சென்றுள்ள சம்பவம் வேளச்சேரி பகுதியில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது..

    யார் இந்த மணிமாறன்

    மணிமாறன், சென்னையில் வேலை பார்த்தபோது, இதேபோல பெண் காவலர்களிடமும் அநாகரிகமாக நடந்து கொண்டாராம்.. இப்படி பல பெண் போலீசார் இவர் மீது குற்றஞ்சாட்டியதால்தான், உயர் அதிகாரிகள் மணிமாறனை ராணிப்பேட்டைக்கு சமீபத்தில் டிரான்ஸ்பர் செய்துவிட்டார்கள்.

    ஆனால் மணிமாறன் குடும்பத்தினர் வேளச்சேரியிலேயே வசித்து வருகிறார்கள்.. மணிமாறன் மட்டும் ஒவ்வொரு வார இறுதியில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.. அப்படி சென்னைக்கு வருமபோதெல்லாம், நண்பர்கள் மற்றும் மைத்துனருடன் சேர்ந்து தண்ணி அடிப்பாராம்..

    மதுபோதையில் நள்ளிரவில் வீட்டிற்கு வரும்போது, மணிமாறன் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் இதுபோன்ற தவறான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.. சம்பவத்தன்றும், கணவருடன் சென்ற பெண்ணின் பின்புறத்தில் தட்டியும், நெஞ்சில் கைவைத்தும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.. இவ்வளவும் போலீசார் விசாரணையில் உறுதியாகி உள்ளது. இதையடுத்து, ராணிபேட்டை மாவட்ட எஸ்பி மணிமாறனை சஸ்பெண்ட் செய்தே உத்தரவிட்டுள்ளார்...!!

    English Summary

    Who Is the Velachery Police Inspector Accused of Harassing a Woman in Front of Her Husband?