டெல்லி செல்லும் முதல் தவெக எம்பி யார்.. திருச்சி கிழக்கிலும் விஜய் பெரிய சஸ்பென்ஸ்

  • சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் சட்டசபை தேர்தலை தொடர்ந்து, டெல்லி அரசியலிலும் நுழைய போகிறது. டெல்லிக்கு தவெக சார்பில் அனுப்பப்பட உள்ள முதல் ராஜ்யசபா எம்பி யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. த.வெ.க.வின் முதல் எம்.பி. நியமனம் குறித்து முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறாராம். ஏனெனில் அண்மையில் சிவி சண்முகம் மாநிலங்களை எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளார். அந்த இடத்தில் யாரை கொண்டுவரலாம் என்று விஜய் யோசித்து வருகிறாராம்.

    நடிகர் விஜய், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியினை ஆரம்பித்தார். ஆனால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் களம் இறங்கவில்லை.. நேரடியாக தமிழக சட்டசபை தேர்தலில் களம் காணப்போவதாக அறிவித்தார். அதன் படியே முதல் முறையாக களம் கண்ட த.வெ.க. மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றார்.

    பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உளள்து. இந்த திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் யாரை நிறுத்துவது என்பது குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். ஏனெனில் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் களம் இறங்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவுவதால், தவெக வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

    இது ஒருபுறம் எனில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த சி.வி.சண்முகம் விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் வகித்து வந்த மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். எனவே சிவி சண்முகம் வகித்த எம்பி பதவி காலியானதாகஅறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த ஒரு இடத்திற்கு மாநிலங்களவை எம்.பி.யை நியமனம் செய்ய விரைவில் அறிவிப்பு வெளியாக போகிறது.

    அந்த அறிவிப்பு வரும் பட்சத்தில், தமிழக சட்டசபையில் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்களை கொண்டதாக த.வெ.க. இருக்கிறது. எனவே அந்த கட்சி தான் வெற்றி பெற முடியும். அந்த வகையில், சட்டசபை தேர்தலில் வென்றதன் பலனமாக ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவி த.வெ.கவிற்கு கிடைத்துள்ளது. இந்த பதவி த.வெ.க. முக்கிய நிர்வாகி ஒருவருக்கு வழங்க முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் யார் என்பது தெரியவில்லை.. விஜய் சஸ்பென்ஸாக வைத்துள்ளார். அப்படி வெற்றி பெற்று செல்லும் நபர் தான
    த.வெ.க. முதல் எம்.பி. என்ற அடையாளத்துடன் டெல்லி செல்வார். மாநில அரசியலை தொடர்ந்து டெல்லி அரசியலிலும் விஜய்யின் தவெக இன்னும் சில வாரங்களில் தடம் பதிக்க போவது உறுதியாகி உள்ளது.

    English Summary

    Following the Assembly elections, the Tamilaga Vettri Kazhagam—led by Chief Minister Vijay—is set to make its entry into Delhi politics as well. The question currently arises as to who will be the first Rajya Sabha MP to be sent to Delhi on behalf of the TVK.