தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவிக்கு வாய்ப்பு? ரேஸில் 5 பேர்!

  • சென்னை: தமிழகத்தில் ஆட்சியை பிடித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் ராஜ்யசபா எம்பி யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வாய்ப்பு விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரான ராதன் பண்டிட் வெற்றிவேலுக்கு வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. அல்லது தமிழகத்தில் தவெகதான் வெல்லும் என சரியாக கணித்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவிக்கு வழங்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

    Advertisement

    இந்தியாவில் ஜூன் 21 மற்றும் ஜூலை 19 ஆகிய தேதிகளில் ஆந்திரா (4), குஜராத் (4), கர்நாடகா (4) உட்பட பல்வேறு மாநிலங்களில் காலியாகும் 24 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    தமிழகத்தில் அதிமுகவின் சி.வி. சண்முகம் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, காலியாக உள்ள ஒரு இடத்திற்கான இடைத்தேர்தல் மற்ற மாநிலத் தேர்தல்களுடன் சேர்த்து நடத்தப்பட உள்ளது. இந்த இடத்தில், தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஆளும் கட்சியான தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) தனது வேட்பாளரை நிறுத்தப் போவது உறுதியாகியுள்ளது.

    த.வெ.க. சார்பில் டெல்லிக்குச் செல்லப்போகும் அந்த முதல் எம்பி யார் என்ற ரேஸில் பல முக்கியப் பெயர்கள் அடிபடும் வேளையில், சர்ச்சைக்குரிய ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட்டின் பெயரும் இடம் பெற்றுள்ளது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    யார் இந்த ரிக்கி ராதன் பண்டிட்?

    ஈரோட்டில் பிறந்த வெற்றிவேல் என்ற இவர், பின்னர் சிங்கப்பூர் சென்று தனது பெயரை 'ரிக்கி ரத்தன் பண்டிட்' என மாற்றிக் கொண்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆலோசகராக இருந்தவர்.

    சர்ச்சை: அண்மையில் முதலமைச்சர் விஜய்யின் 'சிறப்பு அதிகாரி' (OSD - Officer on Special Duty) ஆக இவர் நியமிக்கப்பட்டது அரசியல் வட்டாரங்களில் கடும் விமர்சனங்களை எழுப்பியது. ஒரு ஜோதிடருக்கு அரசுப் பதவி வழங்குவதா என்ற சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து, உடனடியாக அவர் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

    பட்டியலில் உள்ள பிற முக்கியப் பிரமுகர்கள்

    ரிக்கி ரத்தன் பண்டிட் தவிர த.வெ.க.வின் பரிசீலனையில் உள்ள பிற முக்கியப் பெயர்கள்:

    Advertisement

    ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவி

    விஷ்ணுரெட்டி

    அரசியல் வியூக நிபுணர் ஜான் ஆரோக்கியசாமி (கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளர்)

    ஜெகதீஷ் (விஜய்யின் தனிச்செயலாளர்)

    முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன்

    விஜய் தனது முதல் எம்பி சீட்டை ஒரு நிர்வாகத் திறமையாளருக்கு வழங்குவாரா, தனது விசுவாசிகளுக்கு வழங்குவாரா அல்லது மீண்டும் சர்ச்சைக்குரிய முகத்தைத் தேர்ந்தெடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

    English Summary

    With the Tamilaga Vettri Kazhagam (TVK) now in power in Tamil Nadu, expectations are rising over who will become the party’s first Rajya Sabha MP. Political circles are actively discussing the possible candidates.