சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியில் முக்கிய கமிட்டிகளுக்கான நியமனங்கள் இறுதியாகி இருக்கின்றன. மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால் கவனத்துக்கு சென்றுள்ளது பட்டியல்.. இப்போது 3 முக்கிய கமிட்டிகளுக்கு அப்ரூவல் கிடைத்துள்ளது.. அதில் யார் யார் இடம்பெற்றிருக்கிறார்கள்? சத்தியமூர்த்தி பவனில் என்ன நடக்கிறது? இதுகுறித்த ஒரு எக்ஸ்க்ளூசிவ் தகவல் நமக்கு கிடைத்துள்ளது.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியில் மாநில அளவிலான பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படாமல் இருந்து வருகிறது. அதேபோல, சில முக்கிய கமிட்டிகளுக்கும் தலைவர்கள் நியமிக்கப்படவில்லை.
மாணிக்கம் தாக்கூர் தலைவரானதும் இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார் ஜுனகார்கே மற்றும் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி.வேணு கோபால் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு சென்றார். மேலும், இது தொடர்பான பட்டியல்களும் கொடுக்கப்பட்டன. இந்த நிலையில், சில கமிட்டிகளின் நியமனங்களுக்கு கே.சி.வேணு கோபால் அப்ரூவல் அளித்துள்ளார். குறிப்பாக, தமிழக காங்கிரஸ்சுக்காக, அரசியல் விவகார கமிட்டி (பொலிட்டிக்கல் அஃப்பேர்ஸ் கமிட்டி), ஆலோசகர் கமிட்டி (அட்வைசரி கமிட்டி), ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி ( டிசிப்பிளினரி ஆக்சன் கமிட்டி) ஆகிய கமிட்டிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார் கே.சி. வேணு கோபால். இந்த கமிட்டிகளில் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மூத்த நிர்வாகி கள் பலரும் இடம்பிடித்திருக்கிறார்கள். அந்த வகையில், தமிழக காங்கிரசின் அரசியல் விவகாரக குழுவில் குலாம் அகமது மிர், மாணிக்கம் தாக்கூர், தாரை கத்பெர்ட், சசிகாந்த் செந்தில், கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, விஷ்ணுபிரசாத், விஜய் வசந்த், சுதா ராமகிருஷ்ணன், ப்ரவீன் சக்கரவர்த்தி, கிறிஸ்டோபர் திலக், ராஜேஷ் குமார், விஸ்வநாதன், ஆனந்த் சீனிவாசன், பீட்டர் அல்ஃபோன்ஸ், அருள் பெத்தையா, சிரஞ்சீவி, செங்கம் குமார், சொர்ணா சேதுராமன் உள்பட 31 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக காங்கிரசின் அட்வைசரி கமிட்டியில் குலாம் அகமது மிர், மாணிக்கம் தாக்கூர், ப.சிதம்பரம், டாக்டர் செல்லக்குமார், தங்கபாலு, திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை, கே.ஆர். ராமசாமி, கோபிநாத், கே.ராணி, ராபர்ட் ப்ரூஸ், ரூபி மணோகரன், பிரின்ஸ், ராணி வெங்கடேசன், அருள் அன்பரசு, பலராமன், ராமசுப்புராம், பொன் கிருஷ்ணமூர்த்தி உள்பட 48 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, ஒழுங்கு நடவடிக்கை குழுவில், கே.ஆர்.ராமசாமி, டாக்டர் ஜெயக்குமார், ராமசுப்பு, யூ.பலராமன், பழனிச்சாமி, சுதா ராமகிருஷ்ணன், அமீர்கான் ஆகிய 7 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், இந்த கமிட்டியின் தலைவராக கே.ஆர்.ராமசாமி செயல்படுவார். முக்கிய கமிட்டிகளுக்கான தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர்கள், செயலாளர்கள், பொதுக்குழு-செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய நியமனங்களுக்கு எப்போது அப்ரூவல் தரப்படும் என்கிற எதிர்பார்ப்பு சத்தியமூர்த்திபவனில் இருக்கிறது...!! ஆக, 3 முக்கிய கமிட்டிகளுக்கு அப்ரூவல் கிடைத்துவிட்டது. அடுத்ததாக மீதமுள்ள நிர்வாகப் பொறுப்புகளுக்கான பட்டியலுக்கும் மேலிடம் பச்சைக்கொடி காட்டுமா? அப்படியானால் அந்த பட்டியல் எப்போது வெளியாகும்? சத்தியமூர்த்தி பவனில் இப்போது எழுந்திருக்கும் அடுத்த கேள்வி இதுதான்...!!! - நமது சிறப்பு நிருபர் எழில்மாணிக்கம் தாக்கூர்
அரசியல் விவகாரக குழு
ஒழுங்கு நடவடிக்கை குழு