ஒரே பாட்டில் விஸ்கி.. கோவாவில் வெறும் ரூ.1300.. ஆனால் தமிழ்நாட்டில் ரூ.3400க்கு விற்கப்படுவது ஏன்?

  • சென்னை: மது குடிப்பது உடலுக்கு தீங்கானது என்பது அனைவருக்கும் தெரிந்தாலும் கூட மது குடிக்கும் பழக்கம் என்பது தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதற்கிடையே மதுபானங்கள் விலை ஏன் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. பாண்டிச்சேரி, கோவாவில் மதுபானம் குறைவாக இருக்கும் நிலையில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் மது விலை ஏன் அதிகமாக இருக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்!

    Advertisement

    இந்தியாவில் மது வாங்கும்போது, ஒரே நிறுவனத்தின் ஒரே அளவு பாட்டிலுக்கே மாநிலத்துக்கு மாநிலம் விலையில் மிக பெரிய வித்தியாசம் இருப்பதை பார்க்க முடியும். பிரபல விஸ்கி பிராண்ட் 750 மிலி பாட்டிலை எடுத்து கொண்டால், ஹரியானாவில் அதன் விலை சுமார் ரூ.1,300ஆக இருக்கிறது.

    Advertisement

    விலை வித்தியாசம்

    டெல்லியில் இதே பாட்டில் ரூ.1,850க்கும், கோவாவில் சுமார் ரூ.1,740க்கும் கிடைக்கிறது. ஆனால் கர்நாடகாவில் இதன் விலை ரூ.3,425 வரை செல்கிறது. அதாவது, ஹரியானாவை விட கர்நாடகாவில் அதே பாட்டிலின் விலை இரண்டு மடங்குக்கும் அதிகமாக உள்ளது. அப்படியானால் ஒரே நிறுவனத்தின் மதுபானம், மாநில எல்லையை கடந்தவுடன் ஏன் இவ்வளவு விலை உயர்கிறது?

    என்ன காரணம்

    இதற்கு முக்கிய காரணம் மதுபானத்தின் மீது மாநிலங்களுக்கு இருக்கும் வரி விதிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரம் தான். நமது நாட்டில் இப்போது ஒரே நாடு ஒரே வரி என்ற ஜிஎஸ்டி நடைமுறையில் இருந்தாலும் கூட சில பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் இருந்து வெளியே இருக்கிறது. அதில் மதுபானங்களும் ஒன்று! மதுபானம் ஜிஎஸ்டி வரி முறைக்கு வெளியே உள்ளது. இதனால் ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியாக கலால் வரி, விற்பனை வரி, கூடுதல் கட்டணம் உள்ளிட்டவற்றை நிர்ணயிக்கிறது.

    Advertisement

    ஒரு பாட்டிலின் விலை என்பது மதுபானம் தயாரிக்க ஆகும் செலவு மட்டுமல்ல. அதனுடன் கலால் வரி, இறக்குமதி அல்லது சுங்கக் கட்டணம், வாட் மற்றும் கூடுதல் வரிகள், விநியோக செலவு, கடை லாபம் உள்ளிட்ட பல்வேறு செலவுகளும் சேர்கின்றன.

    வரிகள்

    உதாரணமாக, ஒரு விஸ்கி தயாரிக்க மட்டும் ரூ.2,000 ஆகிறது என வைத்துக் கொள்வோம். அதற்கு வரியாக ரூ.425, சுங்க கட்டணமாக ரூ.150, பிற கட்டணங்களாக ரூ.10, வாட் அல்லது கூடுதல் வரியாக ரூ.570, கடை லாபமாக ரூ.150 என மொத்தம் ரூ.1,305 வரை செல்லக்கூடும். அதாவது உற்பத்திக்கு இணையாக வரியும் விதிக்கப்படுவதே விலை இந்தளவுக்கு அதிகமாக இருக்க பிரதான காரணமாகும்.

    Advertisement

    தமிழ்நாடு vs புதுச்சேரி

    கோவாவில் மதுபானம் ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் கிடைப்பதற்கு அந்த மாநிலத்தின் சுற்றுலா பொருளாதாரமும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. குறைந்த விலையில் மதுபானம் என்பது தான் நீண்ட காலமாக கோவாவின் சுற்றுலா துறையின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாக இருந்து வருகிறது. மேலும், கோவாவின் கலால் வரியும் குறைவு. இதன் காரணமாகவே அங்கு இப்போது விலை குறைவாக இருக்கிறது. நம்ம புதுச்சேரிக்கும் இதே கணக்கு தான். அதேநேரம் கோவாவில் எப்போதுமே மதுபானங்களும் குறைந்த விலையில் தான் இருக்கும் என்று கூற முடியாது. வரி, உரிம கட்டணம் உள்ளிட்டவற்றில் மாற்றம் வந்தால் விலையும் மாறக்கூடும்.

    Advertisement

    தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் மதுபான விலை அதிகமாக இருப்பதற்கு அந்தந்த மாநிலங்களின் வரி மற்றும் விற்பனை முறைகள் முக்கிய காரணங்களாக உள்ளன. கலால் வரி, கூடுதல் வரிகள், கட்டணங்கள், விநியோக செலவுகள் மற்றும் சில்லறை விற்பனை அமைப்பு ஆகியவை தான் இந்த மாநிலங்களில் விலை அதிகமாக இருக்க பிரதான காரணமாகும்.

    கர்நாடகாவில் 2026ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வரி மாற்றங்கள் இதற்கு ஒரு உதாரணம். புதிய வரி முறையால் குறைந்த விலை மதுபானங்களின் விலை சுமார் 20 சதவீதம் வரை உயரலாம் என வியாபாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் பிரீமியம் மதுபானங்களின் விலை 5 முதல் 12 சதவீதம் வரை குறையலாம் என்றும் சிலவற்றில் 20 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. இப்படி மாநில அரசு செய்யும் ஒவ்வொரு மாற்றமும் மதுபான விலையை மாற்றும்!

    Advertisement

    விலை வித்தியாசம்

    ஒரு மாநிலத்தில் சாதாரணமாக கிடைக்கும் மதுபானம், மற்றொரு மாநிலத்தில் அதிக விலை கொண்ட பொருளாக மாறலாம். இதனால் குடிமகன்கள் வேறு பிராண்டுகளை தேர்வு செய்வார்கள். அல்லது வாங்கும் அளவை குறைப்பார்கள். இப்படி மது வாங்குவதை குறைக்க வேண்டும் என்பதற்காகவே இதுபோல அதிக வரி விதிக்கப்படுகிறது.

    மதுபான நிறுவனங்களுக்கும் ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி சந்தையாகவே உள்ளது. வரி, உரிமம், விநியோகம், விற்பனை கட்டுப்பாடுகள் மற்றும் சில்லறை விற்பனையாளர் லாபம் என அனைத்தையும் கணக்கில் கொண்டுதான் விலையை நிர்ணயிக்க வேண்டியுள்ளது. எனவே, ஒரே பிரண்ட் மது பாட்டில் வெவ்வேறு விலையில் விற்கப்படுவதால் அதன் தரம் குறைந்ததாக அர்த்தமில்லை. மாறாக மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும் வரியே முக்கிய இதற்கு முக்கிய காரணமாகும்!

    English Summary

    Same Whisky bottle cost around Rs.1,300 in Haryana but up to Rs.3,425 in Karnataka(மாநிலங்களில் வேறுபடும் மது விலை): State-level excise taxes, VAT, additional charges, distribution costs and retail systems are reason for Alcohol Prices Differ Across Indian States.