Udhay Vs Aadhav: நாங்கள்தான் ஒன்றுமே செய்யலையே! அமல்ராஜ் IPS-ஐ ஏன் சென்னை கமிஷனராக்குனீங்க? உதயநிதி

  • சென்னை: அமலாக்கத் துறை சிஐடியாக இருந்த அமல்ராஜ் ஐபிஎஸ்ஸை சென்னை மாநகர ஆணையராக ஏன் நியமித்தீர்கள் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    கோவை மாணவர் அமுதன், சென்னை திருவொற்றியூர் தனுஷ்குமார் உள்ளிட்ட மாணவர்கள் இறப்பு குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கொண்டு வந்தன.

    Advertisement

    அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கோவையில் அமுதன் என்ற மாணவர் 20 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இது வெறும் மாணவர்கள் மோதல் என சொல்லி கடந்துவிட முடியாது. போதை பொருள் விற்பனை குறித்து அந்த மாணவன் போலீஸுக்கு தகவல் சொன்னதால்தான் இந்த கொலை நடந்தது என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணை வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் மாணவரின் மரணத்திற்கு நீதி கேட்டு திமுக சார்பில் போராட்டமும் அறிவிக்கப்பட்டது என கூறிய உதயநிதி, தொடர்ந்து அண்மையில் கொல்லப்பட்டவர்கள் குறித்த புள்ளி விவரங்களை தெரிவித்தார்.

    Advertisement

    அப்போது ஆதவ் அர்ஜுனா பேசுகையில், 2020 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை தமிழகத்தில் போதை கலாச்சாரம் இல்லை. ஆதாரம் இங்கே இருக்கிறது என்றார். அப்போது திமுகவினர் ஆதாரம் எங்கே என கேள்வி எழுப்பியிருந்தனர்.

    உண்மை இல்லாதவர்கள் தான் இப்படி சப்தமிடுவார்கள், உங்களிடம் தவறு இல்லை என்றால் என்னை ஏன் பேச அனுமதிக்காமல் சப்தமிடுகிறீர்கள் என கேட்ட ஆதவ் ஒரு விஷயத்தை குறிப்பிட்டார், அதை சபாநாயகர் அவைக் குறிப்பில் இருந்து நீக்கிவிட்டார்.

    இதையடுத்து ஆதவ் அர்ஜுனா தொடர்கையில், போதை கலாச்சாரம் உருவானால் அதிகமானால் முதலில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரிக்கும். எனவே 2023- 2024 கால கட்டத்தில் மட்டும் 40 சதவீதம் போக்சோ வழக்குகள் அதிகரித்துள்ளன.

    Advertisement

    எங்களது தவெக ஆட்சியில் போதை பொருள் தடுப்பு படையை உருவாக்கியுள்ளோம். இவ்வாறு ஆதவ் அர்ஜுனா பேசினார். அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளாக போதை பொருட்களை ஒழிக்க முன்னாள் முதல்வர் ஸ்டாலின் சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற ஒரு கருத்து வைக்கப்பட்டுள்ளது.

    ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் போதை பொருள் இல்லா தமிழகம் என்ற இலக்கோடு, மதுவிலக்கு அமலாக்கத் துறையையும் போதை பொருள் தடுப்புத் துறையையும் ஒன்றிணைத்து EBCID என்ற ஒரு புதிய துறையை உருவாக்கினார்.

    அவர் அப்படி செயல்பட்டால்தான் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி போதை பொருட்களை தொடர்ந்து எங்களது அரசு பறிமுதல் செய்தது.

    Advertisement

    இது தொடர்பான புள்ளி விவரங்கள் அமைச்சர்கிட்டயே இருக்கு, கூடுதல் தகவல் தேவைப்பட்டால் நாம் எங்கேயும் போய் தேட தேவையில்லை, சென்னை மாநகர ஆணையராக உள்ள அமல்ராஜ் ஐபிஎஸ் கிட்ட கேட்டால் கடந்த ஆட்சியில் போதை பொருளை தடுக்க என்னென்ன செய்தார்கள் என்பதை அவரே எடுத்து தந்துவிடுவார். ஏனென்றால் அவர்தான் EBCID பிரிவை தலைமையேற்று நடத்தியிருந்தார்.

    அவரிடம் போய், எத்தனை முறை கஞ்சா பறிமுதல் செய்தோம், எத்தனை பேரை கைது செய்துள்ளோம் என எல்லா டேட்டாக்களும் அவரிடம் இருக்கிறது. போதை பொருள் தடுப்பு செயல்பாடுகள் கடந்த ஆட்சியில் சரியாக நடக்கவில்லை என தவெக அரசு எங்களை குற்றம்சாட்டினால் அவ்வளவு பெரிய அதிகாரியான அமல்ராஜை என்னாத்துக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் பொறுப்பில் போட்டிருக்கீங்க?

    Advertisement

    சுதந்திர தின விழாவில் 15 காவலர்களுக்கு முதல்வர் விருது வழங்கினார். அவர்கள் போதைப்பொருள் நடவடிக்கைளில் கடந்த ஓராண்டாக சிறப்பாக செயல்பட்டதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது, எங்கள் ஆட்சியில் நடவடிக்கை எடுக்ககவில்லை என்று சொன்னால் இப்போது அவர்களுக்கு முதல்வர் எதற்காக விருது வழங்கினார்? என உதயநிதி கேள்வி எழுப்பினார்.

    English Summary

    LOP Udhayanidhi stalin asked Why EBCID chief Amalraj IPS was appointed as Chennai police commissioner?