பாட்டிலுக்கு 10 ரூபாய் ஏன் ? ஓபன் ஆக போட்டு உடைத்த டாஸ்மாக் ஊழியர்

  • தஞ்சாவூர்: தஞ்சாவூரில் டாஸ்மாக் பணியாளர் ஒருவர் அளித்த பேட்டியில் கூறுகையில், "பாட்டிலுக்கு எம்ஆர்பியை விட கூடுதலாக 10 ரூபாய் வாங்குவது எதற்கு என்றால், எங்களுக்கு வந்து இதர செலவுகள் நிறைய உள்ளது. முதலில் கடையின் வாடகை, இபி பில், இபி பில் முழுவதுமாக அரசிடம் இருந்து வழங்கப்படுவது இல்லை.. இடத்திற்கான வாடகையும், அரசு கொடுக்கிற வாடகை இல்லாமல் இன்னும் கூடுதலாக கொடுக்க வேண்டிய சூழல் தான் இருக்கிறது.

    Advertisement

    அடுத்து அட்டை பெட்டிக்கான பணத்தை நாங்கள் திரும்ப கட்ட வேண்டும். 4 பெட்டிக்கு ஒரு கிலோ வெஸ்ட்டுக்கு பணம் கட்ட வேண்டியுள்ளது. இதனை எல்லாம் சேகரித்து வைப்பதற்கான இடமே இல்லை.. அந்த இடத்திற்கான வாடகை கொடுக்க வேண்டியுள்ளது. அடுத்து சரக்கை இறக்குபவர்களுக்கு பணம் தர வேண்டியுள்ளது. அடுத்து ஒரு நாளைக்கு 1000, 1500 பாட்டில்களை திரும்ப பெற வேண்டும். அதனை சேமித்து வைக்க இடவசதிக்காக பணம் தேவைப்படுகிறது. அதுவும் பாட்டில் ஒப்பந்ததாரர்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் எடுக்க வருகிறார்கள். எனவே பாட்டிலை சேமிக்கும் இடத்திற்கான வாடகையை நாங்கள் தான் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இதனை எல்லாம் எப்படி கொடுக்க முடியும்.

    Advertisement

    அதேபோல் டாஸ்மாக் கடையில் பாட்டிலை வாங்குவதற்கு ஆள் கிடையாது. கடையில் உள்ள பணியாளர்கள், ஸ்கேன் செய்ய வேண்டும். ஸ்டிக்கர் ஒட்ட வேண்டியிருக்கிறது. ஆள் பற்றாக்குறை இருக்கிறது. பாட்டிலை திரும்ப பெறுவதற்கு தனியாக நாங்களே ஆள் போட்டிருக்கிறோம். அவர்களுக்கு சம்பளமாக ஒரு நாளைக்கு 1000 முதல் 1500 தர வேண்டியுள்ளது. இவ்வளவு சிரமங்களுக்கு நடுவில் தான் நாங்கள் கடைகளை நடத்தி வருகிறோம்.

    இந்த செலவுகளை எல்லாம் அரசு ஏற்றுக்கொண்டால் எம்ஆர்பிக்கு மேல் வாங்க மாட்டோம். அதேபோல் ஒரு சராசரி மனிதனின் சம்பளம் எவ்வளவு என்பதை கணக்கிட்டு, அந்த சம்பளத்தை எங்களுக்கு வழங்க வேண்டும். 23 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். எங்களில் பலருக்கு அப்போது திருமணம் ஆகவில்லை.. இப்போது அனைவருக்கும் குடும்பம் , குழந்தைகள் என்று உள்ளது. குழந்தைகளின் படிப்பு, வீட்டு வாடகை என செலவுகள் இருக்கிறது. இதனை கணக்கிட்டு வழங்க வேண்டும்.

    Advertisement

    ஏன் அப்போது குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு வந்தோம் என்றால், அந்த நேரத்தில் வேலையில்லா திண்டாட்டம் இருந்தது.. எனவே படித்த பட்டதாரிகள் அனைவரும் டாஸ்மாக்கில் வேலைக்கு வந்தோம். இன்று வரை 23 ஆண்டுகளில் 12 ஆயிரம், 13 ஆயிரத்திற்கு தான் வந்துள்ளோம். வருடத்திற்கு 1000 உயர்த்தி இருந்தாலே, இன்று 23000 சம்பளம் ஏறி இருக்கும் . எங்கள் குறைகளை சரி செய்தால் எல்லாமே சரியாகிவிடும். கூடுதல் விலை விற்பதற்கான வாய்ப்பு இல்லை" என்றார்.

    English Summary

    In an interview given in Thanjavur, a TASMAC employee explained the rationale behind charging an additional ₹10 per bottle over and above the MRP: "We incur numerous other expenses. Foremost among these are the shop's rent and the electricity bill; notably, the electricity bill is not fully covered by the government.