அர்ச்சனா கல்பாத்தி, வேல்முருகன் கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் இடம் பெற்றது ஏன்? ரமேஷ் விளக்கம்

  • சென்னை: தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, பாடகர் வேல்முருகன் ஆகியோருக்கு கோயில் அறங்காவலர் குழுவில் பதவி வழங்கப்பட்டது ஏன் என்பது குறித்து இந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் விளக்கமளித்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு கூறியிருப்பதாவது: அர்ச்சனா கல்பாத்தியின் நியமனத்தை அவர் வெறும் தயாரிப்பாளராக பார்த்தால் தவறாகத்தான் தெரியும். அவர் ஏன் இந்த பதவிக்கு என்ற கேள்வி எழும்.

    Advertisement

    ஆனால் அர்ச்சனா கல்பாத்தி 10-க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு திருப்பணி செய்துள்ளார். அவரது மாமனார் சீனிவாசன், பல கோடி பணத்தை செலவு செய்து கோயில்களில் திருப்பணிகளை நடத்தியுள்ளார். அர்ச்சனாவுக்கு வழங்கப்பட்ட பொறுப்பு என்பது திருப்பணி செய்ய முன்வோருக்கு ஊக்கமாக இருக்கும்.

    அது போல் தவெக நிகழ்ச்சிகளில் பாடியதால் மட்டும் வேல்முருகனுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர் கோயில்களில் பல்வேறு பாடல்களை பாடி வருகிறார். அது போல் ஆன்மீக சொற்பொழிவாளர் சுமதி ஸ்ரீக்கும் வழங்கப்பட்டது.

    10 லட்சத்திற்கு மேல் வருமானம் வரும் கோயில்களில் அறங்காவலர் குழு உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழு என்பது முக்கியமானது. இந்த குழுதான் பல்வேறு கோயில்களுக்கு அறங்காவலர் குழு உறுப்பினர்களை தேர்வு செய்யும். அது போல் அந்த தேர்வுக் குழு அறநிலையத் துறைக்கும் உதவியாக இருக்கும் என ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணை விவரம்: தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வரும் கோயில்களுக்கு தகுதியான பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களை தேர்வு செய்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக மாநில அளவில் பிரத்யேக குழு அமைக்கப்பட்டிருந்தது.

    இந்தக் குழுவின் 2 ஆண்டு பதவிக்காலம் கடந்த ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து புதிய குழுவை அமைக்க அரசுக்கு அறநிலையத்துறை ஆணையர் கோரிக்கை விடுத்திருந்தார். அதையேற்று ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்குமேல் வருவாய் வரும் கோயில்களுக்கு 'பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களை' தேர்வு செய்து பரிந்துரைக்க புதிய மாநிலக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இதன் தலைவராக மயிலம் பொம்மபுரம் ஆதீனம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள், துணைத் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி கே.இராமநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், குழுவின் உறுப்பினர் செயலராக அறநிலையத் துறை ஆணையர் திகழ்வார்.

    இந்தக் குழுவின் உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ப.ரா.சம்பத், திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரம், பின்னணி பாடகர் த.வேல்முருகன், ஆன்மிகப் பேச்சாளர் மா.சுமதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இக்குழு ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருவாய் வரும் கோயில்களுக்கு தகுதியான அறங்காவலர்களை தேர்வு செய்து அரசுக்கு உரிய பரிந்துரை பட்டியலை தயாரித்து வழங்கும் பணிகளை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அர்ச்சனா கல்பாத்தி திரிஷாவுக்கு நெருக்கமானவர். இதனால் அவருக்கு பதவி வழங்கப்பட்டது குறித்து பெரும் சர்ச்சை எழுந்தது. அது போல் தவெக நிகழ்ச்சியில் முருகன் பாடலின் வரிகளை மாற்றி பாடிய விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய வேல்முருகனுக்கு பதவி வழங்கப்பட்டதும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. முன்னதாக ஜனநாயகன் தயாரிப்பாளர் வெங்கட நாராயண ரெட்டிக்கு தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி பதவி வழங்கப்பட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    English Summary

    Minister Ramesh explains why Archana Kalpathi and Velmurugan were included in appointed as temple trustees.