Motherson: எல்லாரும் சொல்ற மாதிரி இந்திய கம்பெனிக்கு லண்டன் போய் MoU போட்டாரா விஜய்? உண்மை என்ன?

  • சென்னை: இந்தியாவில் உள்ள மதர்சன் நிறுவனத்தின் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் விஜய் லண்டன் சென்றது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அந்த நிறுவனம் குறித்து தவெக இன்ப்ளூயன்சர்கள் விளக்கத்தை பாருங்க.

    Advertisement

    வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்ற முதல்வர் விஜய் முன்னிலையில், மதர்சன் நிறுவனத்துடன் ரூ 11000 கோடி முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானதாக தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் சுமார் 7 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.

    Advertisement

    இதுகுறித்து அரசு தரப்பில் வெளியான அறிக்கையில், "45-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டுவரும் முன்னணி பன்னாட்டு நிறுவனமான 'சம்வர்தனா மாதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட்' (Samvardhana Motherson International Limited), தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, ஒருங்கிணைப்பு மற்றும் தளவாடங்கள் (D.E.M.A.L.) சார்ந்த வசதிகளை நிறுவுவதன்மூலம் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.

    இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், மாதர்சன் குழுமம் சுமார் ரூ.11,000 கோடி மதிப்பிலான புதிய முதலீட்டு வாய்ப்புகள் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 7,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த முதலீடுகள், மாதர்சன் குழுமத்தின் பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பக் கூட்டாண்மைகளுடன் (Joint Venture & Technical Partners) இணைந்து மேற்கொள்ளப்படவுள்ளன.

    Advertisement

    இத்திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு மேம்பட்ட உற்பத்தித் திறன்கள், உலகளாவிய பொறியியல் நிபுணத்துவம் மற்றும் புதிய தொழில்நுட்பக் கூட்டாண்மைகளைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், சர்வதேச வாகன உற்பத்தி மற்றும் மேம்பட்ட உற்பத்தி சார்ந்த மதிப்புச் சங்கிலிகளுடன் (value chains) மாநிலத்தின் ஒருங்கிணைப்பை இவை வலுப்படுத்தும். இந்த முதலீடு, உயர் மதிப்புமிக்க உற்பத்தி, பொறியியல், வடிவமைப்பு மற்றும் ஏற்றுமதி சார்ந்த தொழில்களுக்கான ஒரு முக்கிய இடமாகத் தமிழ்நாட்டின் நிலையை மேலும் வலுப்படுத்துவதுடன், உற்பத்தி மதிப்புச் சங்கிலியில் தமிழ்நாடு அடுத்தக்கட்டத்திற்கு முன்னேறவும் வழிவகுக்கும்." என குறிப்பிடப்பட்டுள்ளது.

    அரசு குறிப்பிட்ட மதர்சன் நிறுவனம் நொய்டாவில் இருப்பதாகவும், இதை தில்லு முல்லு முதல்வரின் முதலீடுகள் என தமிழக பாஜக குறிப்பிட்டுள்ளது. இதற்கு தவெக இன்ப்ளூயன்சர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர். அதில் "மதர்சன் நிறுவனம் இந்தியாவில் இருப்பதால் அது வெளிநாட்டு முதலீடல்ல என சிலர் சொல்கிறார்கள்.

    மதர்சன் நிறுவனம் நொய்டாவில் இருப்பதாலேயே அது இந்தியாவில் செயல்படும் நிறுவனம் என சொல்லிவிட முடியாது. மதர்சன் நிறுவனத்தின் பிரிட்டன், ஐரோப்பிய துணை நிறுவனங்கள் இரண்டுமே தனித்தனியாக பதிவு செய்யப்பட்டவை, தனித்தனி மூலதனம் கொண்டவை, சட்டப்பூர்வமாகவே இவை இரண்டும் இந்திய நிறுவனங்களில் இருந்து வேறுபட்டவை என்கிறார்கள்.

    Advertisement

    ஒரு நிறுவனம் எங்கு தொடங்கப்பட்டதோ அந்த நாடு மட்டுமே எங்கு முதலீடு செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்காது. மதர்சன் நிறுவனம் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கி வருகிறது.

    இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முதல்வர் விஜய், பிரிட்டன், ஐரோப்பிய துணை நிறுவனங்களுடன்தான் ஒப்பந்தம் செய்துள்ளார். அவர்கள் தங்களது முதலீட்டை தமிழகத்திற்கு கொண்டு வருகிறார்கள். இது தமிழகத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் உதிரிபாகங்களை தயாரித்து, விநியோகத்தை விரிவுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே அந்நிய முதலீடுகள் என்பதற்கு அர்த்தம் தெரியாமல் அரைகுறையாக யாரும் கருத்துகளை பகிர வேண்டாம்" என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    English Summary

    TVK Influencers explains that Motherson is Indian company or foreign ? Why CM Vijay attract investment for Indian company at London?