கோட் சூட் போடுறதை அவங்களே விட்டுட்டாங்க.. விஜய் பற்றி சட்டென வாயை விட்ட ப்ளூ சட்டை மாறன்!

  • சென்னை: இன்று தமிழக சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். அப்போது, கோட் சூட் அணிந்த விவசாயி முதல்வர் விஜய் என்று அவர் கூறியிருந்தது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

    Advertisement

    வேளாண்துறை அமைச்சர் வினோத் இன்று பட்ஜெட்டை வாசிக்க தொடங்கியபோது, "கோட் சூட் அணிந்த விவசாயி விஜய்" என்று கூறி.. தொடர்ந்து புகழ்ந்து பேசி வந்தார். இதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர் சத்தம்போட.. சபாநாயகர் குறுக்கிட்டு பட்ஜெட்டை மட்டும் வாசிக்க வேண்டும் என்று கூறினார். பின்னர் அமைச்சர் பட்ஜெட்டை வாசிக்க தொடங்கினார்.

    Advertisement

    இது குறித்து திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது x பக்கத்தில், "தமிழ்நாட்டில் சாமான்யர்கள் அணியாத உடை கோட், சூட் மற்றும் பட்டு வேட்டி, சட்டை. காரணம்: வசதியின்மை மற்றும் தட்பவெட்பம்.

    ஆனால் இந்த இருவகை ஆடைகளைத்தான் விஜய் அணிகிறார். உலக வெப்பமயமாதல் அதிகரிப்பதால்.. வெளிநாடுகளில் கூட கோட், சூட் அணியும் காலம் குறைவு. முரண்பட்ட வாழ்வியல்." என பதிவிட்டிருக்கிறார்.

    இவர் சொல்வது உண்மைதான். சமீப நாட்களாக வெளிநாடுகள், குறிப்பாக மேற்கு நாடுகள் அதிக அளவில் வெயிலை எதிர்கொண்டிருக்கின்றன. பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் 100 டிகிரி பாரன்ஹீட்டை வெயில் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்று அரசு நிறுவனங்கள் ஆடை கட்டுப்பாடுகளை தளர்த்தி கோட் சூட்-க்கு விலக்கு அளித்திருக்கிறது. குறிப்பாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அலுவலத்திற்கு ஊழியர்கள் சாட்ஸ் மற்றும் டி-சர்ட் அணிந்து வர அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Blue Sattai Maran: Minister Vinoth presented the agriculture budget in the Tamil Nadu Legislative Assembly today. His remark referring to Chief Minister Vijay as a "farmer in a suit" has sparked a debate.