3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே!

  • சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளை யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். 200 தொகுதிகளுக்கு மேல் வென்று மீண்டும் ஆட்சியை தக்க வைப்போம் என திமுக நம்பியது. ஆனால் அது நடக்கவில்லை. அதைவிட மோசமாக தோற்று இருக்கிறது அதிமுக. 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளும் கட்சியாகவும், எதிர்க் கட்சியாகவும் இருந்த அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

    Advertisement

    2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுகவை விட தேர்தல் பணிகளை முன்னரே தொடங்கியது அதிமுக தான். தேர்தலுக்கு பல மாதங்கள் இருப்பதற்கு முன்னதாகவே பாஜக அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டது.

    Advertisement

    தொடர்ந்து பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் தமிழகம் வரத் தொடங்கினர். கூட்டணியில் சேரவே சேராது என எதிர்பார்க்கப்பட்ட அமமுகவும் கைகோர்த்து. அதனுடன் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பாமகவும் கூட்டணி சேர்ந்தது.

    புதிய நீதிக் கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளும் கைகோர்த்த நிலையில் 234 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக கூட்டணி 53 இடங்களில் மட்டுமே வென்றது. அதிமுக தனித்து 47 தொகுதிகளில் மட்டுமே வென்றது. மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம் என்ற நம்பிக்கையில் இருந்த அதிமுக தலைமை இந்த தோல்வியால் பெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறது.

    Advertisement

    இது மட்டுமல்லாமல் சிவி சண்முகம் எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் தலைமைக்கு எதிராக போர் கொடி தூக்கி இருக்கின்றனர். 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள் மாவட்டச் செயலாளர்கள் தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி பயணித்து வருகின்றனர்.

    பலமுறை அதிமுக இது போன்ற நெருக்கடிகளை சந்தித்து இருந்தாலும் இந்த முறை மோசமான தோல்வியால் அந்தக் கட்சிக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் தோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்..

    English Summary

    AIADMK’s sharp decline in the 2026 Assembly election has sparked debate over leadership, alliances and voter shifts.