ஹோட்டல் ரூமில் நள்ளிரவில் நுழைந்த அசாம் காதலன்.. அங்கே கிடந்த 2 பொருட்கள்! சென்னையிலேயே பிளான்

  • 890சென்னை: சென்னையிலிருந்து கிளம்பி, அசாம் ஹோட்டலில் ஒரு பெண் தங்கியிருந்தார்.. அவரை சந்திக்க நள்ளிரவில் ஒருவர் அந்த அறைக்குள் சென்றிருக்கிறார்.. ஆனால் அடுத்த சில மணி நேரத்தில் அந்த ரூமில் நடந்த சம்பவம் பெருத்த அதிர்ச்சியை தந்து விட்டது.. கடைசியில் படுக்கையில் கிடந்த சில பொருட்களே, நடந்த கொடூரத்தை அம்பலப்படுத்தி விட்டன.. என்ன நடந்தது? யார் இந்த பெண்?

    Advertisement

    அசாம் மாநிலம் உடல்புரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அபிஜித் கிண்டோ.. அதே பகுதியை சேர்ந்தவர் மலினி குரியா.. இருவரும ஒருவருக்கொருவர் உயிருக்குயிராக காதலித்து வந்துள்ளனர்.. இதில் மலினி குரியா சென்னையில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.. அவருடன் மேலும் 2 பெண்களும் சென்னையில் வேலை பார்த்து வந்துள்ளனர்.

    Advertisement

    சென்னை டூ அசாம்

    இந்த நிலையில், சமீபத்தில் 3 பெண்களும் சென்னையில் இருந்து அசாமுக்கு சென்றிருக்கிறார்கள்.. கம்ரூப் அருகே உள்ள ரங்கியாவே ஸ்டேஷனுக்கு அவர்கள் வருவதாக தெரியவும், அவர்களை வரவேற்க கிண்டோ அங்கு சென்றிருந்தார்... 3 பேரையும் அழைத்துக்கொண்டு அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சென்ற அவர், அவர்களுக்காக ஒரு ரூமையும், தனக்கு மட்டும் தனியாக ஒரு ரூமையும் எடுத்துள்ளார்.

    அன்று இரவு எல்லோரும் அவரவர் ரூமில் தங்கியிருந்தனர். ஆனால் நள்ளிரவில் கிண்டோ, குரியா தங்கியிருந்த அறைக்குள் சென்றுள்ளார். அங்கே 2 பேருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் அந்த வாக்குவாதம் கைகலப்பு வரை சென்றது.. ஒருகட்டத்தில் உச்சக்கட்ட ஆவேசமடைந்த கிண்டோ தன்னுடன் எடுத்துச் சென்ற கத்தரிக்கோலால் குரியாவை சரமாரியாக குத்தி தாக்கி விட்டார்.. இதில் படுகாயமடைந்த குரியா ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார்.

    Advertisement

    ஹோட்டல் ரூம்

    மறுநாள் காலையில் ரூமிலிருந்த தங்கியிருந்த தோழிகள், குரியாவை காணாமல் திகைத்தனர்.. உடனே அவருக்கு போன் செய்தனர்.. ஆனால், குரியா போனை எடுக்கவில்லை.. மீண்டும் முயற்சித்தபோது, கிண்டோ போனை எடுத்து, "உங்க தோழியை கொன்னுட்டேன்.. நானும் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்" என்று தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண்கள் ஹோட்டல் ஊழியர்களிடம் தெரிவித்தனர்.

    ஹோட்டல் உரிமையாளர் உடனே விரைந்து வந்து அறைக்கதவை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. உடனே போலீஸாருக்கு தகவல் சென்றது. போலீஸார் வந்து அறையை திறந்து பார்த்தபோது, படுக்கையில் குரியா ரத்தக் காயங்களுடன் சடலமாக கிடந்தார். அவரது கழுத்து பகுதியிலும் காயங்கள் அதிகமான இருந்துள்ளன.. சீலிங் ஃபேனில் ஒரு துணி தொங்கியிருந்ததையும் போலீசார் கவனித்தனர்..

    Advertisement

    சடலம் பக்கத்திலேயே கிண்டோ கத்தரிக்கோலும் ஸ்க்ரூ டிரைவருமாக உட்கார்ந்திருந்தாராம்.. கிண்டோவின் உடம்பெல்லாம் காயங்கள் இருந்துள்ளன.. இதையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்..

    2 பொருட்கள்

    பிறகு கிண்டோவிடம் விசாரணை ஆரம்பமானது.. அப்போது, "குரியாவை நான் அதிகம் நேசித்தேன்.. ஆனால், எனக்கு அவள் துரோகம் செய்து செய்து விட்டாள்.. பல ஆண்களுடன் பேசுகிறாள்.. அது எனக்கு பிடிக்கவில்லை.. அதனால்தான், குரியாவை சென்னையில் வைத்தே கொலை செய்ய திட்டமிட்டேன்.. பிறகு, சென்னையில் இருந்து அசாம் வரப்போகிறார் என்றதுமே அதற்காக காத்திருந்தேன்" என்றெல்லாம் வாக்குமூலம் தந்துள்ளார்..

    இதையடுத்து,ரங்கியா போலீஸார் கிண்டோவை கைது செய்துள்ளனர்... அவரது உடலில் காயங்கள் அதிகமாக இருந்ததால் மருத்துவ சிகிச்சையும் கிண்டோவுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

    Advertisement

    இதற்கிடையே, சம்பவம் நடந்த ஹோட்டலில் தடயங்களை சேகரிக்க கவுகாத்தியில் இருந்து தடயவியல் நிபுணர்கள் குழு வந்துள்ளது. கத்தரிக்கோல், ஸ்க்ரூ டிரைவர் உள்ளிட்ட பொருட்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. காதல் விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சனைதான் இந்த கொலைக்கு காரணமா என்ற கோணத்திலும் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    English Summary

    Why Did an Assam Lover Plan It in Chennai?.. Entered Hotel Room at Midnight.. 2 Objects on the Bed