கட்டிலுக்கு கீழே பாருங்க சார்.. போலீஸிடம் கூலா சொன்ன கிறிஸ்டி! இப்படியும் ஒரு தாய்? ஐயோ அந்த குழந்தை

  • சென்னை: திருவனந்தபுரம் அருகே ஒரு வீட்டுக்குள் ஒன்றரை வயது குழந்தை ரத்த வெள்ளத்தில் அசைவின்றி கிடந்த காட்சி, அந்த குடும்பத்தினரையே அதிர்ச்சியில் உறைய வைத்தது. குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.. இதற்கு பிறகுதான் வீட்டுக்குள் என்ற நடந்தது என்ற விசாரணை ஆரம்பமாகவும், அடுத்தடுத்த அதிர்ச்சிகள் வெளியாகின..

    Advertisement

    திருவனந்தபுரம் விலவூர்க்கல் பகுதியில் உள்ள பொட்டையில், மருத்துவமனை அருகே வசித்து வரும் தம்பதி அபிஜித் - கிறிஸ்டி.. இந்த தம்பதியின் ஒன்றரை வயது மகள் அன்னா..

    Advertisement

    திருவனந்தபுரம் கிறிஸ்டி

    சம்பவத்தன்று மதிய உணவுக்கு பிறகு 3.30 மணிக்கு கிறிஸ்டி தனது குழந்தையை அழைத்துக்கொண்டு படுக்கை அறைக்குள் சென்றிருக்கிறார்.. பிறகு ரூம் கதவையும் மூடிவிட்டார்.. நீண்ட நேரமாகியும் அம்மாவும், குழந்தையும் ரூமை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த வீட்டில் இருந்த ஜசிந்தா, ரூம் கதவைத் தட்டியுள்ளார்.

    ஆனால் கதவை உடனடியாக திறக்காமல், 4.30 மணிக்கு கிறிஸ்டி கதவை திறந்ததாக கூறப்படுகிறது. அப்போது அறைக்குள், குழந்தை தரையில் ரத்த வெள்ளத்தில் அசைவின்றி கிடந்ததை கண்டு ஜசிந்தா அதிர்ச்சியடைந்துள்ளார்..

    குழந்தைக்கு என்ன நடந்தது

    குழந்தைக்கு என்ன நடந்தது என்று ஜசிந்தா பதறிப்போய் கேட்டதற்கு, நான் தான் குழந்தையை கொன்னுட்டேன் என்று கிறிஸ்டி கூலாக பதில் சொன்னாராம்..

    Advertisement

    இதனால் பதறிப்போன ஜசிந்தா குழந்தையை தூக்கிக்கொண்டு அலறியபடி வெளியே ஓடியுள்ளார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குழந்தை முதலில் விலவூர்க்கல் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பிறகு திருவனந்தபுரம் மருத்துவமனைக்கும் தூக்கிக் கொண்டும் ஓடினார்கள்.. ஆனால், சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்துவிட்டது.

    குழந்தையின் கழுத்தில் ஏற்பட்ட ஆழமான காயமே உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் விசாரணையை தொடங்கினர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி எங்கே என்று போலீசார் கேட்டதற்கு, கட்டிலுக்கு அடியில் இருப்பதாக கிறிஸ்டியே சொல்லி உள்ளார்.. பிறகு அந்த கத்தியையும் போலீசார் மீட்டனர்.

    Advertisement

    தற்கொலை முயற்சி

    பிறகு கிறிஸ்டியிடம் விசாரிக்க முயன்றனர்.. ஆனால் அதற்குள் கிறிஸ்டி அதிக அளவில் தூக்க மாத்திதை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதால், அவரையும் போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.. ஆனால், உண்மையிலேயே என்ன நடந்தது தெரியவில்லை.

    இதனால் அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரித்தபோது, "கிறிஸ்டிக்கும் அவரது கணவர் அபிஜித்துக்கும் பாளையம் தேவாலயத்தில் திருமணம் நடந்தது. 3 ஆண்டுகளுக்குப் பிறகுதான், குழந்தை பிறந்தது.. ஆனால், தம்பதியிடையே தொடர்ந்து பிரச்சனை இருந்து வந்தது.. குறிப்பாக, கணவர் மீது கிறிஸ்டிக்கு நிறைய சந்தேகம் இருந்தது.. இவர்களுக்குள் அடிக்கடி தகராறு நடக்க இந்த சந்தேகம்தான் காரணம்.

    Advertisement

    படுக்கையறைக்குள் என்ன நடந்தது

    ஒருகட்டத்தில் கோபித்து கொண்டு தன்னுடைய அம்மா போய் விட்டார் கிறிஸ்டி.. சமீபத்தில்தான், அதாவது கிருஷ்ண ஜெயந்தி அன்றுதான், கணவர் வீட்டிற்குத் திரும்பினார்.. மீண்டும் இவர்களுக்குள் தகராறு வெடித்திருக்கலாம், அதனாலேயே குழந்தையை கொன்றிருக்கலாம்" என்றும் விசாரணையில் தகவல்கள் கிடைத்துள்ளன.

    இதற்காகவா குழந்தையை கிறிஸ்டி கொன்றார்? ஒன்றரை வயது குழந்தையை இவ்வளவு கொடூரமாக ஒரு தாய் கொல்ல வேண்டிய காரணமும் போலீசாருக்கு புரியவில்லை.. எனவே கிறிஸ்டிக்கு பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வு உள்ளிட்ட ஏதாவது மனநலப் பிரச்சனைகள் இருந்தனவா என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.. முக்கியமாக அதனால், படுக்கையறைக்குள் 3.30 முதல் 4,30 மணி வரை என்ன நடந்தது? என்ற விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

    English Summary

    Why Did Christie Tell Thiruvananthapuram Police “Look Under the Cot, Sir”.. What Happened Inside That Room?