அமலாக்கத்துறை குற்றச்சாட்டை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு? - உதயநிதி ஸ்டாலின்

  • சென்னை: முதலமைச்சர் விஜய் இன்று சட்டமன்றத்தில் பேசியது பல்வேறு விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இந்நிலையில் அவரது பேச்சு குறித்து விமர்சித்திருக்கும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்,

    Advertisement

    அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு? அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

    Advertisement

    இது குறித்து அவர் தனது x பக்கத்தில். "அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு? பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM. எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better!" என்று வலியுறுத்தியுள்ளார்.

    இந்த விஷயத்தை 3 நாட்களுக்கு முன்னரே சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். "வெறும் ரீல்ஸ்க்காக மட்டுமல்லாமல், ரீல்ஸ் கன்டென்டுக்காக இல்லாமல், ரோல் கேமரா ஆக்ஷன் மோடுக்கு வராம, டேக் டைவர்ஷன் செய்யாம, சம்பந்தமே இல்லாம, லாஜிக்கே இல்லாம குட்டி கதைகள் சொல்லாம, மக்களுடைய கேள்விகளுக்கு.. எங்களுடைய கேள்விகளுக்கு முதலமைச்சர் நேரடியாக பதில் சொல்ல வேண்டும்" என்று கேட்டிருந்தார்.

    Advertisement

    உதயநிதி ஸ்டாலின் சொன்னதை போலவே.. இன்று முதலமைச்சர் விஜய் பேசியது ரீல்ஸ் கன்டென்டாகதான் இருந்தது என்று திமுகவினர் விமர்சித்திருக்கின்றனர். மத்திய பாஜக அரசின் ஆயுதம்தான் இந்த அமலாக்கத்துறை. அந்த துறையின் அறிக்கையை கொண்டு வந்து பேசுவது என்பது, பாஜகவின் அஜண்டாதான் என்று உடன்பிறப்புகள் டென்ஷன் ஆகியிருக்கின்றனர்.

    50 ஆண்டுகளுக்கு முந்தைய சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் இருப்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், நேற்று தவெக நிர்வாக பொது மக்கள் மத்தியில் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்டது ஏன்? தவெக ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்கள் ஆகியும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏன் முடிவுக்கு வரவில்லை? இதற்கெல்லாம் பதிலளிக்காமல், "சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவேன்" என்று பேசுவதெல்லாம் எதற்கு? உறுப்பினர்களின் கேள்விக்கு உரிய பதிலை சொல்லாமல் மழுப்பிக்கொண்டிருக்கிறார் என்றும் விமர்சித்திருக்கின்றனர்.

    Advertisement

    உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலுரையை கேட்டால்.. அந்த உரையில் திமுகவை திட்டி வைத்திருக்கிறார் விஜய். திமுகவை ஊழல் கட்சி என்று.. லைவ் ஒளிபரப்பை பார்த்துக்கொண்டிருப்பவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும் என்று விஜய் பேசியிருக்கிறார். சரி அவர் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு திமுக உறுப்பினர்கள் பதிலளிக்க முன் வந்தால்.. சபாநாயகர் அதை தடுத்துவிட்டார். இது எந்த வகையிலான ஜனநாயகம்? என்று திமுகவினர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

    English Summary

    Udhayanidhi Stalin: Chief Minister Vijay's speech in the Assembly today has sparked various debates. In this situation, Opposition Leader Udhayanidhi Stalin, who has criticized his speech