பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் ஸ்டாலின்.. திடீரென உதயநிதி, கனிமொழி, சபரீசனுடன் மீட்டிங்! ஏன்?

  • சென்னை: மு.க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், சபரீசன், கனிமொழி ஆகியோர் ஒன்றாக நேற்று நடத்திய சந்திப்பு பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த சந்திப்பிற்கு பின் பல காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

    Advertisement

    தமிழக சட்டசபை தேர்தல் முடிவிற்கு வந்ததில் இருந்தே அரசியல் அதிரடிகளுக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்துள்ள நிலையில்.. தற்போது திமுக அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு ரெடியாகி வருகிறது.

    Advertisement

    அடுத்தடுத்து அரங்கேறும் அரசியல் நகர்வுகள், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்களா அல்லது கூட்டணிக் கணக்குகளா என்ற விவாதத்தை அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கிளப்பியுள்ளது. இந்த நிலையில், ஆளுங்கட்சியான திமுக எடுத்து வரும் சில அதிரடி நடவடிக்கைகள், புதியதாகக் களம் இறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தை பெரும் யோசனையில் ஆழ்த்தியுள்ளது.

    இந்த சட்டசபை தேர்தலுக்கு பின் பலரும் எதிர்பார்க்காத விஷயம் என்றால்.. அது திமுக கூட்டணி உடைந்ததுதான். முதலில் வெளியில் இருந்து ஆதரவு என்று சென்ற விசிக, பின்னர் தவெக கூட்டணியில் மட்டுமன்றி ஆட்சியில் இணைந்தது. காங்கிரஸ் ஸ்டாலினிடம் சொல்லாமலே தவெக கூட்டணியில் இணைந்தது.

    Advertisement

    அதேபோல் சிபிஎம், சிபிஐ தவெக கூட்டணியில் இணைந்தது. இப்போது மதிமுக கட்சியும் தவெக கூட்டணியில் இணைந்து உள்ளது. இந்த முடிவுகள் எல்லாம் திமுக தரப்பை கடுமையாக அப்செட்டாக்கி உள்ளது. தேர்தல் களத்தில் திமுகவின் 'உதயசூரியன்' சின்னத்தைப் பயன்படுத்தி தங்களின் அரசியல் இருப்பை நிலைநிறுத்திக் கொண்ட கட்சிகள், தங்களின் சுயநலத்திற்காக ஆளுங்கட்சியின் அதிகார நிழலைத் தேடி ஓடியிருப்பது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைப் பலத்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. "ஆட்சியில் இருந்தபோது அனைத்து சலுகைகளையும் அனுபவித்துவிட்டு, தேர்தல் முடிவுகள் மாறியவுடன் கொள்கையாவது, கோட்பாடாவது எனத் தாவிச் சென்றவர்களின் முகமூடிகள் கிழிந்துவிட்டன" என்று மூத்த நிர்வாகிகள் கொந்தளிக்கின்றனர்.

    Advertisement

    மெகா பிளான்

    இப்படிப்பட்ட நிலையில்தான் மு.க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், சபரீசன், கனிமொழி ஆகியோர் ஒன்றாக நேற்று நடத்திய சந்திப்பு பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த சந்திப்பிற்கு பின் பல காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. திமுக ஏதோ ஒரு பெரிய 'மெகா பிளானை' கையில் எடுத்திருப்பதாகத் தெரிகிறது. அது என்ன என்பது புரியாமல் தவெக தலைமை தற்போது தீவிரமாகக் குழம்பிப் போயுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.

    ஒரே விமானத்தில் சென்னை வந்த முக்கியப் புள்ளிகள்

    இந்த பரபரப்பான சூழலுக்கு முக்கியக் காரணம், நேற்று மாலை சென்னை விமான நிலையத்தில் அரங்கேறிய அந்த சுவாரசியமான காட்சிதான். திமுகவின் மிக முக்கியத் தூண்களாகக் கருதப்படும் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன், எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ஆகிய மூவரும் ஒரே விமானத்தில் சென்னை வந்து இறங்கினர்.

    Advertisement

    அரசியல் ரீதியாகவும் குடும்ப ரீதியாகவும் பல்வேறு பயணங்களில் பிஸியாக இருக்கும் இவர்கள் மூவரும், திட்டமிட்டு ஒரே விமானத்தில் பயணித்து சென்னை வந்தடைந்தது சாதாரணமான ஒன்றாகப் பார்க்கப்படவில்லை.

    இந்த பயணத்திற்கு பின் இவர் ஸ்டாலின் வீட்டில் முக்கிய மீட்டிங் ஒன்றை நடத்தி உள்ளனர். டெல்லி அல்லது வெளிநாட்டுப் பயணங்களை முடித்துக் கொண்டு இவர்கள் ஒரே நேரத்தில் சென்னை திரும்பியது, ஏதோ ஒரு முக்கிய அரசியல் நகர்வுக்கான அஸ்திவாரம் என்பதை விமான நிலையப் பிரமுகர்கள் அப்போதே கணித்தனர்.

    செனோடாப் சாலையில் ஒரு மணி நேர ரகசிய மீட்டிங்

    விமான நிலையத்தில் இருந்து வெளியேறிய மூவரும் தனித்தனியாகச் செல்லாமல், நேராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இல்லம் அமைந்திருக்கும் சென்னை செனோடாப் சாலைக்கு விரைந்தனர். அங்கு முதலமைச்சரைச் சந்தித்து உடனடியாக ஒரு அவசர ஆலோசனைக் கூட்டம் தொடங்கினர்.

    Advertisement

    சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த உயர்மட்டக் கூட்டம் நீடித்தது. வழக்கமாக நடைபெறும் அரசியல் ஆலோசனைகளைப் போல இல்லாமல், இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்னென்ன.. என்பது அரசியல் வட்டாரத்தில் உற்றுநோக்கப்பட்டு வருகிறது.

    English Summary

    Why did Kanimozhi, Sabareesan, Udhaynidhi Stalin suddenly meet MK Stalin?