விஜய்யால் மொத்த கட்சியும் காலி.. தவெக உடன் இணைந்த புதிய கட்சி.. எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா விளக்கம்

  • சென்னை: தவெக தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் தனி கட்சியான 'நமது மக்கள் முன்னேற்ற கழகம்' கட்சி மொத்தமாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த கட்சி இணைந்தது எப்படி? என்பது பற்றி அந்த கட்சியின் மாஜி நிறுவன தலைவரும், கம்பம் தொகுதியின் ஜெகநாத் மிஸ்ரா இன்று விளக்கம் அளித்துள்ளார்.

    Advertisement

    தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று அதிமுக உள்பட பிற கட்சிகளில் இருந்து விலகிய நிர்வாகிகள் சென்னை பனையூர் சென்று தவெகவில் இணைந்தனர். பனையூரில் நடந்த விழாவில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகள் தவெக துண்டு அணிந்து நிர்வாகிகளை தங்களின் கட்சிகளில் இணைத்து கொண்டனர்.

    Advertisement

    அந்த வகையில் ஒரு கட்சியே மொத்தமாகவே தவெகவில் இணைக்கப்பட்டுள்ளது. அந்த கட்சியின் பெயர் 'நமது மக்கள் முன்னேற்ற கழகம்' ஆகும் இந்த கட்சி கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இக்கட்சியின் நிறுவன தலைவராக பிஎல்ஏ ஜெகநாத் மிஸ்ரா இருந்த நிலையில் தவெகவில் சேர்ந்து தேனி மாவட்டம் கம்பம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    தற்போது அவரது முயற்சியால் அவர் தொடங்கிய 'நமது மக்கள் முன்னேற்ற கழகம்' தவெகவில் இன்று இணைக்கப்பட்டது. இந்த கட்சியின் நிர்வாகிகள் மொத்தமாக தவெகவில் இணைந்துள்ளனர். இதுபற்றி ஜெகநாத் மிஸ்ரா கூறுகையில், ''இன்று நமது மக்கள் முன்னேற்ற கழகத்தை தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைத்துள்ளார்.

    Advertisement

    நான் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே நமது மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து வெளியேறி தமிழக வெற்றிக் கழகத்திலேயே இணைத்து கொண்டேன். கம்பம் சட்டசபை தொகுதி தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு போட்டியிட்டேன். வென்று சட்டசபை உறுப்பினராகி உள்ளேன். அதன்பின்பு 5 மாநிலங்களில் நமது மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் கூட்டி அங்கு முடிவு எடுக்கப்பட்டது.

    அங்கு எடுத்த முடிவின்படி நமது மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் சுமார் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தில் கட்சியை இணைத்துள்ளார்கள். அதனை தொடர்ந்து மாவட்ட வாரியாக நமது மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொறுப்பாளர்களும், தொண்டர்களும் அங்குள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் முன்னிலையில் இணைய உள்ளனர்'' என்றார்.

    Advertisement

    இந்த ஜெகநாத் மிஸ்ரா தேசிய செட்டியார் பேரவையின் தலைவராக இருந்தார். அதன்பிறகு தான் 'நமது மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கினார்.சட்டசபை தேர்தலுக்கு முன்பாக திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால் கடந்த ஆண்டு இறுதியில் ஜெகநாத் மிஸ்ராவிற்கு தேனி மாவட்டம் கம்பம் சட்டசபை தொகுதியில் போட்டியிட தவெகவில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் தவெகவில சேர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    தவெக சார்பில் கம்பம் சிட்டிங் எம்எல்ஏவாக இருந்த ராமகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்டார். இந்த தேர்தலில் ஜெகநாத் மிஸ்ரா வெற்றி பெற்றார். அவர் மொத்தம் 85,394 ஓட்டுகள் வாங்கினார். சிட்டிங் எம்எல்ஏவாக களமிறங்கி ராமகிருஷ்ணன் 84,643 ஓட்டுகள் வாங்கி 751 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தேர்தலில் 751 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜெகநாத்மிஸ்ரா இன்று தனது கட்சியான 'நமது மக்கள் முன்னேற்ற கழகத்தை' தவெகவில் இணைத்துள்ளார்.

    English Summary

    The 'Namadhu Makkal Munnetra Kazhagam' has fully merged with actor Vijay's party, the Tamilaga Vettri Kazhagam (TVK). Jagannath Mishra, the former founding president of the party (representing the Cumbum constituency), provided an explanation today regarding how this merger took place.