பாக்யராஜ் உடலுக்கு அரசு மரியாதை கிடைத்தது எப்படி? விஜய்க்கு சாந்தனு நன்றி! ஆனா காரணமோ ஸ்டாலின்!

  • சென்னை: மூத்த இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் (73), கடந்த ஜூன் 27, 2026 அன்று மாரடைப்பால் காலமானார். இவரின் உடலுக்கு அரசு தரப்பு சார்பாக மரியாதை அளிக்கப்பட்டது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சாந்தனு செய்திருந்த போஸ்டும் சர்ச்சையானது.

    Advertisement

    'திரைக்கதை மன்னன்' என்று அன்போடு அழைக்கப்படும் மூத்த இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் (73) மறைவு தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. திடீரென்று அவர் கடந்த ஜூன் 27, 2026 அன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு முதல் ஆளாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மரியாதை செய்தனர்.

    Advertisement

    அதை தொடர்ந்து முதல்வர் விஜய் மரியாதை செய்தார். இதையடுத்து சாந்தனு செய்த போஸ்டில், முதல்வர் விஜய், உங்களுக்கான என் நன்றியை 26 அல்லது
    247-க்குள் எப்படி அடக்கிவிட முடியும்?
    மெய்யாகவே என் உயிர் வரை நீடிக்கும் நன்றியிது.
    என் திருமணத்திற்கு தாலி எடுத்து தந்து என் மகிழ்ச்சித் திருநாளைத் துவக்கி வைத்தீர்கள். அதற்கே நானின்னும் நன்றி சொல்லித் தீரவில்லை
    அதற்குள் என் வாழ்வின் துரதிருஷ்ட துக்க தினமான என் தந்தையின் மறைவிற்கு ஆறுதல் சொல்ல வந்த நீங்கள், பதவி சார்ந்த அந்தஸ்தை ஒதுக்கிவிட்டு, பதவிசாக மண்டியிட்டு அம்மாவிடம் ஆறுதல் சொன்னதில் நான் நெகிழ்ந்து விட்டேன்.
    அரசு மரியாதை!
    மரணத்திலும் மரியாதை ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம். பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை என் தந்தைக்கு நீங்கள் தந்ததை
    என் இறுதிக்குள்ளும் நன்றியோடு நினைத்துக் கொள்வேன்.
    இப்போதைக்கு வேறென்ன சொல்ல?
    இதயம் கூப்பிய நன்றி, என்று குறிப்பிட்டு இருந்தார்.

    Advertisement

    சர்ச்சைக்குள்ளான போஸ்ட்

    முதலில் சாந்தனு ஸ்டாலினுக்கு நன்றி சொல்லவில்லை. இன்னொரு பக்கம் அரசு மரியாதை விஜய் உத்தரவால் வந்தது போல குறிப்பிட்டு உள்ளார். பாக்யராஜின் இறுதிச் சடங்கின் போது அவருக்குத் துப்பாக்கிச் சூடு முழங்க முழு அரசு மரியாதை வழங்கப்பட்டது. ஒரு சினிமா பிரபலத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படுவது வழக்கம் என்றாலும், இந்த முறை அதற்குப் பின்னால் மற்றொரு சட்டப்பூர்வக் காரணமும் இருந்தது.

    கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 23 அன்று, அப்போதைய முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, "மூளைச்சாவு அடைந்த அல்லது மரணமடைந்த நபர்களின் உடல் உறுப்புகள் மற்றும் திசுக்கள் தானமாகப் பெறப்பட்டால், அவர்களின் இறுதிச் சடங்குகள் தமிழ்நாடு அரசின் சார்பில் முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படும்" என்று அவர் அரசாணை பிறப்பித்தார்.

    Advertisement

    பல ஆண்டுகளுக்கு முன்பே பாக்யராஜ் அவர்கள் உறுப்பு தானம் செய்ய விருப்பம் தெரிவித்து, அதற்கானப் படிவத்தில் கையெழுத்திட்டிருந்தார். அவரது இந்த இறுதி ஆசையை நிறைவேற்றும் விதமாக, அவர் மறைந்த சில மணி நேரங்களிலேயே அவரின் கண் தானம் செய்யப்பட்டது.

    இதை அடிப்படையிலேயே பாக்கியராஜுக்கு இந்த அரசு மரியாதை வழங்கப்பட்டது. அவரது மறைவு ஒட்டுமொத்தத் திரை உலகையும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. எனினும், அவரது இறுதிப் பயணத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட முழு அரசு மரியாதைக்குப் பின்னால், தமிழ்நாட்டின் மிக முக்கியமானதொரு சமூக நலக் கொள்கையும், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு உத்தரவும் அடங்கியுள்ளது தற்பொழுது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    English Summary

    Why did TVK govt give state respect to K Bhagyaraj? MK Stalin is the reason